காக்கா இல்ல புலி.. விஜய் குறித்து பாலு மகேந்திரா சொன்னது.. கொண்டாடும் ரசிகர்கள்.. ஆனால் அந்த பூனை?
சென்னை: தமிழ் சினிமாவின் லெஜெண்டுகளில் ஒருவராகவும் இன்றைய முன்னணி இயக்குனர்களாக இருக்கும் பலருக்கு குருவாக இருந்தவரும், தமிழ் சினிமாவில் புது ட்ரெண்டையே உருவாக்கியவருமான இயக்குனர் பாலு மகேந்திரா.
இவர் நடிகர் விஜய் குறித்து கூறிய கருத்துக்களை விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் சேர் செய்து கொண்டாடி வருகின்றனர்.

சமீப காலமாக காக்கா என சமூக வளைதளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு வரும் விஜய் ரசிகர்களுக்கு இந்த செய்தி கொஞ்சம் ஆறுதலாய் இருந்து வருகிறது.
தன்னுடைய ஒளிப்பதிவு மற்றும் தான் இயக்கும் படங்களின் கதைகளில் வெளிப்படும் மனிதர்களின் உணர்வு போன்றவற்றில் புதுமை ஆகியவற்றால் புது ட்ரெண்டை உருவாக்கி தமிழ் சினிமாவின் ஜாம்பவானாக இருந்தவர் பாலு மகேந்திரா. வெற்றிமாறன், பாலா,ராம், துவங்கி சீனு ராமசாமி போன்றவர்கள் வரை பலர் பாலுமகேந்திராவின் சிஷ்யர்களாக இருந்து இன்று தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களாக கோலோச்சி கொண்டிருக்கின்றனர். மனித உணர்வுகளை பிரதிபலிப்பதில் பாலு மகேந்திராவிற்கு இணை வேறு யாரும் இல்லை என்று சொல்லும் அளவிற்கு மூன்றாம் பிறை,மூடுபனி படங்கள் இன்றும் சாட்சியாக இருக்கிறது.
சமீபத்தில் ஜெயிலர் பட ஆடியோ வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் சொன்ன கழுகு- காக்கா குட்டி கதையை வைத்து விஜய் ரசிகர்களை காக்கா என்று சமூக வலைதளங்களில் ட்ரோல் செய்து வந்தனர், விஜய் ரசிகர்களும் அதற்கு கழுகையும் அதன் குணநலன்களையும் பற்றி விமர்சனம் செய்து பதிலடி கொடுத்து வந்தனர்.இந்த நேரத்தில் தற்போது விஜய் குறித்து இயக்குனர் பாலு மகேந்திரா கூறியதாக இயக்குனர் சீனு ராமசாமி பகிர்ந்துள்ள தகவல்கள் விஜய் ரசிகர்களை கொஞ்சம் குஷியாக்கி உள்ளது.
இயக்குனர் பாலு மகேந்திரா உடன் இயக்குனர் சீனு ராமசாமி காரில் சென்று கொண்டிருந்த பொழுது ஒரு இடத்தில் பெரும் கூட்டத்தை பார்த்திருக்கின்றனர். அந்த இடத்தில் விஜய் படத்தை வைத்து விளம்பர பலகைகள் வைத்திருந்ததையும் கவனித்திருக்கிறார் பாலு மகேந்திரா, இதுகுறித்து காரில் தன் பின்னால் அமர்ந்திருந்த தன்னுடைய உதவி இயக்குனர் சீனு ராமசாமி இடம் இந்த பையனுக்கு ஏன் இவ்வளவு கிரேஸ் மக்களிடம் இருக்கிறது என்று தெரியுமா? என்று கேட்டுள்ளார். திடீரென்று இயக்குனர் பாலு மகேந்திரா இப்படி கேட்டதும் ஒரு வித குழப்பத்துடன் சற்று அமைதியாக அமர்ந்திருக்கிறார் சீனு ராமசாமி.
சிறிது நேரத்தில் அதற்கான பதிலை இயக்குனர் பாலு மகேந்திரா கூறியுள்ளார்.குதிரை மற்றும் புலி,பூனை ( பூனை குடும்ப முகம்) இருப்பவர்களால் மட்டும்தான் உலக அளவில் பிரபலமானவர்களாக வர முடியும். காரணம் அவர்களது முகத்தில் தான் ஒருவித ஈர்ப்பு இருக்கும் என்றும், பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை எளிதில் இழுக்கக்கூடிய முகம் என்றும் பாலு மகேந்திரா கூறியுள்ளார். இந்த வீடியோவை பார்த்த விஜய் ரசிகர்கள் தமிழ் சினிமாவின் லெஜெண்டே தங்கள் அபிமான நடிகரை புகழ்ந்துள்ளது குறித்து கொண்டாடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications