கனா காணும் காலங்கள் சசிகுமார் யார் தெரியுமா? ஸ்டூடண்டாக நடிப்பவரின் நிஜ மனைவி இந்த பிரபலம் தான்
சென்னை: டிஸ்னி ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகி வரும் கனா காணும் காலங்கள் சீரிஸின் மூன்றாவது பாகத்தில் சசிகுமார் கேரக்டரில் பள்ளி மாணவனாக நடித்துக் கொண்டிருக்கும் விஜய்க்கு திருமணம் முடிந்து குழந்தை இருக்கிறது. அவர் தன்னுடைய குடும்பத்தோடு எடுத்த புகைப்படங்களை சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அது இணையத்தில் அதிகமான கமெண்ட்களை பெற்று வருகிறது.
பொதுவாக திரைப்படங்களில் ஒரு சில நடிகர்கள் எத்தனை வயது ஆனாலும் இன்னும் பள்ளியிலும், கல்லூரியிலும் மாணவனாக நடித்துக் கொண்டிருப்பதை பார்த்திருப்போம். அதேபோல இப்போது டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வரும் கனா காணும் காலங்கள் வெப்சீரிசிலும் பள்ளி மாணவனாக நடிக்கும் விஜய் பற்றிய தகவல்கள் பலருக்கு வியப்பை கொடுத்து இருக்கிறது.

சமூக வலைத்தளத்தில் தன்னுடைய திறமையை நிரூபிக்க வேண்டும் என்பதற்காக பலர் புது புது முயற்சிகளை எடுத்து வருகிறார்கள். அந்த வகையில் ஷாலினி ஸ்டோர்ஸ் என்ற youtube வீடியோக்கள் இளைஞர்கள் மற்றும் குழந்தைகளை கவர்ந்து வருகிறது. அந்த வீடியோக்களில் நடிக்கும் நடிகர்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல பிரபலம் அடைந்து வருகிறார்கள்.
Top 10 Serials: இந்த வாரம் கலக்கிய டாப் 10 சீரியல்கள்! பரிதாப நிலையில் விஜய் டிவியின் டாப் சீரியல்
youtube சேனலில் வீடியோக்கள் வெளியிட்டு பிரபலமான பலர் சீரியல்களில் நடித்து வருகிறார்கள் அந்த வரிசையில் நடிகர் விஜய்யும் ஒருவர். ஷாலினி ஸ்டோர்ஸ் மட்டுமல்லாமல் கனா காணும் காலங்கள் சீசன் 3யிலும் சசிகுமார் என்ற கேரக்டரில் நடித்திருக்கிறார். தற்போது கனா காணும் காலங்கள் வெப்சீரிஸ் முடிவுக்கு வரும் நிலையில் அப்போது எடுத்த புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து தன்னுடைய ரசிகர்கள் எல்லோருக்கும் நன்றி தெரிவித்திருக்கிறார்.
அதோடு அந்த பதிவில், "எனக்கு மறக்க முடியாத நினைவுகள் தந்ததற்கு நன்றி சிறகுகள் ஸ்கூல். கனா காணும் காலங்கள் சீசன் 3 பயணம் முடிவுக்கு வருகிறது. கனா காணும் காணுங்கள் சீரியலில் நடிக்கிறது என்னுடைய கனவு. கடந்த சீசனில் அதற்காக ட்ரை பண்ணுனேன். ஆனா கிடைக்கல. எதிர்பார்க்காத நேரத்தில் இந்த சீசனில் செலக்ட் ஆகி சசிகுமார் கேரக்டரில் நடித்தேன்.
என்னுடைய கேரக்டரை நான் நன்றாக செய்தேன் என்று நம்புகிறேன். அதேபோல எனக்கு ஸ்கூல் பையன் கேரக்டர் கொடுத்தால் செட் ஆகும் என்று நம்பினதற்காக பிரவீன் பென்னட் சாருக்கும் நன்றி. அதுபோல அந்த சீரியலின் இயக்குனர்கள் டிஸ்னி ஹாட்ஸ்டார் உட்பட பலருக்கும் நன்றி தெரிவித்திருக்கிறார்.
மொத்தமாக மாறிய பாக்கியலட்சுமி சீரியல் கோபி- பாக்கியா.. பக்கத்தில் யாரு பாருங்க! இது செமையா இருக்கு
அதோடு கனா காணும் காலங்கள் ரசிகர்கள் சப்போர்ட் இல்லை என்றால் எங்களால் 100 எபிசோடு கம்ப்ளீட் பண்ணி இருக்க முடியாது ரொம்ப நன்றி மக்களே என்றும் தெரிவித்திருக்கிறார். அதுபோல விஜய் டூட் பற்றிய சுவாரசியமான தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதாவது ஷாலினி ஸ்டோர்ஸ் வீடியோவில் மட்டுமல்ல இவருக்கு நிஜத்திலும் திருமணம் முடிந்து ஒரு குழந்தை இருக்கிறது.

அதுவும் விஜயின் மனைவியின் பெயர் லட்சுமி தான். இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது. பெண் குழந்தையோடு எடுக்கும் வீடியோக்களையும் விஜய் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி பகிர்ந்து வருகிறார். சமீபத்தில் இவருடைய திருமண நாள் கொண்டாட்டத்தின் போது தன்னுடைய மனைவிக்கு நன்றி தெரிவித்து ஒரு போஸ்ட் போட்டிருந்தார். இது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. இவருக்கு இவ்வளவு பெரிய பொண்ணு இருக்கிறதா என்று பலரும் அந்த பதிவில் கேள்வி கேட்டிருந்தனர்.












Click it and Unblock the Notifications