விஜய், கௌதம புத்தர்.. குடும்பத்தை விட்டுட்டு வந்துட்டாரு! மெர்சல் நினைப்பு! வெளுத்த ப்ளூ சட்டை மாறன்
சென்னை: நடிகர் விஜய் கடந்த சில நாட்களாக தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வரும் நிலையில், ரசிகைகள் சிலர் அவருக்கு கொடுத்த ஆதரவுகளை பார்த்து கிண்டல் செய்யும் வகையில் திரைப்பட விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் (Blue Sattai Maran) வெளியிட்ட பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் ஒரு ரசிகை விஜய் எங்களுக்காக குடும்பத்தை பிரிந்து வந்திருக்கிறார் என்று சொன்னதற்கு ப்ளூ சட்டை மாறன் கொடுத்த பதிலடி வைரலாகி வருகிறது.

நடிகர் விஜய் குடும்ப பிரச்சனையால் மட்டுமில்லாமல் சமீபத்தில் அவர் மகளிர்களுக்காக அறிவித்த வாக்குறுதிகள் கூட விமர்சனங்களை சந்தித்து வருகிறது. ஆரம்பத்தில் தவெக பெண்கள் உட்பட தொண்டர்கள் எல்லோருமே மற்ற கட்சியினர்கள் இலவசமாக கொடுத்து மக்களை கெடுத்து வைத்திருக்கின்றனர் நாங்கள் இலவசம் கேட்கவே மாட்டோம் என்று பேசி இருந்தனர் ஆனால் கடைசியில் விஜய் இலவசங்களை அறிவித்திருக்கிறார். இதனால் அப்போ பேசிய வாய் இப்போ இப்படி பேசுகிறது என்று பலர் கலாய்த்து வருகின்றனர். அந்த வரிசையில் ப்ளூ சட்டை மாறனும் விஜய் ரசிகைகள் ரசிகர்கள் பேசிய பழைய பேட்டியை கலாய்த்து வருகிறார்.
அதோடு நேற்று நடந்த மகளிர் தின கொண்டாட்ட பங்க்ஷனில் ரசிகை ஒருவர் விஜய் எங்களுக்காகத்தான் குடும்பத்தை பிரிந்து வந்திருக்கிறார். குடும்பம் வேண்டாம் எனக்கு ஏழை மக்களும், கஷ்டப்படுறாங்களுக்காக நான் உதவி செய்வேன் என்று வந்திருக்கிறார். இந்த நேரத்தில் தான் நாம அவருக்கு ரொம்ப சப்போர்ட் பண்ணனும் என்று சொல்லி இருக்கிறார். இந்த வீடியோவை பகிர்ந்த ப்ளூ சட்டை மாறன் இதற்கு "ஆமா அவரு கௌதம புத்தர், குடும்பத்தை பிரிந்து உங்களுக்கு உதவி செய்ய வருகிறார் என்று கலாய்த்து வைத்திருக்கிறார்.
அதுபோல விஜயின் மனைவி விவாகரத்து மனுவில் விஜய் பிரபல நடிகை ஒருவருடன் நெருக்கமாக இருக்கிறார். அதனால்தான் எங்கள் குடும்பத்தில் பிரச்சனை என்பது போல குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில் விஜய் சமீபத்தில் நடிகை திரிஷாவுடன் கல்யாண பங்க்ஷன் ஒன்றில் கலந்து கொண்டார். இது பெரிதாக பேசப்பட்டு வருகிறது.
மெர்சல் சர்ச்சையை நினைவுபடுத்திய பதிவு
இதற்கு பதில் சொல்வது போல, ப்ளூ சட்டை மாறனின் இன்னொரு பதிவில், 2017ஆம் ஆண்டு வெளியான Mersal படத்தைச் சுற்றி ஏற்பட்ட சர்ச்சையை நினைவுபடுத்தியுள்ளார். மெர்சல் படம் மூலம் பேமஸ் ஆகலாம் என்று நினைத்த H. ராஜா அந்த நேரத்தில், விஜயை "ஜோசப் விஜய்" என்று குறிப்பிட்டு விமர்சித்தது பெரிய விவாதமாக மாறியது. அதற்கு பதிலாக விஜய் தனது லெட்டர் பேடில் "ஜோசப் விஜய்" என்று கையொப்பமிட்டு, "என் பெயரை வைத்து யாரும் தேவையில்லாத கிசுகிசு கிளப்ப வேண்டாம்" என்ற வகையில் மறைமுகமாக பதில் அளித்தார்.
அந்த நேரத்தில் ரசிகர்களும் பொதுமக்களும் விஜய்க்கு ஆதரவாக நின்றனர். அந்த நடவடிக்கை அவருக்கு பெரிய ஆதரவை பெற்றுத்தந்தது.
அதே தந்திரம்
இந்த சம்பவத்தை குறிப்பிட்ட ப்ளூ சட்டை மாறன், தனது பதிவில், "அந்த விஷயத்தில் மக்கள் பாராட்டினார்கள். அதனால் இப்போதும் அதே மாதிரி நடந்தால் மக்கள் சந்தேகங்கள் எல்லாம் மறைந்து போய்விடும் என்று விஜய் நினைத்திருக்கலாம். ஆனால் இந்த விஷயத்தில் ஒரு சிறிய தவறு நடந்துவிட்டது" என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், "அழகாக தந்திரம் போட தெரிந்த விஜய்க்கு எந்த விஷயத்தில் அதை பயன்படுத்த வேண்டும் என்பது தெரியாமல் போய்விட்டது. அரசியலில் இன்னும் கொஞ்சம் பயிற்சி தேவைப்படுகிறதோ" என்றும் அவர் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு விஜயை மறைமுகமாக கலாய்க்கும் வகையில் இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஆமா.. கௌதம புத்தர்.. குடும்பத்தை விட்டுட்டு வந்துட்டாரு. போய் உடனே காப்பாத்துங்க. pic.twitter.com/mCainDjThV
— Blue Sattai Maran (@tamiltalkies) March 7, 2026
-
"விஜய் கோட் போடுவது பிரச்சனை இல்லை... எல்லாத்தையும் கோட்டை விடுவது தான் பிரச்சனை!" உதயநிதி தாக்கு -
தமிழ்நாட்டின் முதல் சட்டமன்ற பெண் செயலாளராக சாந்தி நியமனம்.. யார் இவர்? இவருடைய பவர் என்ன? -
Mayor பிரியா - தவெக MLA பல்லவி மோதல்.. மேயர் vs எம்எல்ஏவில் பெரியவர் யார்? சட்டம் சொல்வது என்ன? -
விஜய்க்கு 25 நாள் ஆச்சு.. முதல் ஒப்பந்தம்.. 3 இடத்தில் 3 மெகா திட்டம்.. L&T நிறுவனம் ரூ.18600 கோடி முதலீடு! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு! -
ராகுல், விஜய்க்கு நெருக்கம்.. ராஜ்யசபா எம்பியாகும் பிரவீன் சக்கரவர்த்தி.. யார் இவர்? -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
சூடம் ஏற்றி.. தீபாராதனை காட்டி.. விஜய்-க்கு சிலை வைத்து கும்பிடும் திருச்சி தொண்டரின் குடும்பம் - வீடியோ -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
தலைமைச் செயலகமா? தவெக தலைமை அலுவலகமா? வானதி சீனிவாசன் கேள்வி











Click it and Unblock the Notifications