பாலா இப்படி பண்ணுவார்னு நினைக்கல.. அந்த வார்த்தையால் வந்த கஷ்டம்.. அமுதவாணன் எமோஷனல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவி நிகழ்ச்சிகளில் தன்னுடைய மிமிக்ரி மூலமாக பலருடைய பாராட்டுகளை பெற்ற அமுதவாணன் தொடர்ந்து சில ரியாலிட்டி ஷோக்களிலும் கலந்து கொண்டு வெற்றி பெற்றிருந்தார்.

அது மட்டுமல்லாமல் இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் வெளியான தார தப்பட்டை என்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார். அதுபோல பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் ஒரு போட்டியாளராக அமுதவாணன் கலந்து கொண்டிருந்தார்.

Vijay TV Amudavanan information about Director Bala

இந்த நிலையில் அமுதவாணன் இயக்குனர் பாலா பற்றி சில தகவல்களை பகிர்ந்து இருக்கிறார்.

இந்த நடிகரை ஞாபகம் இருக்கா? சிவாஜிக்காக தற்கொலை செய்ய நினைத்தவரின் தற்போதைய நிலை தெரியுமா?
தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதையை யோசிக்கும் இயக்குனர்களில் ஒருவர் தான் பாலா. இவர் கதைக்காக எவ்வளவு உழைக்கிறாரோ அதே அளவிற்கு நடிகர்களையும் உழைக்க வைக்க கூடியவர். நடிப்பிற்காக எந்த எல்லையையும் தொட்டுட்டு வரலாம் என்று சொல்லக்கூடியவர் தான்.

பாலாவின் படத்தில் நடிக்கும் நடிகர்கள் பெரிய அளவில் ரிஸ்க் எடுத்துக்கொண்டு நடிப்பார்கள். நடிகைகளாக இருந்தாலும் நடிகர்களாக இருந்தாலும் சரி பாலாவின் திரைப்படத்தில் அதிகமாக ரிஸ்க் இருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். அதனாலயே அவருடைய படத்தில் நடிப்பதற்காக சிலர் தயங்கவும் செய்கிறார்கள். ஆனாலும் பாலா எடுக்கும் படங்கள் பெரிய அளவில் வெற்றி பெற்றும் விடும். பாலா இப்படி நடந்து கொள்வதற்கு காரணம் அவருக்கு சினிமா மீது இருக்கும் அதீத காதல் தான் என்று அவரே கூறி இருக்கிறார்,

இந்த நிலையில்தான் பாலாவை பற்றி பேட்டி ஒன்றில் நடிகர் அமுதவாணன் சில தகவல்களை பகிர்ந்து இருக்கிறார். அமுதவாணன் தார தப்பட்டை திரைப்படத்தில் பாலாவின் இயக்கத்தில் நடித்திருந்தார். அந்த திரைப்படத்திற்காக முதன் முதலில் அமுதவாணனை பாலா பார்த்ததும் என்ன பண்ணிட்டு இருக்க என்று கேட்டு இருக்கிறார்.

அதற்கு அமுதமான நான் விஜய் டிவியில் மிமிக்ரி காமெடி எல்லாம் பண்ணிக்கிட்டு இருக்கிறேன் என்று சொல்ல அப்போ என் சித்தப்பன் மாதிரி மிமிக்கிரி செய்து காண்பி என்று கேட்டிருக்கிறார். அதற்கு அமுதவாணன் உங்க சித்தப்பா மாதிரி என்னால எப்படி சார் பண்ண முடியும் என்று சொன்னாராம்.

Vijay TV Amudavanan information about Director Bala

அதற்கு பாலா அப்படியா அப்போ சூர்யா மாதிரி பேசி காட்டு என்று சொல்ல அமுதவாணன் சூர்யா போலவே பேசி நடித்துக் காட்டிக் கொண்டிருந்தாராம். அப்போது அமுதவாணன் பேசும்போது மீசையை தடவிக்கொண்டு பேசிக்கொண்டு இருந்தாராம்.
பிறகு சரி அப்போ நாளைக்கு வரும்போது அந்த மீசை எல்லாம் முழுக்க எடுத்துட்டு வந்துடு என்று சொல்ல அதைக்கேட்டு அமுதவணம் ஷாக் ஆனாராம்.

இருந்தாலும் சரி படத்துக்காகத்தானே என்று சரி என்று சொல்லி இவரும் தலை முடியை ரஜினி ஸ்டைலில் தலை முடியை வாரி காட்டியபடி சொல்லி இருக்கிறார். அதை பார்த்ததும் பாலா நாளைக்கு சரி இந்த முடியையும் கட் பண்ணிட்டு செந்தில் ஹேர் ஸ்டைலில் ஸ்ட்ரைட்னர் பண்ணிட்டு வந்துரு என்று சொல்லி அனுப்புனார் என்று அந்த பேட்டியில் அமுதவாணன் கூறியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+