Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விஜய் அண்ணா தைரியம் இருந்தா என்கிட்ட நேரடியா மோதுங்க.. உங்க ரசிகர்கள் செயலை பாருங்க! ஜூலி அடுத்த வீடியோ

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி 23ஆம் தேதி வேலூரில் தனது கட்சி நிர்வாகிகளுடன் சந்திப்பு கூட்டம் நடத்தினார். அந்த கூட்டத்தில் அவர் அரசியல் நிலைமை பற்றியும், மக்கள் மனநிலை பற்றியும் பேசினார். குறிப்பாக ஜல்லிக்கட்டு காளையை எடுத்துக்காட்டாக வைத்து சொன்ன குட்டிக் கதை தான் சமூக வலைதளங்களில் அதிகமாக பேசப்பட்டது. விஜய் சொன்ன ஸ்டோரிக்கு உடனே ஜூலி ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார். அது சோசியல் மீடியாவில் அதிகமாக ட்ரோல் ஆனதை தொடர்ந்து இப்போது ஜூலி அடுத்த வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.

அதில், "விஜய் அண்ணா, உங்கள் வேலூர் பரப்புரை பேச்சை பார்த்து விட்டு அதில் ஒன்றும் இல்லை என்ற ஆதங்கத்தில் நான் வீடியோ வெளியிட்டு இருந்தேன். உடனே உங்களது ரசிகர்கள்... ரசிகர்கள் தான் அவர்கள் இன்னும் அரசியல் வயப்படவில்லை. உங்கள் ரசிகர்கள் என்னை அனைத்து சமூக வலைதள பக்கங்களிலும் கடித்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

Vijay Bigg Boss Julie TVK

இந்த மைனர் பசங்களிடம் இருந்து முக்கால்வாசி போலி ஐடிகள் மட்டும்தான். அதை வைத்துக்கொண்டுதான் அவர்கள் என்னை மிரட்டிக் கொண்டிருக்கிறார்கள். அதற்காக நான் பயந்து அந்த வீடியோவை டெலிட் செய்யவும் மாட்டேன், எனது கருத்துகளில் இருந்து பின் வாங்கவும் மாட்டேன். என்னை மிரட்டினால் பரவாயில்லை. என்னை சார்ந்தவர்களை மிரட்டுவதால் இதை சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன்.

விஜய் அண்ணா உங்களுக்கு என்னை பழிவாங்க வேண்டும் என்றால் நான் என் வீட்டில் இருப்பேன்... இல்லை என்றால் எனது அலுவலகத்தில் இருப்பேன். என்னை என்ன வேண்டுமானாலும் பண்ணுங்க. ஆனால் அவங்கள விட்டுடுங்க.. நீங்க பனையூரை விட்டு வெளியே வர மாட்டீங்கல்ல.. நான் இன்னும் உயிரோடுதான் இருக்கிறேன், நான் வேண்டுமானால் பனையூர் வருகிறேன்.

என்னை திட்டினால் என்னை திட்டுவது போல் தான். மக்களை திட்டுவது போல என்று யாரையும் உள்ளே இழுத்து போட மாட்டேன். ஒரு பெண்ணுக்கு சமூக வலைத்தளங்களில் எவ்வளவு மரியாதையும் மதிப்பும் பாதுகாப்பும் உங்கள் ரசிகர்கள் கொடுக்கிறார்கள் என்பதை எனது வீடியோவுக்கு கீழ் உள்ள கமெண்ட்களை நேரம் இருந்தால் படித்து பாருங்கள் என்று விஜய் போலவே பேசி இருக்கிறார்.

அதிலும் விஜய் கரூர் துயர சம்பவத்திற்கு பிறகு முதலமைச்சர் ஸ்டாலினை நோக்கி விஜய் எப்படி பேசி இருந்தாரோ அதே மாடுலேஷனில் இப்போது ஜூலி பேசி இருக்கிறார். இது மீண்டும் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

விஜய் வேலூரில் பேசிய அந்த குட்டி ஸ்டோரி தான். விஜய் தனது பேச்சை தொடங்குவதற்கு முன்பே ஒரு உவமைக் கதையை கூறினார். ஒரு ஊரில் மிகப் பரபரப்பாக மக்கள் நடமாட்டம் இருக்கும் சாலையில் ஒரு ஜல்லிக்கட்டு முரட்டுக் காளை சீறிக் கொண்டு நின்றது. மக்கள் அதை அடக்க முடியாமல் வேடிக்கை பார்த்தனர்.

வழக்கமாக அந்த காளையை அடக்கும் அனுபவசாலிகள் அன்றைய தினம் அந்த ஊரில் இல்லை. அவர்களுடன் இருப்பவர்கள் தான் அனுபவசாலிகள் என்று சொல்லிக் கொண்டு காளையை அடக்க முயன்றார்கள். ஆனால் காளை அவர்களை இடித்துத் தள்ளியது.

அந்த நேரத்தில் ஒரு சின்ன பையன் கூட்டத்தை விலக்கி கொண்டு காளையை நோக்கி சென்றான். ஏற்கனவே காளையிடம் முட்டு வாங்கி கிடந்தவர்கள், "நாங்களே அனுபவசாலிகள்... எங்களாலே முடியல... நீ போய் செத்துப் போயிடாதே" என்று அவனை எச்சரித்தனர். ஆனாலும் அந்த பையன் காளைக்கு அருகே சென்று, தனது பாக்கெட்டில் இருந்த இரண்டு புல்லுக் கட்டுகளை எடுத்துக் காட்டினான். உடனே காளை பசியில் புல்லை சாப்பிடத் தொடங்கியது. அதை மெதுவாக தடவி வயல்வெளிக்குக் கொண்டு போய்விட்டான்.

அதை பார்த்த அனுபவசாலிகள் தலைகுனிந்து நின்றனர். அப்போது ஒரு பெரியவர் அந்த பையனை பார்த்து "எப்படி காளையை அடக்கியாய்?" என்று கேட்டார். அதற்கு அந்த பையன், "அது கோபத்தில் இல்லை... பசியில் இருந்தது போலத் தெரிந்தது... அதனால்தான் புல் கொடுத்தேன்" என்று சொன்னான்.

இந்தக் கதையின் அரசியல், அந்த காளை தான் தமிழ்நாடு அரசியல் களம்... மக்கள் தான் அந்த பெரியவர்... அந்த சிறுவன் தான் தமிழக வெற்றிக் கழகம் என்று விஜய் கூறியதும் கூட்டத்தில் கைதட்டல் முழங்கியது.

இந்த குட்டி ஸ்டோரிக்கு பதிலடியாக ஜூலி, "வேலூரில் ஜல்லிக்கட்டு காளை பற்றி குட்டி கதை சொன்னீர்கள் அண்ணா... சாலை ஓரம் ஒரு காளை நின்றது... அதற்கு ஒரு குழந்தை புல்லுக் கட்டு கொடுத்து ஓரமாக விட்டது என்று சொன்னீங்க. ஆனால் உங்க கட்சியில் இருக்கிற பாதி பேர் சின்னவங்க. நீங்க சொல்றதை வேதவாக்கு என்று நம்பி, உண்மையிலேயே ஜல்லிக்கட்டு காளை முன்னாடி புல்லுக் கட்டு கொண்டு போய் நீட்டுனா என்ன ஆகும்? அப்படி ஏதாவது விபரீதம் நடந்தால் அதற்கு நீங்கள்தான் பொறுப்பு ஏற்கப் போறீங்களா?" என்று கேள்வி எழுப்பினார்.

அதோடு நிற்காமல், "இன்னொரு ஜல்லிக்கட்டு போராட்டம் நடத்த நீங்க யாருக்கும் தெம்பு இல்ல. உங்களால போன உயிர் 50- 50ஆக இருக்கட்டும்... அதை 500 ஆகிடாதீங்க அண்ணா" என்று அட்வைஸ் கொடுக்கும் விதத்தில் அவர் பேசியது கடும் விவாதத்தை கிளப்பியது. விஜயின் கூட்டத்தின் போது உயிரிழந்த இளைஞர்களை நினைவுபடுத்தும் வகையில் அவர் இந்த வரிகளை கூறியதாக விஜய் ரசிகர்கள் ஜூலியை திட்டி வருகின்றனர்.இதனால் இப்போது மீண்டும் ஜூலி வீடியோ வெளியிட்டு இருக்கிறார். இது என்ன பிரச்சனை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு பலருக்கும் இருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+