பாக்கியலட்சுமி: போலீஸிடம் ஏமாற்றிய சுதாகர் மனைவி.. அதிர்ச்சியில் பாக்யா! கோபி மீது விழுந்த பழி.. பாவம் இனியா

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் 2025, 14ஆம் தேதிக்கான எபிசோடில் பாக்கியா, கோபி, எழில், செழியன், நான்கு பேர் மீதும் சுதாகரின் மனைவி போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்திருக்கிறார். அதோடு போலீஸ் ஸ்டேஷனில் கோபி மீது வீண்பழி ஒன்றை சுதாகர் சுமத்தி இருக்கிறார். அதனால் பாக்கியா வீட்டில் என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.

இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் கோபி வீட்டிற்கு வந்து பாக்யா எழில் செழியன் என நான்கு பேரையும் போலீஸ் ஸ்டேஷனுக்கு வரச் சொல்லி இருப்பதாக சொல்லி கூப்பிட என்ன விஷயமாக இருக்கும் என்று எல்லோரும் கேட்கின்றனர். அதற்கு நிதிஷ் அம்மா போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்திருப்பதாக கோபி சொல்கிறார். உடனே இவர்கள் நான்கு பேரும் போலீஸ் ஸ்டேஷனுக்கு கிளம்பி போகின்றனர்.

Baakiyalakshmi Serial vijay TV

அதற்கு முன்பே சந்திரிகாவும் சுதாகரும் இன்ஸ்பெக்டரிடம் பேசிக் கொண்டிருக்கின்றனர். இவர்கள் வந்தவுடன் எதுக்கு அவங்க வீடு தேடி போய் அடிச்சிட்டு வந்தீங்க? என்று போலீஸ் கேட்க, கோபி பாக்யா அதிர்ச்சி அடைகின்றனர். என் தங்கச்சியே இது இவன் தொந்தரவு பண்ணிட்டே இருக்கிறான் அதனால் தான் அடிச்சோம் என்று சொல்கிறார். ஆனால் சந்திரிகா அவன் எதுவும் பிரச்சனை எல்லாம் பண்ணல, அவன் பொண்டாட்டியை தான் கூப்பிட போனான்.

ஆனா இவங்களோட தங்கச்சி தான் அவளுடைய பழைய லவ்வர் கூட பேசிகிட்டு இருக்குறா என்று இனியாவை பற்றி தப்பா பேச அதற்கு கோபமான பாக்யா ரெஸ்டாரண்டில் வந்து பிரச்சனை பண்ணின விஷயத்தை சொல்கிறார். பிறகு ஒருவர் மாற்றி மாற்றி பேசிக் கொண்டே இருக்க, கோபி அவங்க பையனை பத்தின உண்மைகளை மறைத்து கல்யாணம் பண்ணிட்டாங்க என்று சொன்னதும் சுதாகர் என்ன கோபி சொல்லுறீங்க எல்லாத்தையும் நான் கல்யாணத்துக்கு முன்னாடியே சொல்லிட்டேனே என்று சொன்னதும் கோபி அதிர்ச்சியில் இருக்கிறார்.

மொத்த குடும்பத்தினரும் அதிர்ச்சியாக கோபியை பார்க்க, கோபி என்னை இப்படி பொய் சொல்றீங்க என்று சுதாகரிடம் கேட்க, நீங்க பணத்துக்கு ஆசைப்பட்டு உங்க பொண்ணை கல்யாணம் பண்ணி கொடுத்தீங்க என்று சொன்னதும் சந்திரிகா இனியாவை பற்றி தப்பா பேச இருவருக்கு இடையே வாக்குவாதம் அதிகரிக்கிறது. இதனால் போலீஸ் இருவரையும் சமாதானப்படுத்தி இனிமே நீங்க அவங்க விஷயத்துல தலையிட வேண்டாம், அவங்க உங்க விஷயத்துல தலையிடமாட்டாங்க என்று எழுதிக் கொடுக்க சொல்லிவிட்டு அனுபவிக்கிறார்.

பிறகு சந்திரிகா சுதாகரிடம் இப்போதைக்கு அவங்க ஒரு கம்ப்ளைன்ட் கொடுத்தாங்கன்னா உங்க குடும்பமே உள்ளே போயிடும் அதனால நிதிஷ் கேஸ் முதல்ல முடியட்டும் அதுக்கப்புறம் பார்த்துக்கொள்ளலாம் என்று அனுப்பி வைக்கிறார். பிறகு கோபி, பாக்கியா, எழில், செழியன் நான்கு பேரும் வீட்டிற்கு வந்ததும் ஈஸ்வரி என்ன ஆச்சு என்று கேட்க, எழில் மற்றும் செழியன் நிதிஷை அடித்த விஷயத்தை சொல்கின்றனர்.

Baakiyalakshmi Serial vijay TV

அதோடு உண்மையை அவங்க அப்பா கிட்ட சொல்லிட்டதா பொய் சொல்லி மாத்தி மாத்தி பேசுறாங்க என்று சொன்னதும் ஈஸ்வரி அதிர்ச்சியில் இருக்கிறார். பிறகு இனியா வேலைக்கு கிளம்புகிறேன் என்று வெளியே வர அங்கு செழியன் மாமனார் வருகிறார். அவர் இனியாவிடம் ஆறுதல் சொல்லிவிட்டு வீட்டிற்குள் வருகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+