விஜய் மகன் அப்படி பேசினாரே? ஆனால்! சங்கீதா கோர்ட்டில் வைத்த வேண்டுகோள்.. வருத்தத்தில் ரசிகர்கள்
சென்னை: தமிழ் சினிமாவிலும் அரசியலிலும் முதல்வர் விஜய்யின் குடும்ப விஷயத்தை பற்றிதான் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களாக விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு தொடர்ந்து செய்திகளில் இடம் பிடித்து வருகிறது. எப்போது நீதிமன்ற விசாரணை வந்தாலும் இருவரும் சமாதானமாகி விடுவார்களா? என்று கேள்வியே ரசிகர்களிடம் முதலில் எழும்.
இன்று இந்த வழக்கு மீண்டும் நீதிமன்றத்தின் விசாரணைக்கு வர இருக்கும் நிலையில் சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்று வருவதால் தன்னால் நேரில் ஆஜராக முடியாது என்று முதலமைச்சர் விஜய் தரப்பில் நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்ததாக தகவல்கள் வெளியாகின. இதற்கிடையே சங்கீதா தரப்பில் இந்த வழக்கை ஒத்தி வைக்காமல் திட்டமிடப்படி விசாரிக்க வேண்டும் என்று மனுதாக்கல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
முதல்வர் விஜய் விவாகரத்து வழக்கு
இந்த ஒரு தகவலே ரசிகர்கள் மத்தியில் புதிய கேள்வியை எழுப்பியுள்ளது. ஏனென்றால் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை சோசியல் மீடியாவில் ஓடிய பேச்சு வேறு. விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் சமீபத்தில் அளித்த பேட்டியில் தனது அப்பாவை பற்றி ரொம்பவும் பெருமையுடன் பேசி இருந்தார். அப்பாவின் வரலாற்று வெற்றி எங்கள் குடும்பத்தின் பெருமை, அவர் அடைந்திருக்கும் இடம் எங்களுக்கு பொறுப்பை அதிகப்படுத்தி இருக்கிறது, அவர் வெற்றி பெற்றது எங்க எல்லோருக்கும் சந்தோஷம் என்ற அவரது வார்த்தைகள் ரசிகர்களை நெகிழ வைத்தன.

அந்த பேட்டி வெளியானதும் குடும்பத்தில் எல்லாம் சரியாகி விட்டதா? விஜய்யும் சங்கீதாவும் மீண்டும் ஒன்றாக வாழப் போகிறார்களா? அதனால் தான் ஜேசன் இவ்வளவு பெருமையாக அப்பாவை பற்றி பேசுகிறாரா என்ற செய்திகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவின. அதிலும் ஜேசன் தனது அப்பாவை எந்த இடத்திலும் குறைத்து பேசாமல் பெருமையாக மட்டுமே பேசியது பலருக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தியது.
ரசிகர்களின் நம்பிக்கை
ஆனால் இப்போது நீதிமன்றத்தில் நடந்துள்ள இந்த புதிய திருப்பம் அந்த நம்பிக்கையே ரசிகர்கள் மத்தியில் மீண்டும் கேள்விக்குறியாக மாற்றியுள்ளது. சேர்ந்து வாழும் வாய்ப்பு இருந்திருந்தால் சங்கீதா தரப்பு இவ்வளவு உறுதியாக விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி இருப்பார்களா? என்ற கேள்வி தற்போது சோசியல் மீடியாவில் அதிகமாக கேட்கப்படுகிறது.
சிலர் கற்பனை கதை கட்டுறாங்க! உண்மை கிடையாது! சங்கீதா எனக்கு ரொம்ப பிடிக்கும்.. திரிஷா ஓபன்
இந்த வழக்கு ஆரம்பமான நாளிலிருந்து... இறுதியில் சமரசத்தில் முடியும் என்று பலரும் நம்பி வந்தனர். காரணம் விஜய் சங்கீதா பல வருடங்களாக இணைந்து வாழ்ந்த வாழ்க்கை அப்படி இருந்தது. திருமணத்திற்கு பிறகு சினிமா நிகழ்ச்சிகள், குடும்ப விழாக்கள், குழந்தைகளின் வளர்ப்பு என பல இடங்களில் இருவரும் சேர்ந்து கடந்து வந்தனர். ஜேசன் சஞ்சய், திவ்யா ஷாஷா என இரண்டு பிள்ளைகளின் பெற்றோராகவும் பொறுப்புடன் இருந்தனர். பின்னர் கடந்த சில வருஷங்களாக சங்கீதா போது நிகழ்ச்சிகளில் விஜய்யுடன் அதிகமாக கலந்து கொள்ளவில்லை, அதன் பிறகு விவாகரத்து தொடர்பான தகவல்கள் வெளியாக தொடங்கியது.
குழந்தைகளின் மனநிலை
பிறகு ஒவ்வொரு நீதிமன்றம் விசாரணையும் ரசிகர்களால் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது. இன்னொரு விஷயம் ரசிகர்களை யோசிக்க வைத்திருக்கிறது. இதுவரையே பிள்ளைகள் அம்மா பக்கம் தான் இருக்கிறார்கள் என்ற கருத்து தான் அதிகமாக பேசப்பட்டது. ஆனால் சஞ்சய்யின் சமீபத்திய பேட்டிகள் தனது அப்பாவை பற்றி பெருமையாக பேசிய பிறகு அந்த எண்ணமும் மாறி உள்ளது. அதனால் தான் இப்போது ரசிகர்கள் அம்மாவுடன் குழந்தைகள் இருக்கிறார்கள் ஆனால் அப்பாவைப் பற்றியும் எவ்வளவு அன்பாக பேசுகிறார்கள்? அப்படியானால் இந்த குடும்பத்தில் உண்மையில் என்ன நடக்கிறது? சோசியல் மீடியாவில் பலரும் குழப்பத்தில் இருக்கின்றனர்.
ஜேசன் பேட்டி ரசிகர்களுக்கு நம்பிக்கை கொடுத்து இருந்த நிலையில் இன்றைய நீதிமன்ற திருப்பம் அந்த நம்பிக்கையை மீண்டும் குழப்பமாக மாற்றி உள்ளது. இதனால் இன்று விசாரணையில் என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications
