நயன்தாராவுக்கு 41வது பிறந்த நாள்! 9 கோடிக்கு பரிசு கொடுத்த விக்னேஷ் சிவன்! வாழ்த்து பதிவில் தனுஷ் டயலாக்!
சென்னை: நடிகை நயன்தாராவின் 41வது பிறந்தநாளுக்கு பல திரை பிரபலங்கள் நண்பர்கள் வாழ்த்து சொல்லிக் கொண்டிருந்தனர். அதை நேரத்தில் நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன் நயன்தாராவிற்கு விலை உயர்ந்த சொகுசு கார் ஒன்றை பரிசாக கொடுத்திருக்கிறார். அதோடு நயன்தாராவை பற்றி நீண்ட ஒரு பதிவையும் தன்னுடைய சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருக்கிறார். இதுதான் எப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஏற்கனவே நயன்தாராவிற்கும் தனுஷுக்கும் பிரச்சனை இருக்கும் நிலையில் இப்போது தனுஷை அட்டாக் செய்யும் வகையில் சில வார்த்தைகளை தன்னுடைய மனைவியின் பிறந்தநாள் வாழ்த்து செய்தியில் விக்னேஷ் சிவன் பகிர்ந்து இருக்கிறார்.

நயன்தாராவின் பிறந்தநாள்
தமிழ் சினிமாவில் டாப் கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கும் நயன்தாராவிற்கு வயதே ஆகாதா? இவங்க மட்டும் எப்பவும் இப்படியே இருக்கிறாரே என்று பலர் கமெண்ட் கொடுத்து வந்தாலும் நயன்தாராவிற்கு இப்போது 41 வயதாகி விட்டது. வயது வெறும் நம்பர் என்று பலரும் சொல்லிக் கொண்டிருப்பார்கள், அதை நயன்தாராவும் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்.
நயன்தாராவின் அறிக்கை
அதே நேரத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான நானும் ரவுடிதான் படத்தை விக்னேஷ் சிவன் இயக்கிய போது நயன்தாராவிற்கும் அவருக்கும் அறிமுகம் ஏற்பட்டு பிறகு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய திருமணம் கடந்து 2022 ஆம் ஆண்டு பிரமாண்டமாக நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு தொடர்ந்து சினிமாவில் நடித்து வரும் நயன்தாரா கடந்த சில மாதங்களுக்கு முன்பு தன்னுடைய திருமண ஆவணப்படத்தில் நானும் ரவுடிதான் பட சூட்டிங்கின் போது தானும் விக்னேஷ் சிவனும் காதலிப்பதற்கு காரணமாக இருந்த சில வீடியோக்களை தன்னுடைய ஆவணப்படத்தில் பயன்படுத்த தனுஷ் தரப்பினரிடம் அனுமதி கேட்டு இருந்த நிலையில் அதற்கு தனுஷ் தரப்பு மறுத்துவிட்டதாக ஒரு நீண்ட அறிக்கையை வெளியிட்டு இருந்தார்.
மூன்று வினாடி காட்சியை தன்னுடைய ஆவணப்படத்தில் பயன்படுத்தியதற்காக தனுஷ் பத்து கோடி கேட்டதாக நயன்தாரா அறிக்கை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையின் ஆரம்பத்திலேயே தனுஷ் எப்போதும் சொல்லும் "ஓம் நமச்சிவாய" என்ற வார்த்தையை பயன்படுத்தி தான் தொடங்கி இருந்தார். இந்த வழக்கு இப்போது நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கிறது.
தனுஷின் டயலாக்
இந்த நிலையில் நேற்று நயன்தாராவின் பிறந்தநாளுக்காக விக்னேஷ் சிவன் ஒன்பது கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு காரை அவருக்கு பரிசாக கொடுத்து இருக்கிறார். அதை பற்றி விக்னேஷ் சிவன் வெளியிட்ட போஸ்டில் எண்ணம் போல் வாழ்க்கை என்ற வார்த்தையை வைத்து தொடங்கி இருக்கிறார். இந்த வார்த்தையை தனுஷ் எல்லா மேடைகளிலும் அடிக்கடி சொல்லும் வார்த்தை அதனால் விக்னேஷ் சிவனை தனுஷின் ரசிகர்கள் திட்டி கமெண்ட் போட்டு வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications