சர்ச்சைக்கு விளக்கமும் கொடுத்துவிட்டு.. உள்குத்துடன் பேசிய விஜய் சேதுபதி.. இது யாருக்கான பதில்?
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் கடந்த வார லீடர்ஷிப் பற்றி விஜய் சேதுபதி பேசியது அவருக்கு எதிராகவே திரும்பிவிட்டது. பலரும் அதற்கு கண்டனம் தெரிவித்து வந்த நிலையில் நேற்றைய எபிசோடில் இந்த நிகழ்ச்சியில் நாங்கள் பேசும் கருத்து மொத்தமும் இங்கே இருக்கும் போட்டியாளர்களை குறித்து மட்டுமே, தவிர வேறு எந்த இயக்கத்தையும்.. தனிநபரையும் குறித்து அல்ல என்று விளக்கம் கொடுத்திருந்தார். ஆனால் அதற்கு பிறகு அவர் சொன்ன சில விஷயங்கள் தான் இப்போ விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
பொதுவாக ஒரு பழமொழி ஊரு பக்கம் சொல்லுவாங்க. பிள்ளையும் கிள்ளி விட்டுட்டு தொட்டிலையும் ஆட்டுற மாதிரி. அந்த மாதிரி தான் போன வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் சம்பவமே மாறிப்போச்சு. உள்ளே நடந்த ஆட்சி மாற்றத்தை வைத்து விஜய் சேதுபதி பேசியது முதல்வர் விஜய் பற்றி தான் என்ற விமர்சனம் ஒரு வாரமாக போய்க்கொண்டிருந்தது. ஆனால் விஜய் டிவி அதற்கு மறுப்பு தெரிவித்து விளக்கம் கொடுத்தாலும் விஜய் சேதுபதி மட்டும் எந்த இடத்திலும் இது பற்றி பேசவே இல்லை.

விஜய் சேதுபதி கொடுத்த விளக்கம்
நேற்று முன்தினம் தான் நடித்த பத்தா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் தனக்கு போன் செய்ததை மட்டும் தான் சொல்லி இருந்தாரே தவிர அப்போ கூட இந்த விமர்சனத்திற்கு பதில் சொல்லவில்லை. ஒரு வாரம் கழித்து நேற்றைய எபிசோடின் முதல் ப்ரோமோவிலேயே இந்த நிகழ்ச்சியில் நாங்கள் பேசும் கருத்து மொத்தமும் இங்கே இருக்கும் போட்டியாளர்களுக்கும் எங்களுக்கும் ஆனது.
வேறு எந்த இயக்கத்தையும், தனிநபரையும் குறித்து அல்ல என்று கூற கடமைப்பட்டு இருக்கிறேன். அதை தெளிவாக சொல்கிறேன். இதெல்லாம் உங்களுக்கு சொல்லாமலே புரியும் என்று நினைத்தேன்.. ஆனால்!? இது போன வாரமே பேசி இருக்கணும் சரி இப்போ வந்து பேசுறேன் என்று அலுத்தப்படியே அதே நேரத்தில் கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஓட்டல்ல என்பது போலவே விஜய் சேதுபதி பேசியிருந்தார்.
விஜய் சேதுபதியின் வார்த்தைகள்
இந்த ப்ரோமோ பிக் பாஸ் டீம் எதிர் பார்த்தப்படியே சாயங்கால முதல் வைரலாகிவிட்டது. அதற்குப் பிறகு அவர் நிகழ்ச்சியில் சில கருத்துக்கள் சொல்லி இருந்தார். அதுவும் போட்டியாளர்களுக்கு உபதேசம் சொல்வது போலத்தான் கூறியிருந்தார். விமர்சனங்களை எதிர்கொள்ள கத்துக்கணும், ஒரு நளும் அதை கண்டு பயப்படக்கூடாது. அதை நேருக்கு நேர் எதிர்த்து நிற்கணும்.. என்று சொல்லி இருந்தார்.
அடுத்ததாக அதே போட்டியாளர்களுக்கு செய்த உபதேசம் தான், "நான் உங்களை எங்கேயும் தவறாக சித்தரிக்கல... சாதாரணமாகத்தான் பேசினானா, நீங்கள் தான் உங்களை கீழே போட்டு தரம் தாழ்த்துகிறீர்கள்" என்றும் சொல்லி இருந்தார். அடுத்து சில போட்டியாளர்களுக்கு பல உபதேசங்களை ஜாடை மாடையாக சொல்லிவிட்டு நன்றி கூறி நாளை சந்திக்கலாம் என விடை பெற்று இருக்கிறார்.
ரசிகர்களின் ரியாக்ஷன்
விஜய் சேதுபதியின் முதல் ப்ரோமோ வெளியானதுமே விஜய் ரசிகர்கள், பாத்தியா நாம அடிச்சு அடி அப்படி பயந்து ஓடிட்டான் என்று சொல்லி மீம்ஸ் வெளியிட்டு வந்தனர். ஆனால் விஜய் சேதுபதி தன்னுடைய வழக்கமான ஊசி குத்தும் வார்த்தைகளை போட்டியாளர்களுக்கு உபதேசம் என்கின்ற பெயரில் தொடங்கி விட்டார். இனி என்னவெல்லாம் சொல்லப்போகிறார்கள் என்று இதுவரைக்கும் பிக் பாஸ் பார்க்காத ரசிகர்கள் கூட ஆர்வத்தோடு காத்திருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications
