50 வயசில் 3வது கல்யாணமா? "நரைத்த" முடியுடன் பிரியங்காவுக்கு தாலி கட்டி.. மணி மைண்டட் பெண்: பிரபலம்
சென்னை பிரியங்காவின் 2வது திருமணம் குறித்து மூத்த பத்திரிகையாளர் பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. அதில், விஜய் டிவியே இந்த திருமணத்துக்கு செலவு செய்துள்ளது என்று கூறியிருக்கிறார்.. அதுமட்டுமல்ல, விஜய் டிவியில் வேலை செய்து கொண்டு இருந்தபோது, அதே நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்த தயாரிப்பாளர் சாதிக் என்ற இஸ்லாமியரை காதலித்து, அவரை அப்போது திருமணம் செய்து கொண்டார் பிரியங்கா.. ஆனால், இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பிரிந்துவிட்டனர் என்றும் தெரிவித்துள்ளார்.
சில மாதங்களுக்கு முன்பு விஜய் டிவி பிரியங்காவுக்கும், மணிமேகலைக்கும் கருத்து வேறுபாடு எழுந்தபோது, அதற்கு பல்வேறு மூத்த பத்திரிகையாளர் தங்கள் கருத்துக்களை கூறியிருந்தனர். அப்போது, பயில்வான் ரங்கநாதனும் தன்னுடைய கருத்தை தெரிவித்திருந்தார்.

பாடகி சுசித்ரா
அதில், "திருமணத்திற்கு பிறகு அவனை அடிமைப்படுத்த நினைத்தார். அப்படி அடிமைப்படுத்த நினைக்கும் போது தான் பிரியங்காவின் கணவர் அவரிடம் இருந்து விலக முடிவு செய்தார் அப்படி என்று பாடகி சுசித்ரா சொல்றாங்க... பிரியங்காவுக்கு நேயர்கள் இருக்கிறார்கள் என்பது தான் உண்மை. அதனால் தான் அவருக்கு ஆங்கரிங் வாய்ப்பு கொடுக்கப்படுகிறது.. ஏற்கனவே நான் 2, 3 நிகழ்ச்சியில் பிரியங்காவை பார்த்திருக்கிறேன்..
கன்னத்தை கிள்ளி, இரட்டை அர்த்தத்தில் பேசி சேட்டை செய்வார்... அப்பவே நாம சுதாரித்து, அவருக்கு சரியான கவுன்டர் தந்துவிட்டால், மறுபடியும் நம்ம பக்கம் வர மாட்டார்.. எப்படியாவது தன்வசப்படுத்தி நேயர்களின் ஆதரவை பெற என்ன வேண்டுமானாலும் செய்வார்" என்றெல்லாம் கூறியிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
வடஇந்திய பெண்
இந்நிலையில், 2nd Floor Tamil என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பயில்வான் ரங்கநாதன், பிரியங்கா தேஷ்பாண்டே என்ற பெயரை கேட்டதுமே வட இந்திய பெண் என்பது நமக்கு நன்றாகவே தெரிந்துவிடும். பிரியங்காவை பொறுத்தவரை, அவர் அம்மாவிற்கு செல்ல பிள்ளை, அம்மா என்ன சொன்னாலும் அதை அப்படியே கேட்பார்.
பிரியங்கா விஜய் டிவியில் வேலை செய்து கொண்டு இருந்தபோது, அதே நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்த தயாரிப்பாளர் சாதிக் என்ற இஸ்லாமியரை காதலித்து. அவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால், இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதை அடுத்து அவர்கள் பிரிந்தனர் என்று கூறியிருக்கிறார்.,
வசி என்கிற வசிஷ்ட்
அதேபோல, Metro Mail சேனலுக்கு பேட்டி தந்துள்ள பயில்வான் ரங்கநாதன், வசி என்கிற வசிஸ்ட் என்பவர் யூடியூபர் தொழிலில் உள்ளவர்.. கடந்த 8 வருடங்களாக பிரியங்காவும், வசியும் நட்பில் உள்ளனர்.. ஒரு நிகழ்ச்சியில் பிரியங்காவின் கன்னத்தோடு கன்னம் உரசி, நெருக்கமாக நடனமாடியிருந்தனர்.. அப்போது, வசி தலைக்கு டை அடித்திருந்தார்.. பார்ப்பதற்கு இளமையாக இருந்தார்.. இருவரும் டேட்டிங் செய்ததாகவும் கேள்விப்பட்டேன்.
இப்போது பிரியங்காவுக்கு 36 வயதாகிறது,. அப்படியானால் மாப்பிள்ளைக்கு வயது என்னவாக இருக்கும் பாருங்க.. அவரது தோற்றத்தை பார்த்தால் 50 வயசு போல இருக்கிறது. 36 வயது பெண்ணை, இவர் திருமணம் செய்துள்ளது பொருத்தமானதாகவே உள்ளது. அவரது தோற்றத்தை பார்க்கும்போது, இது முதல் திருமணமாக இருக்கலாம், 3வது திருமணமாகவும் இருக்கலாம்.
மணி மைண்ட் பிரியங்கா
ஷூட்டிங் பங்களா
மணி மோட்டிவேடட் லேடி பிரியங்கா.. 10 பைசா யாருக்கும் செலவு செய்ய மாட்டார்.. இந்த கல்யாண செலவை விஜய் டிவியே ஏற்றுள்ளது.. திருமண நிகழ்வை விஜய் டிவியே ஒளிபரப்பி காசு பார்க்கும் என தெரிகிறது.. ஷூட்டிங் பங்களாவில் ரிசப்ஷன் நடந்துள்ளது.. யாரையுமே கல்யாணத்துக்கு அழைக்கவில்லை என்றார்கள்..
ஆனால் எல்லாமே பொய்.. இந்த திருமணத்துக்காக அழைப்பிதழ் அச்சிடப்பட்டுள்ளது.. மெஹந்தி வைக்கும் நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடந்துள்ளது.. நடிகை பாவனி கல்யாண பெண்ணின் தோழியாக இருந்திருக்கிறார்.இதெல்லாம் விஜய் டிவி செலவில்தான் நடத்தியிருக்கிறது.. திருமண அழைப்பிதழும் அச்சடிக்கப்பட்டுள்ளது.. வைதீக முறைப்படி அம்மி அருந்ததி திருமணம் நடந்துள்ளது.. எந்தவிதிமீறலும் இதில் இல்லை என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications