விஜய் ஆண்டனி எங்க வீட்டு ஆளு தான்.. அவருக்கு பெயர் வைத்தது என் புருஷன்! ஆனால், சோபா சந்திரசேகர் நெகிழ்ச்சி
சென்னை: இசையமைப்பாளராக அறிமுகமாகி, நடிகராகவும், தயாரிப்பாளராகவும் உயர்ந்து, மக்களின் மனதில் தனி இடத்தைப் பிடித்தவர் விஜய் ஆண்டனி. தற்போது, அவர் நடிப்பில் உருவாகியுள்ள அவரது 25-வது படமான சக்தித் திருமகன் வருகின்ற 19-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் முன்னோட்ட நிகழ்வில் கலந்துகொண்ட இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரின் மனைவி மற்றும் பின்னணிப் பாடகி ஷோபா சந்திரசேகர், விஜய் ஆண்டனியின் பயணத்தைப் பற்றி மனம் திறந்து பேசியுள்ளார்.

வாழ்க்கை போராட்டம்
விஜய் ஆண்டனி தனது வாழ்க்கையில் பல போராட்டங்களைக் கடந்து வந்துள்ளார். இளம் வயதிலேயே தந்தையை இழந்த அவர், தனது அம்மாவின் ஆதரவில் வளர்ந்தார். ஒரு இசையமைப்பாளராகத் திரைத்துறையில் நுழைய, அவர் பல கடினமான முயற்சிகளை மேற்கொண்டார். ஆனாலும், அவர் தன்னுடைய கடின உழைப்பாலும், விடாமுயற்சியாலும் நான், சலீம், பிச்சைக்காரன் போன்ற படங்களில் நடித்து, ரசிகர்களின் பேராதரவைப் பெற்றார்.
கடந்த ஆண்டு, விஜய் ஆண்டனியின் மகள் மீராவின் மறைவு, ஒட்டுமொத்தத் திரையுலகையும் சோகத்தில் ஆழ்த்தியது. இந்தத் துயரத்திலிருந்து மீண்டு வர, விஜய் ஆண்டனிக்குக் கடுமையான மனப்போராட்டம் ஏற்பட்டது. ஆனாலும், அவர் தனது குடும்பத்தினரின் ஆதரவுடனும், தன்னம்பிக்கையுடனும், மீண்டும் தன்னுடைய பணியில் கவனம் செலுத்தி, வெற்றிப் பாதையில் தொடர்ந்து பயணிக்கிறார். "வாழ்க்கை கொடுத்த காயங்கள் என்னை இன்னும் வலிமையாக்கி இருக்கிறது. என் சினிமா பயணத்தை நான் தொடர்ந்து செய்வேன்" என்று பேட்டி ஒன்றில் அவர் கூறியிருந்தார்.
சினிமா பயணம்
சக்தித் திருமகன் படத்தின் வெளியீட்டு நிகழ்வில் பேசிய ஷோபா சந்திரசேகர், விஜய் ஆண்டனியின் பயணத்தைப் பற்றி நெகிழ்ச்சியாகப் பேசியுள்ளார். "விஜய் ஆண்டனி எங்கள் குடும்பத்தில் ஒருவர். முதலில் அவரை என் கணவர் எஸ்.ஏ.சந்திரசேகர், சுக்ரன் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகம் செய்தார். அப்போது, அவர் வேறு ஒரு பெயருடன் வந்தார். ஆனால், என் கணவர் தான் அவரது பெயரை விஜய் ஆண்டனி என்று மாற்றினார். அவர் ஒரு ராசியான மனிதர் என்பதால், விஜய் ஆண்டனி இப்போது நன்றாக இருக்கிறார். நடிகராக 25 படங்கள் நடித்துவிட்டார். அவர் தேர்வு செய்யும் கதைகள் எனக்கு மிகவும் பிடிக்கும். அவை புதிதாகவும், வித்தியாசமாகவும் இருக்கும். அவரும் ஒரு வித்தியாசமான மனிதர். அவர் மென்மேலும் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்கள்" என்று ஷோபா சந்திரசேகர் கூறினார்.
விஜய் ஆண்டனியின் படங்களான நான், பிச்சைக்காரன், சலீம் ஆகியவை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன. மேலும், அவர் இசையமைத்த பாடல்கள் இன்றும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளன. ஒரு இசையமைப்பாளராகத் தொடங்கி, இன்று 25 படங்களை நிறைவு செய்த நடிகராக உயர்ந்துள்ள விஜய் ஆண்டனியின் பயணம், பல புதிய கலைஞர்களுக்கு ஒரு பெரிய ஊக்கத்தைக் கொடுக்கிறது. சமீப காலமாக அவர் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை ஆனாலும் தனக்கு மக்கள் ஆதரவு கொடுப்பார்கள் தன்னுடைய படம் வெற்றி அடையும் என்ற நம்பிக்கையோடு அவர் மீண்டும் மீண்டும் உழைத்துக் கொண்டிருக்கிறார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications