சிஎம் பையன் என்பதை மறந்துடுங்க! ஆனால்.. விஜய் மகன் சொன்ன வார்த்தை! பாயிண்ட்டை பிடித்த ரசிகர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் அரசியலுக்கு வந்த பிறகு அவருடைய விவாகரத்து வழக்கு வெளியே வந்ததும் விஜய் குடும்ப பிரச்சனை பற்றி பல விவாதங்கள் இருந்தது. அதே நேரத்தில் விஜய்யின் மகன் இயக்குனராக சிக்மா படத்தில் அறிமுகம் ஆகி இருப்பதால் அவர் பிரமோஷனில் அப்பா குறித்து பேசுவாரா? பேசினால் என்ன சொல்ல போகிறார்? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நீண்ட நாட்களாகவே இருந்து. இந்த நிலையில் ஜேசன் சஞ்சய் யூடியூப் சேனல் ஒன்றியத்துக்கு கொடுத்த பேட்டி வைரலாகி வருகிறது.

லைக்கா நிறுவனம் தயாரிப்பில் சந்தீப் கிஷன் நடிப்பில் உருவாகியுள்ள சினிமா திரைப்படத்தின் மூலம் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குனராக அறிமுகம் ஆகிறார். முதலில் ஜூலை 31-ஆம் தேதி படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் விஜய்யின் ஜனநாயகன் திரைப்படம் வெளியீட்டு காரணமாக சிக்மா படத்தின் ரிலீஸ் ஆகஸ்ட் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

விஜய் மகன் பேட்டி

இந்த நிலையில் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் விஜய் பற்றிய சர்ச்சைகளுக்கும் அவருடைய மகனின் மனநிலை என்னவாக இருக்கிறது என்ற எதிர்பார்ப்புகள் எல்லாம் ஜேசன் சஞ்சய் பதில் கொடுத்திருக்கிறார். அதாவது சமீபத்தில் ஒரு பேட்டியில் சஞ்சீவிடம் தொகுப்பாளினி டிடி தான் கேள்வி கேட்டிருக்கிறார். அதில் உங்களுடைய சினிமா படம் பார்த்து ஹாலிவுட் நடிகர் ஜோசன் ஸ்டேதன் உங்களை படம் இயக்க அழைத்தால் இந்தியாவில் இருந்து யாரை கூப்பிட்டு போவீங்க என்று கேள்வி கேட்டார்.

அதற்கு ஒரு நொடியும் யோசிக்காமல் முதலில் எனது மனதில் தோன்றுவது அப்பா தான். நல்ல காம்பினேஷன் ஆக இருக்கும் என்று சிரித்தப்படியே சொல்லிவிட்டார். அதோடு நிற்காமல் தனது சிறுவயது நினைவுகளையும் பகிர்ந்து கொண்டார். நான் சென்னையில் தான் வளர்ந்தேன், இங்கே தான் பள்ளி படிப்பை முடித்தேன். சின்ன வயதிலிருந்து அப்பாவுடன் படப்பிடிப்பு தளத்திற்கு போவேன். அதனால்தான் சினிமா எனக்கு ஒரு ஹாப்பியாக மாறியது.

Jason Sanjay Vijay movie interview

ஜேசன் சஞ்சய் ஆசை

ஆரம்பத்தில் பைலட்டாக வேண்டும் என்று நினைத்தேன். பிறகு கிரிக்கெட் வீரராக ஆசைப்பட்டேன். அப்பாவுடன் சேர்ந்து கிரிக்கெட் போட்டிகளையும் நிறைய பார்த்திருக்கிறேன் என்று கூறினார். விஜய் பற்றி ஜோசன் என தான் பேசுவார்? ஏற்கனவே தன்னுடைய பெயருக்கு முன்பு இருந்த அப்பாவின் இன்சியலை கூட மாற்றி விட்டாரே அதனால் விஜய் பற்றிய கேள்விக்கு தவிர்த்து விடுவாரா? என்றெல்லாம் எதிர்பார்த்து இருந்த ரசிகர்களுக்கு இது சர்ப்ரைஸை கொடுத்திருக்கிறது.

வார்த்தைக்கு வார்த்தை என்னுடைய அப்பா என்று விஜய் பற்றி ஜேசன் சஞ்சய் பெருமையாக பேச, அப்போ குடும்பத்திற்குள் அப்பா மகனுக்குள் எந்த பிரச்சினையும் இல்லை போல என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள். ஏற்கனவே லைக்கா ப்ரொடக்ஷனில் ஜேசன் சஞ்சய் படம் பண்ணுகிறார் என்றதும் விஜய்க்கு ஆப்போசிட் ஆக இருக்கும் லைக்கா ப்ரொடக்ஷனில் மகன் சேர்ந்து இருக்கிறார் என்றால், அப்பா மீது மகன் கோபத்தில் இருக்கிறார் என்றெல்லாம் சிலர் கதை கட்டி வந்தனர்.

வதந்திக்கு பதில்

ஆனால் அதுவெல்லாம் இல்லை அப்பாவுடைய கத்தி படம் தான் லைக்கா ப்ரொடக்ஷனுக்கு முதல் படம், என்னுடைய முதல் படமும் லைக்கா ப்ரொடக்ஷன் எவ்வளவு சென்டிமென்ட் பாருங்க என்று ஜேசன் சஞ்சய் ஒரே வார்த்தையில் பதில் கொடுத்து இருக்கிறார். அமைதியாக பேசிய சஞ்சய் பேட்டி தான் இப்போ சோசியல் மீடியாவையே ஆக்கிரமித்து இருக்கிறது.

முதலமைச்சர் மகன்

அதுபோல அந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்திலேயே டிடி பேசும் போது ஒரு சிஎம் மகனை இண்டர்வியூ எடுக்கிறேன் என்றபோது எனக்கு ரொம்ப பதட்டமாக இருக்கிறது என்று சொல்ல, அதற்கு ஜேசன் சஞ்சய் சிஎம் பையன் என்கிறதை மறந்திடுங்க... என்று சொல்லி இருந்தார். அதேபோல தன்னுடைய முடிவுகள் எல்லாவற்றிற்கும் காரணம் அப்பா என்று சொன்னதையும் விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+