மொத்தமாக மாறிய பாக்கியலட்சுமி சீரியல் கோபி- பாக்கியா.. பக்கத்தில் யாரு பாருங்க! இது செமையா இருக்கு
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் கோபி கேரக்டரில் நடிகர் சதீஷ் நடிக்கிறார். அதுபோல பாக்யா கேரக்டரில் நடிகை சுசித்ரா நடித்து வருகிறார்கள். இவர்கள் இருவரும் லேட்டஸ்ட் ஆக எடுத்த புகைப்படம் தான் இணையத்தில் வைரல் ஆகி கொண்டிருக்கிறது. அவர்களோடு விஜய் திரைப்பட குழந்தை நட்சத்திரம் ஒருவரும் இருக்கிறார்.
விஜய் டிவியில் பாக்கியலட்சுமி சீரியல் கடந்த நான்கு வருடங்களுக்கு மேலாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலுக்கு என்று அதிகமான ரசிகர்கள் இருக்கிறார்கள். அதே நேரத்தில் இந்த சீரியலில் வந்த கதையை ரிப்பீட்டு மோடில் வருகிறது என்பது பலருடைய கருத்தாக இருக்கிறது.

ஆனாலும் இந்த சீரியல் இந்த குடும்ப தலைவியின் முன்னேற்றத்தை மையமாக கொண்டு இருப்பதால் டிஆர்பியில் முன்னணி இடத்தை பிடித்து வருகிறது. அதுபோல பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்கும் நடிகர்களும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறார்கள். அதில் கோபியாக நடிக்கும் சதீஷ்க்கு சொல்லவே வேண்டாம். இவர் ஏற்கனவே பல சீரியல்களில் நடித்திருக்கிறார். ஆனாலும் பாக்கியலட்சுமி சீரியலில் கோபியாக ரசிகர்களின் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
இவர் இந்த சீரியலில் வில்லனா ஹீரோவா என்பதுதான் குழப்பமாக இருக்கிறது. ஆரம்பத்தில் பாக்யாவை கொடுமை செய்யும் போது பலர் இவரைத் திட்டி தீர்த்து வந்தாலும் இப்போது இவருடைய மனமாற்றத்தை பார்த்து இவருக்கு சப்போர்ட் செய்து வருகிறார்கள். அதுபோல ஈஸ்வரியை கம்பேர் பண்ணும் போது கோபி எவ்வளவோ மேல் என்பது பலருடைய வாதமாகவும் இருக்கிறது.

அதுமட்டுமல்லாமல் நான் சீரியலில் மட்டும் தான் இப்படி நடிப்பேன், நிஜத்தில் அப்படியெல்லாம் கிடையாது என்று சொல்வது போல சதீஷ் தினமும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு வருகிறார். காலையில் அவர் வாக்கிங் போகும்போது வீடியோ எடுத்து அதை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களுக்கு வாழ்த்துக்கள் கூறுகிறார்.
பாக்கியலட்சுமி இனியாவிற்கு நடந்த அவலம்.. கதை என்றாலும் இப்படியா பண்ணுவீங்க? இதை கவனிச்சிருக்கலாமே!
இவருடைய வீடியோ ஒரு நாள் வரவில்லை என்றாலும் ரசிகர்கள் அவரிடம் என்ன ஆச்சு வீடியோ வெளியிடவில்லையே என்று கேட்டு வருகிறார்கள். அதுபோல பாக்யலட்சுமி சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பது குறித்தும் அடிக்கடி அப்டேட் கொடுத்து கொண்டு இருக்கிறார்.

இன்னும் சில மாதங்களில் இந்த சீரியல் முடிவுக்கு வந்துவிடும் என்று இவர் மறைமுகமாக தெரிவித்து இருக்கிறார். அதுபோல இந்த சீரியல் முடிவுக்குப் பிறகு தான் ஆறு மாதமாக ரெஸ்ட் எடுக்க போகிறேன் அதற்கு பிறகு தான் அடுத்ததாக நடிப்பது குறித்து யோசிக்கணும் என்றும் கூறியிருக்கிறார்.

இந்த நிலையில் நேற்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சதீஷ் வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் அதிகமான லைக்குகளை குவித்து வருகிறது. அதாவது பாக்யா மற்றும் கோபி இருவரும் வித்தியாசமான கெட்டப்பில் இருக்கிறார்கள். அவர்களோடு கோட் திரைப்படத்தில் விஜய்க்கு மகனாக நடித்த குழந்தை நட்சத்திரமும் இருக்கிறார். இது விளம்பர சூட்டிங் என்று அவரே அதில் கேப்ஷன் கொடுத்திருக்கிறார்.
Top 10 Serials: இந்த வாரம் கலக்கிய டாப் 10 சீரியல்கள்! பரிதாப நிலையில் விஜய் டிவியின் டாப் சீரியல்
ஆனால் அதை சரியாக கவனிக்காத ரசிகர்கள் பலரும் பாக்கியலட்சுமி சீரியலில் கதை மாறப்போகிறதா? நீங்கள் இருவரும் சேர்ந்து இனி வாழப் போகிறீர்களா? அப்போ இனி இரண்டாவது பாகத்தில் ராதிகா தான் வில்லியா? என்றெல்லாம் அதிகமான கமெண்ட்கள் வந்திருக்கிறது.
-
நீயா நானாவில் யாமினி சொன்ன காதல் கதை.. கண்கலங்கி நின்ற கோபி நாத்.. கடைசியில் சொன்ன ‘நச்’ அட்வைஸ் -
திவாகருக்குள் தான் ஜாதி வெறி இருக்கு.. குக் வித் கோமாளியில் நடந்தது இதுதான்! கானா வினோத் ஆதங்கம் -
“குக் வித் கோமாளி” போட்டியாளர் மனைவியிடம் திவாகர் ஆபாசமாக அப்படி பேசினாரு! அதனால் தான் பிரச்சனை! மாகாபா விளக்கம் -
சிறகடிக்க ஆசை: மனோஜ்க்கு நடந்த நிச்சயதார்த்தம்.. விஜயாவை சிக்க வைத்த ஸ்ருதி.. முத்துக்கு தெரிந்த விஷயம் -
சித்திரை திருநாளில் கிடைத்த பரிசு.. இரண்டு வருடம் கழித்து பிறந்த குழந்தை.. பிரதீப் ஆண்டனி நெகிழ்ச்சி பதிவு -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை!












Click it and Unblock the Notifications