ஒரே இடத்தில் முதல்வர் விஜய் மற்றும் மகன்.. ஜேசன் சஞ்சய் கொடுத்த ரியாக்ஷன்.. முடிவோட தான் இருக்காரு போல

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'சிக்மா' படம் இன்னும் 2 நாட்களில் திரையரங்குகளுக்கு வரப்போகிறது. அக்டோபர் 2-ம் தேதி வெளியாகும் இந்தப் படத்துக்கு ஏற்கனவே யு/ஏ சான்றிதழ் கிடைத்துவிட்டது. இதனால் இப்போது படக்குழுவினர் இறுதிக்கட்ட பிரமோஷனில் பிஸியாக இருக்கிறார்கள். அதே நேரத்தில் இன்று முதல்வர் விஜய் வரும் அதே இடத்தில் மகன் ஜோசனும் இருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

விஜய்யின் மகன் என்ற அடையாளத்தைத் தாண்டி, தன்னுடைய முதல் படத்தின் மூலம் இயக்குநராக தனி அடையாளத்தை உருவாக்க வேண்டும் என்பதில் ஜேசன் சஞ்சயும் கவனமாக இருக்கிறார். சமீபத்தில் கூட, தன்னுடைய படத்தின் ப்ரோமோஷனில் விஜய் கலந்து கொள்ள மாட்டார் என்றும், விளம்பரம் முழுக்க படத்தைப் பற்றியே இருக்க வேண்டும் என்று தான் விரும்புவதாகவும் ஜேசன் கூறியிருந்தார். விஜய் முதலமைச்சராக இருப்பதால் அவருக்கு நிறைய பொறுப்புகள் இருப்பதாகவும், ஆனால் படம் வெளியாகும் நாளுக்காக அவர் ஆர்வமாக காத்திருப்பதாகவும் ஜேசன் தெரிவித்திருந்தார்.

Vijay

விமான நிலையத்தில் ஜேசன்

இந்த நிலையில், சிக்மா படத்தின் ப்ரோமோஷனுக்காக கொச்சி சென்றிருந்த ஜேசன் சஞ்சய், நிகழ்ச்சி முடித்துவிட்டு சென்னை திரும்பியிருக்கிறார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் அவரை பார்த்ததும், சிக்மா படம் வெற்றி பெற வாழ்த்துகள் என்று கூறியிருக்கிறார்கள். ஆனால் ஜேசன் அங்கு நின்று பேட்டி கொடுக்காமல், வேகமாக நடந்து சென்றிருக்கிறார்.

அப்போது செய்தியாளர்கள் சொன்ன வாழ்த்துக்கு தம்ஸ்அப் மூலம் பதில் தெரிவித்துவிட்டு, நேராக காரில் ஏறி அங்கிருந்து கிளம்பிவிட்டார். இந்த காட்சிதான் தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்றிருக்கிறது. இதில் இன்னொரு சுவாரஸ்யமான விஷயமும் இருக்கிறது.

அப்பாவும் மகனும் ஒரே இடத்தில்

இதே விமான நிலையத்துக்கு இன்று விஜய்யும் வர இருப்பதாக கூறப்படும் நிலையில், அதற்கு முன்பாகவே ஜேசன் சஞ்சய் தனியாக வந்து சென்ற காட்சிதான் இப்போது வைரலாகி வருகிறது. அதனால், "அப்பாவும் மகனும் ஒரே இடத்துக்கு வருகிறார்கள்... ஆனால் ஜேசன் தனியாக வந்து சென்றுவிட்டாரே" என்று ரசிகர்கள் அந்த வீடியோவை வைத்து பல்வேறு விதமாக பேசி வருகின்றனர். ஆனால் இதை வைத்து இருவருக்கும் இடையில் ஏதாவது பிரச்சனை என்று முடிவு செய்ய முடியாது.

Vijay

ஏற்கனவே சிக்மா பட பிரமோஷனில் விஜய் கலந்து கொள்ளவில்லை என்பதற்கான காரணத்தை ஜேசனே தெளிவாக சொல்லியிருக்கிறார். சிக்மா படத்தை பொறுத்தவரை, சந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் இந்தப் படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. அக்டோபர் 2-ம் தேதி படம் வெளியாகிறது. அதனால் இப்போது ஜேசனுக்கு முன்னால் இருக்கிற ஒரே விஷயம், படம் எப்படி இருக்கிறது என்பதுதான்.

ஜேசன் ரியாக்ஷன்

விமான நிலையத்தில் செய்தியாளர்களை பார்த்ததும் நீண்ட நேரம் நிற்காமல், தம்ஸ்அப் மூலம் மட்டும் வாழ்த்தை ஏற்றுக்கொண்டு கிளம்பிய அந்த சில நொடிகள்தான் இப்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி இருக்கிறது. ஏற்கனவே முதல்வர் விஜய்யும் செய்தியாளர்களை கண்டாலே அந்த இடத்தில் நிற்காமல் வேகமாக ஓடிவிடுவார், அதேபோல மகனும் இருக்கிறாரே என்று சிலர் கலாய்ப்பதையும் பார்க்க முடிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+