மாநாட்டில் விஜய் பேசியது ஸ்கிரிப்ட்டெட்! நிஜ கேரக்டர் இது இல்ல! என்கிட்ட அப்படி கேட்டாரு! இயக்குனர் ராஜகுமாரன் ஓபன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் விஜய் சமீபத்தில் மதுரையில் நடத்திய தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு, தமிழ்நாட்டின் அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. லட்சக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் "சிங்கம் வேட்டைக்கு மட்டும்தான் வெளிய வரும், வேடிக்கை பார்க்க வராது" என்று அவர் பேசிய வசனங்கள், சமூக வலைத்தளங்களில் வைரலாகின. இயக்குனர் ராஜகுமாரன் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்டார் அப்போது நடிகர் விஜய் மதுரை மாநாட்டில் கலந்து கொண்டு பேசியது பற்றி நாம் தன்னுடைய கருத்தை தெரிவித்து இருந்தார் அதில் விஜய் மிகவும் அமைதியானவர் அவர் இப்போ மேடையில் பேசியது ரொம்பவும் பிரிப்பர் ஆகி வந்து பேசியதுதான் என்று கூறியிருக்கிறார்.

Vijay Rajakumaran

ராஜகுமாரனின் நெகிழ்ச்சியான நினைவுகள்

இந்த மாநாடு குறித்து, நடிகரும் இயக்குனருமான ராஜகுமாரன் மனம் திறந்து சில விஷயங்களைப் பகிர்ந்துள்ளார். 'பூவே உனக்காக' திரைப்படத்தில் உதவி இயக்குனராக ராஜகுமாரன் பணிபுரிந்தபோது, அந்தப் படத்தின் கதாநாயகனாக விஜய் நடித்திருந்தார். அப்போதுதான் அவர்களுக்குள் ஒரு நட்பு மலர்ந்தது. ராஜகுமாரன் அந்தக் காலகட்டத்தை நினைவுகூர்ந்து பேசுகையில், "விஜய் ரொம்பவும் அமைதியானவர். அவரிடம் எப்போதும் ஒரு பெரிய அமைதி இருந்து கொண்டே இருக்கும்" என்று குறிப்பிட்டார்.

பூவே உனக்காக விஜய்யின் திருப்புமுனை

'பூவே உனக்காக' படத்திற்கு முன்பு, விஜய் நடித்த 'விஷ்ணு', 'ரசிகன்' போன்ற படங்கள், பெரும்பாலும் ஆண் ரசிகர்களை மட்டுமே கவர்ந்தன. அந்தப் படங்களில் இருந்த ரொமான்ஸ் காட்சிகள் காரணமாக, குடும்ப ரசிகர்களும், பெண் ரசிகர்களும் திரையரங்குகளுக்கு அதிகம் வரவில்லை. 'பூவே உனக்காக' திரைப்படம் தான் விஜய்யின் சினிமா வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது. சொல்லப்படாத அழகான காதல், அதன் வலி எனப் புதுமையான கதையுடன் வந்த இந்தப் படம், குடும்ப ரசிகர்களையும், பெண் ரசிகர்களையும் பெருமளவில் ஈர்த்தது. இந்த ஒரு படம் தான் விஜய்யின் சினிமா வாழ்க்கையே மாற்றியது என்று ராஜகுமாரன் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

தெறி கெட்டப்பின் ரகசியம்

'பூவே உனக்காக' படத்திற்குப் பிறகு, ராஜகுமாரன் 'சூரியவம்சம்' படத்தை இயக்கி வெற்றி பெற்றார். அதன் பிறகு, விஜய்யிடம் ஒரு புதிய கதை சொல்லச் சென்றபோது, அவர் ஒரு முறுக்கு மீசையுடன் இருப்பது போன்ற படத்தை வரைந்து வைத்திருந்தாராம். அதைப் பார்த்த விஜய், "பார்த்து சொல்கிறேன்" என்று மட்டும் சொல்லிவிட்டு அமைதியாகச் சென்றுவிட்டாராம்.

தெறி திரைப்படத்தில்

"அப்போது விஜய் எதுவும் சொல்லவில்லை. ஆனால், பல வருடங்கள் கழித்து, 'தெறி' படத்தில் அதே கெட்டப்பில் விஜய் தோன்றினார். அந்த கெட்டப்பை நான் 'சூரியவம்சம்' நாட்களிலேயே அவருக்குக் கொண்டு சென்றேன். அதைப் பார்த்ததும் அவர் மனதுக்குள் சிரித்து இருப்பார். ஆனால், வெளியே காட்டிக் கொள்ளவில்லை" என்று ராஜகுமாரன் ஒரு சுவாரசியமான ரகசியத்தை உடைத்தார்.

விஜய்யின் தயக்கம்:

ராஜகுமாரன் இயக்கத்தில் வெளியான மற்றொரு வெற்றிப் படமான 'நீ வருவாய் என' படத்தின் கதையையும் முதலில் விஜய்யிடம் தான் சொன்னாராம். கதை விஜய்க்கு மிகவும் பிடித்திருந்தாலும், படப்பிடிப்புத் தேதி காரணமாக அவரால் அதில் நடிக்க முடியாமல் போனதாம். விஜய்க்குப் பிறகு, அதே கதையை அஜித்திடம் ராஜகுமாரன் சொல்ல, அஜித் உடனடியாக அதில் நடிக்க ஒப்புக்கொண்டு, படத்தை வெற்றிகரமாக முடித்துக் கொடுத்தார்.

விஜய்யின் பாராட்டு

படம் வெளியாகி சில வருடங்கள் கழித்து, விஜய் ராஜகுமாரனைப் பார்க்கும்போது, "நீங்க என்கிட்ட கதை ஒரு மாதிரி சொன்னீங்க. ஆனால், படத்தை வேற மாதிரி அழகா எடுத்து வச்சிருக்கீங்க" என்று சிரித்துக்கொண்டே கூறினாராம். அதற்கு ராஜகுமாரன், "நான் உங்களிடம் கதை சொல்லும்போது ஒரு மனநிலையில் இருந்திருப்பேன். அதன் பிறகு பலருடைய விருப்பத்தையும் கேட்டு கதையில் சில மாற்றங்கள் செய்தேன்" என்று பதிலளித்தாராம்.

மாநாட்டுப் பேச்சு விமர்சனம்

விஜய்யின் அரசியல் மாநாட்டுப் பேச்சு குறித்துப் பேசிய ராஜகுமாரன், "அவர் அந்த இடத்தில் மனதில் தோன்றியதை எல்லாம் பேசவில்லை. நன்கு தயாராகி, பயிற்சி பெற்று வந்துதான் பேசினார். அது சினிமா வசனம் போலத்தான் இருந்தது" என்று குறிப்பிட்டார். ஒரு தலைவன் தனது தொண்டர்களிடம் பேசும்போது, மனதில் என்ன தோன்றுகிறதோ அதை அந்த இடத்தில் பேச வேண்டும். ஆனால், அதை விஜய் செய்யவில்லை என்பது தனக்குச் சற்று வருத்தம் அளிப்பதாகவும் ராஜகுமாரன் வெளிப்படையாகத் தெரிவித்தார். "இனி அவர் இதை மாற்றி ஒரு நல்ல தலைமைப் பண்புடன் பேச வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன்" என்று தனது கருத்தைப் பதிவு செய்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+