என் நிலைமை என்ன ஆகுமோ? ஜாதி அரசியல் இருக்கு! ஒன்றுமே புரியவில்லை, மனம் திறந்த விஜய் ஆண்டனி!
சென்னை: இசையமைப்பாளராகத் தனது கலைப் பயணத்தைத் தொடங்கி, நடிகராகவும், தயாரிப்பாளராகவும் உயர்ந்து, மக்களின் மனதில் தனி இடத்தைப் பிடித்தவர் விஜய் ஆண்டனி. தன்னம்பிக்கை, எளிமை, மற்றும் வாழ்க்கைப் போராட்டங்களைக் கடந்து வந்த மன உறுதி என, ரசிகர்களுக்கு எப்போதும் ஒரு உத்வேகத்தைத் தருபவர். தற்போது, அவர் நடிப்பில் உருவாகியுள்ள அவரது 25-வது படமான சக்தித் திருமகன் வருகின்ற 19-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் முன்னோட்ட நிகழ்வில், தனது வாழ்க்கை மற்றும் திரைப்படம் குறித்துப் பேசிய விஜய் ஆண்டனி, பல சுவாரசியமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

வாழ்க்கை போராட்டத்தின் வெற்றியாளர்
விஜய் ஆண்டனியின் வாழ்க்கை, பல போராட்டங்களைக் கடந்து வந்த ஒரு வெற்றிக் கதை. இளம் வயதிலேயே தந்தையை இழந்த அவர், தனது அம்மாவின் அரவணைப்பில் வளர்ந்தார். ஒரு இசையமைப்பாளராகத் திரைத்துறைக்குள் நுழைந்த பிறகும்கூட, அவர் தனது திறமையால் மட்டுமே தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். பிச்சைக்காரன், நான், சலீம் போன்ற படங்களில் அவர் ஏற்றுக்கொண்ட வித்தியாசமான கதாபாத்திரங்கள், ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தன.
கடந்த ஆண்டு, விஜய் ஆண்டனியின் மகள் மீராவின் மறைவு, அவரை மட்டுமல்லாமல், ஒட்டுமொத்தத் திரையுலகையும் சோகத்தில் ஆழ்த்தியது. இந்தத் துயரத்திலிருந்து மீண்டு வந்த பிறகு, அவர் ஒரு பேட்டியில், "வாழ்க்கை கொடுத்த காயங்கள் என்னை இன்னும் வலிமையாக்கி இருக்கின்றன. என் சினிமா பயணத்தை நான் தொடர்ந்து செய்வேன்" என்று கூறி, தனது மன உறுதியை வெளிப்படுத்தினார்.
அருண் பிரபுவின் அருவி தந்த பாடம்
சக்தித் திருமகன் படத்தின் வெளியீட்டு நிகழ்வில், இயக்குநர் அருண் பிரபுவுடனான தனது அனுபவத்தைப் பற்றி விஜய் ஆண்டனி மனம் திறந்து பேசினார். "நான் அருண் பிரபுவுடன் வேலை செய்வேன் என தெரியாமலேயே, நிறைய இடங்களில் எனக்குப் பிடித்த படம் அருவி என்று சொல்லியிருக்கேன். ஒருநாள் அவரிடமிருந்து எனக்கு ஒரு மெசேஜ் வந்தது. விஜய் தேவரகொண்டாவுக்கு அனுப்ப வேண்டிய மெசேஜை தவறுதலாக எனக்கு அனுப்பிவிட்டாரோ என நினைத்தேன்" என்று நகைச்சுவையுடன் கூறினார்.
"கதை சொல்வதற்கு முன்பே அவருடன் படம் பண்ண வேண்டும் என முடிவெடுத்துவிட்டேன். ஆனால், கதை கேட்ட பிறகுதான் இது பெரிய பட்ஜெட் படம் எனத் தெரிந்தது. நான் மீடியம் பட்ஜெட் படம் பண்ணியே பழகிவிட்டேன். இருந்தாலும் அருணுக்கு என்னால் நோ சொல்ல முடியவில்லை. முதல் பாதி கதை கேட்டேன், பயங்கரமா இருந்துச்சு. இரண்டாவது பாதி முழுக்க முழுக்க அரசியல் என்பதால் எனக்கு ஒன்றுமே புரியவில்லை. அரசியல் பொறுத்தவரை எனக்கு பெரிய அறிவு கிடையாது. இருந்தாலும், அருவி படத்தில் மக்களுக்கான அரசியலை அருண் பேசியிருந்ததால், நானும் இந்தப் படத்தில் நடிக்க ஒத்துக் கொண்டேன்" என்றார்.
சக்தித் திருமகன் அரசியல்
படத்தைப் பார்த்த அவரது நண்பர்கள், "அருண் பிரபு படத்தில் எந்தக் குறியீடுகளையும் வைக்கவில்லை, நேரடியாகவே அரசியல் பேசியிருக்கிறார். உன் நிலைமை என்ன ஆகுமோ எனத் தெரியவில்லை" என்று சொன்னதாக விஜய் ஆண்டனி கூறினார். ஆனாலும், "என்னதான் இருந்தாலும், இது ஒரு கலை வடிவம். அதனால் படமாக மட்டுமே பார்ப்பார்கள்" என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
படத்தின் நியோ பொலிட்டிக்கல் ஜானர் குறித்துக் கேட்டபோது, "இதுவரைக்கும் நீங்க பார்த்த அரசியல் படங்களில் ரொம்பச் செயற்கைத்தனம் இருக்கும். ஆனால், இந்தப் படம் ரொம்ப எதார்த்தமாக இருக்கும். மக்களின் அரசியலை பேசும்" என்றார். மேலும், "எனக்குத் தெரிஞ்ச அரசியல், ஏழை, பணக்காரன். அவங்களுக்குள் இருக்கும் பெரிய வேறுபாட்டை என்னுடைய படங்களில் தொடர்ச்சியாகப் பேசி வருகிறேன். ஆனால், சாதி, மத அரசியல் எனக்குத் தெரியாது. அருண் பிரபு படங்களிலும் என்னுடைய அரசியலை மறைமுகமாகச் சொல்வது போல் இருக்கும். அதோடு மக்கள் சார்ந்த பிரச்சனைகளைத் தைரியமாக எதார்த்தமாகப் பேசுவதால், அவர் நியோ பொலிட்டிக்கல் எனச் சொல்கிறார்" என்றும் கூறினார்.
இளைஞர்களுக்கு புதிய பாதை
விஜய் ஆண்டனி தனது நிறுவனமான விஜய் ஆண்டனி பிலிம்ஸ் கார்பரேஷன் பிரைவேட் லிமிடெட்-ஐ 2027-ஆம் ஆண்டு முதல் பப்ளிக் லிமிடெட் கம்பெனி-ஆக மாற்ற உள்ளதாக அறிவித்தார். இது, இளைஞர்களுக்குத் திரைப்படம் தயாரிக்க அதிக வாய்ப்பு கொடுப்பதற்காக எடுக்கப்பட்ட ஒரு பெரிய முயற்சி என்றும் அவர் கூறினார். தனது 25-வது படத்திலேயே இப்படி ஒரு முடிவை எடுத்திருப்பது, அவரது பரந்த மனப்பான்மையைக் காட்டுகிறது. சக்தித் திருமகன் திரைப்படம், விஜய் ஆண்டனியின் கலைப் பயணத்தில் ஒரு மைல்கல்லாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications