Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஒரு போட்டோ.. அவ்வளவு பிரச்சனை! “அந்த” நடிகர் பற்றி பேசியதால் வந்த வினை.. நடிகை விசித்ரா எமோஷனல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட விசித்ராவிற்காக தனியார் சேனல் ஒன்றில் ஃபேன்ஸ் மீட்டிங் நடத்தப்பட்டிருக்கிறது. அதில் கலந்து கொண்ட விசித்திரா தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் போது சொன்ன தன்னுடைய சோக கதையால் தான் வெளியே வந்த பிறகு அனுபவித்த பிரச்சினைகள் குறித்து வெளிப்படையாக பேசி இருக்கிறார்.

அதே நேரத்தில் சினிமாவை விட்டு விலகி இருந்த விசித்திரா மீண்டும் எப்படி சினிமாவுக்குள் வந்தேன் என்பது பற்றியும், அதற்கு தன்னுடைய தோழி வெளியிட்ட ஒரு புகைப்படம் தான் காரணம் என்றும் கூறியிருக்கிறார்.

Vichitra about the problems she faced after coming out due to her sad story

அந்த வகையில் பெரிய அளவில் சர்ச்சைகளை சந்தித்த சீசன் என்றால் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி தான். இந்த சீசனில் ஆரம்பமான முதல் நாளில் இருந்து போட்டியாளர்களுக்குள் சண்டை சச்சரவுக்கு தான் அளவுக்கு அதிகமாக இருந்தது. அதிலும் இதுவரைக்கும் யாரும் செய்யாத சாதனையை இந்த சீசனில் விசித்திரா செய்திருந்தார். அதாவது வயதில் அதிகமான மூத்த போட்டியாளர்கள் இந்த வீட்டில் ஆரம்பத்திலேயே வெளியேற்றப்படும் நிலையில் விசித்திரா இறுதி கட்டத்தை நெருங்கி இருந்தார்.

ஆனால் நிகழ்ச்சி முடிவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு அவர் வெளியேற்றப்பட்டது அவருடைய ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்து இருந்தது. அதுபோல விசித்திரா பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது தெலுங்கு நடிகர் தனக்கு கொடுத்த பாலியல் தொந்தரவுகள் குறித்தும் வெளிப்படையாக பேசி இருந்தார். இது பெரிய அளவில் விமர்சனத்துக்கு உள்ளானது. இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இப்போது விசித்திராவிற்காக தனியார் சேனல் ஒன்றில் பேன்ஸ் மீட்டிங் நடத்தப்பட்டு இருக்கிறது.

அதில் அந்த பிரச்சனையை பற்றி விசித்ரா பேசியிருக்கிறார். அதில் விசித்ரா பேசுகையில் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது என்னுடைய சோக கதையை சொல்லும்போது நான் சினிமாவை விட்டுக்கு வெளியேறுவதற்கு காரணமாக இருந்த அந்த தெலுங்கு நடிகர் பிரச்சனையை பற்றி பேசுவேன் என்று ஏற்கனவே குடும்பத்தில் சொல்லி இருந்தேன்.

ஆனால் அவர்கள் யாருமே அதை பேசக்கூடாது என்று தான் சொல்லி இருந்தார்கள். ஆனால் நான் பிக் பாஸ் வீட்டில் அவர்களுடைய பேச்சையும் மீறி சொன்னதற்கு காரணம் இதுபோல இனியும் ஒரு பெண்ணுக்கு நடக்கக்கூடாது... நான் 23 வருடங்கள் கழித்து பேசியதால், நாம் ஒருவரிடம் தப்பாக நடந்து கொண்டால் அந்தப் பெண் எத்தனை வருடம் கழித்தாலும் அதற்கு ரெவன்ச் எடுப்பார் என்று எல்லோரும் யோசிக்க வேண்டும் என்று தான் நான் அந்த இடத்தில் பேசினேன்.

தப்பு பண்ணவங்க நிம்மதியாக இருக்கும் போது பாதிக்கப்பட்டவங்க எதுக்காக பயப்படனும் அந்த நேரத்தில் எனக்குன்னு உதவி செய்ய யாரும் இல்லை. ஆனால் இப்போது எனக்கு அதை சொல்வதற்கு ஒரு சரியான இடம் கிடைத்திருக்கிறது என்றுதான் நான் அந்த இடத்தில் சொன்னேன். ஆனால் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்து பிறகு என்னுடைய குடும்பத்தினர்கள் கூட அதை ஏன் நீங்க சொன்னீங்க என்று கேள்வி கேட்டாங்க.

நாங்க உங்களிடம் சொல்ல வேண்டாம் என்று தானே சொல்லி அனுப்புனோம் என்று என்னுடைய நண்பர்களும் உறவினர்களும் தொடர்ச்சியாக கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதுபோல சிலர் அப்படி ஒரு விஷயம் நடக்கவே இல்லை. நானாக கதை சொல்கிறேன் என்றும் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். நான் என்னை கேவலப்படுத்தி கொள்வதற்கு எனக்கு என்ன அறிவு இல்லாமலா இருக்கிறது. அதனால் நான் அதை கண்டுகொள்ளவில்லை என்று விசித்திரா பேசியிருக்கிறார்.

அதோடு தான் சினிமாவை விட்டு வெளியேறி இருந்த நிலையில் மீண்டும் எப்படி சினிமாவுக்குள் வந்தேன் என்பது பற்றியும் பேசி இருக்கிறார். அதில் விசித்திரா கூறுகையில் நானும் என்னுடைய தோழியும் கலா மாஸ்டரிடம் டான்ஸ் கிளாஸுக்கு போகும்போது ஒன்றாக பழகினோம். அதற்குப் பிறகு நாங்கள் ரொம்பவே நெருக்கமாகி விட்டோம். நான் சினிமாவை விட்டு விலகி எந்த சோசியல் மீடியா பக்கங்களிலும் தலை காட்டாமல் தனியாக என்னுடைய குடும்ப வாழ்க்கையில் செட் ஆகியிருந்தேன்.

அந்த நேரத்தில் ஒரு முறை என்னுடைய தோழியை ஒரு கல்யாண வீட்டில் பார்த்தேன். அப்போ அவள் ஒரு போட்டோவை எடுத்து அதை தன்னுடைய facebook பக்கத்தில் போட்டு விட்டாள். அவ்வளவுதான், அதற்குப் பிறகுதான் என்னைப் பற்றி வெளியே பலருக்கும் தெரிய ஆரம்பித்தது. அந்த ஒரு போட்டோவால் பல பிரச்சனைகள் வந்தது. அது வரைக்கும் என்னுடைய வாழ்க்கை அமைதியாக இருந்த நிலையில் மீண்டும் அந்த போட்டோவால் நான் பலருக்கும் நினைவுக்கு வந்ததால் தான் நான் மீண்டும் சினிமாவை தேடி வந்திருக்கிறேன் என்று அந்த பேட்டியில் விசித்திரா பேசியிருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+