கண்ணீர் விட்ட நேரம், கடவுள் போல கை கொடுத்த அனிருத்.. வாழ்க்கையில் நடந்த துரோகம்! விக்னேஷ் சிவன் எமோஷனல்
சென்னை: இயக்குநர் விக்னேஷ் சிவன் தமிழ் சினிமாவில் வெற்றியின் பின்னால் இருக்கும் உண்மையான வாழ்க்கை போராட்டங்களை மனதை தொடும் வகையில் பகிர்ந்துள்ளார். சமீபத்தில் அவர் பேசிய பேச்சு, அவருடைய படத்தின் ப்ரமோஷனுக்காக பேசியது போல இல்லை, வாழ்க்கையின் ஏற்றத் தாழ்வுகளை நேராக சொன்ன ஒரு உணர்ச்சி கதையாக அமைந்தது.

அனிருத் பற்றி எமோஷனல்
தனது ஆரம்ப காலத்தை நினைவுகூர்ந்த விக்னேஷ் சிவன், அனிருத் ரவிச்சந்தர் பற்றி பேசும்போது கண்கலங்கினார். "ஒரு படத்திற்காக சூட்டிங் போகும்போது என்னிடம் பஸ்ஸுக்கு ₹250 தான் இருந்தது... என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தேன். அந்த நேரத்தில், என்னிடம் சொல்லாமல் என் பையில் ₹50,000 வைத்து உதவி செய்தார் அனிருத்..." அந்த தருணத்தை நினைத்து, "அது ஒரு பண உதவி இல்லை... என் கனவை காப்பாற்றிய உதவி". அனிருத் எனக்காக செய்த விஷயம் நிஜத்தில் அவருக்கே நினைவு இருக்கா என்று கூட தெரியவில்லை. ஆனால் என்னால் அந்த விஷயத்தை எல்லாம் மறக்க முடியாது என்று உருக்கமாக விக்னேஷ் சிவன் பேசினார்.
அஜித் படம்
அஜித் குமார் நடித்த ஒரு படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தும், பிறகு அது கடைசி நேரத்தில் நழுவிப் போன அனுபவத்தை அவர் மிகுந்த வேதனையுடன் பகிர்ந்தார். "நிச்சயிக்கப்பட்ட திருமணம் தாலி கட்டும் நேரத்தில் நின்று போனால் அந்த பெண்ணுக்கு எவ்வளவு வலி இருக்கும்... அதே வலி தான் எனக்கும் இருந்தது". அப்படிப்பட்ட பெண்ணுக்கு எப்படி சீக்கிரத்தில் கல்யாணம் நடக்காதோ அதே போல என்னுடைய வாழ்க்கையிலும் துயரங்கள் வந்தது. அந்த நேரத்தில் பலர் இனி பெரிய படத்திற்கு ஆசைப்படாதே சின்ன படமாக செய் என்றெல்லாம் அட்வைஸ் செய்தார்கள். சிலர் பேசிய வார்த்தைகள் எல்லாம் கேட்கவே முடியவில்லை, அந்த அளவிற்கு இருந்தது என்று அவர் கூறிய போது, அந்த அனுபவத்தின் ஆழம் அனைவருக்கும் புரிந்தது.
நயன்தாரா
தனது வாழ்க்கையில் முக்கியமான ஆதரவாக இருந்தவர் நயன்தாரா என்றும் அவர் தெரிவித்துள்ளார். கஷ்டமான தருணங்களில் மனதளவில் தாங்கி நிற்க வைத்ததும், தன்னம்பிக்கையை மீண்டும் கொடுத்ததும் நயன்தாராதான் என்று அவர் உணர்ச்சியுடன் கூறினார்.
மதிப்பில்லாதவன் போல உணர்ந்த நேரம்
சினிமா துறையில் தனது ஆரம்ப காலங்களைப் பற்றி பேசும்போது, அவர் மிகவும் திறந்த மனதுடன் இருந்தார். வாய்ப்புக்காக காத்திருப்பது, பணத்தட்டுப்பாடு, சிலர் காட்டிய அக்கறையின்மை... இவை அனைத்தும் அவரை பாதித்ததாக கூறினார். "சில நேரங்களில் நான் மதிப்பில்லாதவன் போல உணர்ந்தேன்" என்று உருக்கமாக பேசினார்.
மீண்டும் எழுந்த மனிதன்
இந்த எல்லா சவால்களையும் கடந்து, இன்று மீண்டும் தன்னம்பிக்கையுடன் நிற்கும் நிலையில் உள்ளார் விக்னேஷ் சிவன். அவரது பேச்சு ஒரு விஷயத்தை தெளிவாக சொல்லுகிறது, "நம்பிக்கை இருந்தால் எந்த நிலைமையிலிருந்தும் மீண்டு வர முடியும்."
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்?












Click it and Unblock the Notifications