Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தேர்தல் பற்றி விஜய் பேசிய டயலாக், சிறகடிக்க ஆசையில் ரீ கிரியேட்! இதை கவனிச்சீங்களா? இனிவரும் பிரச்சனை?

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் நடிகர் விஜய் தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய டயலாக்கை இந்த சீரியலின் ஹீரோ முத்து பேசியிருக்கிறார். அதுவும் தேர்தல் நெருங்கும் இந்த சமயத்தில் இந்த சீரியலில் இதுபோன்ற ஒரு கருத்து வைக்கப்பட்டு இருப்பது சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. அதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

Vijay Siragadikka Aasai serial Vijay TV

தேர்தல் திருவிழா

பொதுவாக சீரியல் களத்தில் எப்போதுமே ஒரு பேட்டனை ஃபாலோ பண்ணுவாங்க. அதாவது பொங்கல் வரப்போகும் சமயத்தில் இரண்டு மாதத்திற்கு முன்பே பொங்கல் கொண்டாட்டத்தை சீரியல்களில் தொடங்கி விடுவார்கள். சில சீரியல்களில் பொங்கல் முடிந்து இரண்டு மாதம் கழித்து பொங்கல் கொண்டாடிக் கொண்டிருப்பார்கள். அதேபோல இப்போது எலக்சன் திருவிழா தொடங்கியதும் சீரியலிலும் எலக்சனை தொடங்கி விட்டார்கள்.

சிறகடிக்க ஆசை சீரியல் தேர்தல்

அதுவும் சிறகடிக்க ஆசை சீரியலில் பூக்கட்டும் வியாபாரிகளுக்கான தேர்தல் நடைபெறுகிறது. அங்கு நடக்கும் தேர்தல் ஏற்பாடுகளை பார்க்கும் போது பாராளுமன்ற தேர்தலிலே தோற்று போய்விடும் போல. அந்த அளவிற்கு இந்த சீரியலில் தேர்தல் அளப்பறைகள் நடந்து கொண்டிருக்கிறது. இந்த சீரியல் ஹீரோயினி மீனாவிற்கும் அவருக்கு எதிரியாக பூக்கட்டும் சிந்தாமணிக்கும் இடையே தேர்தல் போட்டி நடைபெறுகிறது.

சீரியல் அலப்பறை

இதில் மீனாவை வாபஸ் வாங்க வைப்பதற்காக அவருடைய கணவர் முத்துவை கொலை செய்வதற்கு சிந்தாமணி ஆல் செட் பண்ணி இருந்தார். ஆனால் கடைசி நேரத்தில் முத்து மீது விழுந்த கத்தி குத்தை மீனா வாங்கிவிட்டார். இதனால் மீனா வயிற்றில் குத்து பட்டு இருக்கிறது. ஆனால் குத்துப்பட்டு இரத்தம் சொட்ட சொட்ட அவர் ஹாஸ்பிடலுக்கு போகாமல் நாமினேஷன் செய்ய போயிருந்தார். அவ்வளவு பொறுப்பாக நாமினேஷன் செய்த மீனா கட்டு போட்டு கொஞ்ச நேரத்திலேயே நான் இந்த எலக்ஷனில் நிற்கவில்லை என் புருஷனுக்கு ஏதாவது ஆகிடும்னு பயமாயிருக்கு என்று சொன்னது தான் காமெடியாக இருந்தது.

இந்த முடிவை தான் குத்து பட்ட உடனே செய்திருக்கலாமே? எதற்காக ரத்தம் சொட்ட சொட்ட நாமினேசன் செய்து விட்டு பிறகு கட்டு போட்டதும் அதை வாபஸ் வாங்க வேண்டும் என்று ஒரு குழப்பத்தை குழப்புகிறார்களோ தெரியவில்லை. சரி அது சீரியல்.. சீரியஸ் ஆக பார்க்க கூடாது என்று விட்டுவிடலாம்.

Vijay Siragadikka Aasai serial Vijay TV

விஜய் பேசிய பேச்சு

ஆனால் சமீபத்தில் நடிகர் விஜய் தன்னுடைய தமிழக வெற்றிக் கழகத்தின் பிரச்சாரத்திற்காக சென்றிருந்தபோது நீங்க மற்ற கட்சியினர் கொடுக்கும் காசை வாங்கிக்கோங்க, அவங்க கஷ்டப்பட்டு நமக்காக தரல. நம்ம கிட்ட இருந்து கொள்ளை அடித்த பணத்தை தான் உங்ககிட்ட திருப்பி தராங்க. அந்த பணத்தை வாங்கிட்டு நீங்க அவங்க காதிலே விசிலை ஊதி அனுப்புங்க... நீங்க விசில் சின்னத்துக்கு ஓட்டு போடுங்க என்று பேசியிருந்தார். இது பெரிதாக சர்ச்சை ஆனது.

வாக்காளர்களை பணம் வாங்க சொல்லி விஜய் அறிவுறுத்திருக்கிறார் என்பது போல அவர் மீது புகார்களும் கொடுக்கப்பட்டது. இன்று சிறகடிக்க ஆசை சீரியலில் இதே சம்பவம் தான் நடந்திருக்கிறது. அதாவது மீனாவை ஜெயிக்க வைக்க வேண்டும் என்பதற்காக அவருடைய கணவர் முத்து மீனாவை சிந்தாமணி குத்தி கொலை முயற்சி செய்தார் ஆனாலும் மீனா உங்களுக்காக இந்த எலக்ஷனில் நிற்கிறார் என்பது போல ஒரு போஸ்டரை ஒட்டிக் கொண்டிருந்தார்.

முத்து பேசிய சர்ச்சை பேச்சு

அப்போது அங்கு வந்த பெண்கள் மீனாவை பற்றி பரிதாபமாக பேசிக் கொண்டிருந்தனர். அப்போது முத்து உங்களுக்கு சிந்தாமணி பணம் கொடுத்தால் வாங்கிக் கொள்ளுங்கள். அது அவங்க கஷ்டப்பட்டு உழைத்த பணம் கிடையாது. வட்டிக்கு விட்டு சம்பாதித்த பணம் தானே... அந்த பணத்தை நீங்க வாங்கிக்கோங்க. ஓட்டை மட்டும் மீனாவுக்கு போட்டுக்கோங்க என்று சொல்லி இருக்கிறார். இதுதான் இப்போது சர்ச்சையாக பேசப்பட்டு வருகிறது. இதனால் இதற்கு விளக்கம் வருமா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+