நாயகி சீரியல்ல சேலை கட்டி பவ்யமா வந்தவரா இப்படி.. ரசிகர்களின் பெருமூச்சு!
சென்னை: வித்யா பிரதீப் என்றால் யாருக்கும் தெரியாது.. அதுவே நாயகி வித்யா பிரதீப் என்று சொன்னால் சின்னக் குழந்தைக்குக் கூட பளிச்சுன்னு தெரியும்.. அப்படி ஒரு பிரபலம்.
தொலைக்காட்சியைப் பொருத்தவரையில் தினம்தினம் புதுமுகங்கள் அறிமுகம் ஆகிக் கொண்டே இருக்கின்றார்கள். அதில் வெள்ளித்திரையைப் போலவே சின்னத்திரையிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.
அதிலும் சீரியல்களுக்கு பெண் ரசிகர்கள் தான் அதிகம் ,சில சீரியல்களுக்கு ஆண் ரசிகர்களும் இருக்கிறார்கள் காரணம் நாயகிகள் மீது அப்படி ஒரு மோகம் இவர்களுக்கு. இவர்கள் அந்த சீரியலில் வரும் கதாநாயகிகளையே ரொம்பவும் ரசிக்கிறார்களாம்.

வித்யாவை ரசிக்கும் கூட்டம்
இப்படி ஆண் கூட்டத்தை வளைத்துப் பிடித்து வைத்துள்ள நாயகிகளில் ஒருவர் வித்யா பிரதீப். நாயகி சீரியலில் வரும் வித்யா பிரதீப்க்கு ரசிகர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறதாம். இவர் கேரளத்து பைங்கிளி. ஆனால் அழகாக தமிழ் பேசுகிறார். அது மட்டும் இல்ல இவர் ஒரு சயின்டிஸ்ட் அப்புறம் ஒரு டாக்டரும் கூட. இருந்தாலும் இவருக்கு நடிப்பில் தான் ஆர்வம் அதிகமா இருந்துச்சு .அதனால நடிப்பதற்கு வந்திருக்கிறார்.

ரசிகர்கள் மனதில்
மாடல் அழகியாக இருந்து எண்ணற்ற விளம்பரங்களிலும் நடித்து இருக்கிறார். ஏய.ஆர். ரகுமானின் இசை ஆல்பத்தில் நடித்து தான் முதலில் புகழ் பெற்றிருக்கிறார். அதற்கு பிறகு ஜீவனுடன் ஒரு திரைப்படத்தில் நடித்திருக்கிறார். அதன்பிறகு இவர் சைவம் படத்தில் தேன்மொழி கேரக்டரில் சின்ன ரோலில் நடித்து இருந்தாலும் ரசிகர்கள் மனதில் நல்ல ஒரு இடத்தைப் பெற்றிருந்தார்.

அருண் விஜய் படம்
அதுல மட்டும் இல்ல அதுக்கு பிறகு பசங்க2 , ஒண்ணுமே புரியல , அச்சமின்றி, இரவுக்கு ஆயிரம் கண்கள், களரி ,தலைகால் புரியல, அசுரகுலம் ,ஒத்தைக்கு ஒத்த, மாரி 2 போன்ற என நிறையப் படங்களில் தலை காட்டி விட்டார். அருண் விஜய் உடன் தடம் படத்தில் மலர்விழி கேரக்டரில் நடித்திருந்தார். இது ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அதில் போலீஸ் ஆபிசராக இவர் நடித்திருப்பது செமையாக இருந்தது.

நல்லா உருட்டி உருட்டி
அவருடைய முட்ட கண்ண உருட்டி கொண்டு அருண்விஜய் மொறச்சி பாக்கிறது வேற லெவல்ல இருக்கும். வெள்ளித்திரையில் கலக்கிக்கொண்டு இருக்கும் போதுதான் அவருக்கு சின்னத்திரையில் ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அது நாயகி சீரியலில் கதாநாயகியாக. முதலில் இந்த சீரியலில் ஆனந்தி நடித்துக்கொண்டிருந்தார். பிறகு அவருக்கு பதிலாக இவர் நடித்தார். இது கூடுதலாக இவருக்கு ரசிகர்களை ஏற்படுத்தி இருக்கிறது.

காத்திருக்கிறார்
வெள்ளிதிரையை விட இவருக்கு சின்னத்திரையில்தான் ரசிகர்கள் பட்டாளம் அதிகமா இருக்காங்க. சின்னத்திரையில் இப்போது நாயகியாக ஜொலித்தாலும் சீரியல் படப்பிடிப்பு இல்லாத இந்த லாக்டோன் டைம்ல இவருக்கு வீட்டில் பொழுது போகலையாம். எப்பதான் சூட்டிங் ஆரம்பிப்பாங்க என்று ரொம்ப ஆர்வமா எதிர் பார்த்திட்டு இருந்தாங்க.

சேலையில் ஜாலி
அதனால வீட்டிலேயே போட்டோ ஷூட் நடத்தி அதை இணையதளத்தில் அப்லோட் பண்ணிட்டு வருகிறார். இவர் அப்லோட் பண்ணும் போட்டோஸ்கள் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. அது மட்டுமல்ல புது படங்களுக்காக கொஞ்சம் கவர்ச்சியாகவும் மாறி விட்டாராம். இவருடைய கவர்ச்சிக்கு அளவே இல்லையா என்று ரசிகர்கள் பெருமூச்சு விடுகிறார்கள். இருந்தாலும் பார்த்து ரசித்து ஜாலியாகத்தான் போய்க் கொண்டிருக்கிறார்கள்.. !
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications