Goundamani: டைரக்டர் வி. சேகர் மறைவு! தள்ளாடியபடி வந்த கவுண்டமணி! கலங்க வைத்த காட்சி
சென்னை: கோலிவுட்டில் குடும்ப பாங்கான, எதார்த்தமான படங்களை எடுத்து வெற்றி கண்ட இயக்குநர் வி. சேகர் உடல்நலக்குறைவால் நேற்றிரவு (நவ. 14, 2025) காலமானார். அவரது இழப்பு தமிழ் சினிமாவுக்கு ஒரு பெரிய இழப்பாக பார்க்கப்படுகிறது. அவரது உடலுக்குப் பல திரைத்துறையினர் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில், வி. சேகரின் பல படங்களில் நடித்த நடிகர் கவுண்டமணி இந்த வயதிலும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தியது, அனைவரின் மனதையும் நெகிழ வைத்திருக்கிறது.

எதார்த்த டைரக்டர் வி. சேகர்
வி. சேகர் இயக்கிய அத்தனைப் படங்களும் கூட்டுக் குடும்பத்தின் வலிமை, அவர்களுக்குள் இருக்கும் சிக்கல்கள் என அனைத்தையும் பேசியது. அதேபோல், மிடில் கிளாஸ் குடும்பம், லோயர் மிடில் கிளாஸ் குடும்பத்தின் வாழ்வியலை அச்சு அசலாகவும், எதார்த்தமாகவும் காட்சிப்படுத்தியவர் இவர்தான். இவர் தனது படங்களில் காமெடிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தாலும், போகிற போக்கில் அசால்டாக ஏகப்பட்ட முற்போக்குக் கருத்துக்களையும் பேசியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
உடல்நலக் குறைவும், மறைவும்
சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்த வி. சேகருக்குச் சமீபகாலமாக கடுமையான உடல்நிலை சரியில்லாமல் போனது. இதனால், போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எப்படியாவது மீண்டு வருவார் என்று குடும்பத்தினரும் நம்பியிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்றிரவு அவர் உயிரிழந்தார். அவரது உடல் தற்போது கோடம்பாக்கத்தில் இருக்கும் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
தள்ளாடியபடி வந்த கவுண்டமணி
வி. சேகர் இயக்கத்தில் வடிவேலு, விவேக் ஆகியோர் வரிசையாக நடித்தனர். அவர் சரியான நேரத்தில் அவர்களைப் பயன்படுத்தியதால், அவர்கள் உச்சத்தை நோக்கிச் சென்றனர். வி. சேகருடன் நெருக்கமாகப் பணியாற்றிய நடிகர் கவுண்டமணி, அவரது மறைவுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்.
நெகிழ்ச்சியான காட்சி
வயோதிகம் காரணமாக கருப்பு சட்டை அணிந்தபடி, இரண்டு பேரின் துணையோடு தள்ளாடியபடி வந்த கவுண்டமணி, தனது பழைய நண்பருக்கு அஞ்சலி செலுத்தி உள்ளார். இந்த வயதிலும் மறக்காமல், தன் நண்பரின் இழப்புக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்திய அவரது நட்புப் பாசம் பலரையும் நெகிழ செய்துள்ளது. நடிகர் வடிவேலு இன்னும் அஞ்சலி செலுத்த வரவில்லை என்றாலும், விரைவில் அவரும் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எவர் கிரீன் காமெடி
கவுண்டமணி என்றாலே நியாபகம் வரும் அந்த இயல்பான நடிப்பு, அதிரடியானக் கிண்டல் வசனங்கள் தான். இப்போது இருக்கும் இளம் தலைமுறையினரும் அவரது மீம்ஸ் மற்றும் காமெடி வசனங்களைத்தான் கொண்டாடுகின்றனர்: அதிலும் அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா, மருக்கா மருக்கா சொல்லு, டேய் நீ யாருன்னு எனக்கு தெரியும்.. நான் யாருன்னு உனக்கு தெரியும், ஆல் இன் ஆல் அழகுராஜா கொஞ்சம் பல காமெடிகள் பலராலும் ரசிக்கப்பட்டது. இப்போது சினிமாவில் இருந்து விலகி இருக்கும் கவுண்டமணியின் அந்த இயல்பான நடிப்பு மற்றும் பஞ்ச் வசனங்களை ரசிகர்கள் இன்னமும் மிஸ்செய்கிறார்கள். இன்றுப் பல காமெடி காட்சிகள் கவுண்டமணியின் அசல் நடிப்பைத் தொடுவதில்லை என்பதே உண்மை!
வி. சேகரின் இறுதிச் சடங்குகள் இன்று மாலை அவரது பிறந்த ஊரான திருவண்ணாமலை மாவட்டத்தில் இருக்கும் வேட்டவலம் கிராமத்தில் நடக்கவிருக்கிறது. அதற்கு முன்பு அவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக கருப்பு சட்டை அணிந்து கவுண்டமணி வந்திருந்தார். அவரை இரண்டு பேர் கைத்தாங்கலாக கூட்டிக் கொண்டு வந்திருந்தனர். அவர் இயக்குனர் சேகரின் மனைவிக்கு ஆறுதல் சொல்லிவிட்டு அமைதியாக நின்று கொண்டு இருந்தார். ஆனால் அவருடைய வாய் தன்னிச்சையாக அசைந்து கொண்டு இருந்தது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications