விஜய் அப்படி பேசினாரே? ரஜினி பிறந்தநாளுக்கு ஒரு வாழ்த்து கூட இல்லை! இனி இருக்கும் பிரச்சனை! பிரபலம் ஓபன்
சென்னை: நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கிய பிறகு, அவர் எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் சினிமாவைத் தாண்டி அரசியல் ரீதியாகவும் விவாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. அந்த வரிசையில், தற்போது அதிகம் பேசப்படுவது அவர் நடித்துக் கொண்டிருக்கும் ஜனநாயகன் படம் மட்டுமல்ல... நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாளுக்கு விஜய் ஒரு வாழ்த்து கூட சொல்லாத விஷயம்தான்.
விஜய் அரசியலுக்கு வந்த பிறகு நடிக்கும் கடைசி படம் என்று சொல்லப்படும் ஜனநாயகன் மீது ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. அதே சமயம், இந்த படம் எப்படி இருக்கும், விஜய்யின் அரசியல் எண்ணங்கள் இதில் பிரதிபலிக்குமா என்ற கேள்விகளும் சமூக வலைதளங்களில் எழுந்து வருகிறது. பொங்கல் ரிலீஸாக ஜனநாயகன் மற்றும் சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி படங்கள் வர இருப்பதால், இந்த இரண்டு படங்களைச் சுற்றியும் பேச்சு அனல் பறக்கிறது.

இந்த சூழலில்தான், பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு, ஒன் இந்தியா தமிழ் யூடியூப் சேனலுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், விஜய் குறித்து கடுமையான கருத்துகளை பதிவு செய்துள்ளார். குறிப்பாக, ரஜினிகாந்த் பிறந்தநாளுக்கு விஜய் வாழ்த்து தெரிவிக்காதது குறித்து அவர் வெளிப்படையாக விமர்சித்துள்ளார்.
பாலாஜி பிரபு பேசும்போது, "விஜய் அரசியல் கட்சி தொடங்கியிருக்கலாம். ஆனால் அவர் இன்னும் முழுமையான அரசியல்வாதியாக மாறவில்லை. பொதுவாக அரசியல்வாதிகள், பெரிய தலைவர்களின் பிறந்தநாள், நினைவு நாள்களில் மரியாதை செலுத்துவார்கள். அது அவர்களை பின்பற்றும் மக்களிடம் ஒரு நல்ல எண்ணத்தை உருவாக்கும். ஆனால் விஜய் அதுபோன்ற கள அரசியலை இன்னும் புரிந்து கொண்டதாக தெரியவில்லை" என்று கூறினார்.
மேலும்,"எந்த தலைவருக்கு பிறந்தநாள் என்றாலும் வீட்டில் ஒரு புகைப்படம் வைத்து பூ போட்டு முடித்துவிடுகிறார். அரசியல் என்பது சினிமா மாதிரி சுலபமான விஷயம் கிடையாது. '6 மணிக்கு வருவேன், 10 மணிக்கு போய்விடுவேன்'ன்னு சொல்ல முடியாது. தொண்டருக்கு பிரச்சனை என்றால் களத்துக்கு வரணும். விஜயால் அது முடியுமா?" என்று கேள்வி எழுப்பினார்.
ரஜினிகாந்த் விவகாரத்தில் பாலாஜி பிரபு பேசிய வார்த்தைகள் ரசிகர்களின் பிரதிபலிப்பாகவும் இருந்தது. அதாவது "விஜய் சினிமாவுக்கு வரும்போது, 'ரஜினியை பார்த்து இம்பிரஸ் ஆகித்தான் வந்தேன்'ன்னு பல இடங்களில் சொல்லியிருக்கார். ரஜினியை பிடிக்கும், அவரை பின்பற்றுகிறேன் என்றும் பேசியிருக்கார்.
Vijay SK: ரஜினி, அஜித் உதவல.. கை கொடுத்த விஜய்! சிவகார்த்திகேயன் மறந்துட்டாரே! பிரபலம் ஓபன்
ஆனால் இப்போ ரஜினி பிறந்தநாளுக்கு, ஒட்டுமொத்த திரையுலகமும் வாழ்த்து சொன்னபோது விஜய்யிடமிருந்து ஒரு வாழ்த்து பதிவு கூட வரல. விஜய் சினிமாவில் 33 வருடம் இருந்தாலும், ரஜினி 50 வருடம் இந்த துறையில் இருக்கிறார். ஒரு சீனியர் நடிகருக்கான மரியாதை கூட காட்ட மனசு வரலன்னா, விஜயின் மனநிலை என்னன்னு யோசிக்க வேண்டியதுதான்" என்று பாலாஜி பிரபு தெரிவித்துள்ளார்.
இந்த பேட்டி வெளியாகிய பிறகு, விஜயின் அரசியல் பயணம் குறித்த கேள்விகள் மீண்டும் தீவிரமாக எழுந்துள்ளன. ஜனநாயகன் படம் மட்டுமல்ல, விஜயின் அரசியல் அணுகுமுறையும் இனி வரும் நாட்களில் இன்னும் அதிக கவனத்தை ஈர்க்கும் என்பதில் சந்தேகமில்லை.
-
அதிகாலை 7 மணிக்குள் கள ஆய்வு பண்ணுங்க.. விஜய் அசத்தல்! மாநகராட்சி ஆணையர்களுக்கு அரசு உத்தரவு -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
அடித்து ஆடும் விஜய்! லஞ்சம் வாங்குனா காலி! சென்னை மாநகராட்சி நகரமைப்பு அதிகாரிகள் கூண்டோடு இடமாற்றம் -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
அன்னதானம் எங்க போடறீங்க.. வாட்டர் ஸ்பாட் எங்க.. அதிகாரிகளை கேள்விகளால் துளைத்த ரமேஷ் -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு












Click it and Unblock the Notifications