பாக்கியலட்சுமி: இனியாவுக்கு பிறந்தநாளில் கிடைத்த இன்ப அதிர்ச்சி! கோபி செய்த செயல்.. பதறிய பாக்யா

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் 2025 ஜூன் 20ஆம் தேதிக்கான எபிசோடில் இனியாவின் பிறந்த நாளுக்காக சர்ப்ரைஸ் ஆக கோபி சில கிப்ட்களை கொடுத்திருக்கிறார். அதே நேரத்தில் பாக்யாவிற்கு ரெஸ்டாரண்டில் எதிர்பாராத சம்பவமும் நடைபெற்று இருக்கிறது. என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.

பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் ஈஸ்வரி கோபமாக உட்கார்ந்து இருக்கிறார். அப்போது அங்கு வரும் செழியன் நேற்று எதோ கோபமாக இருந்த மாதிரி இருந்தது? என்ன விஷயம்? உங்க உடல்நிலை குறித்து அப்பா எனக்கு போன் செய்து விசாரிச்சிட்டே இருந்தாரு என்று சொல்ல, அவன் அதை மட்டும் தான் செய்வான் என்று ஈஸ்வரி சலிப்பாக பேசுகிறார். அப்போது கோபி வருகிறார். கோபியை பார்த்ததும் ஈஸ்வரி தன்னுடைய கோபத்தை காட்டிக் கொண்டிருக்கிறார்.

Baakiyalakshmi Serial vijay TV

பதறிப்போன ஈஸ்வரி

அப்போது கோபி மன்னிப்பு கேட்டு பேசிக்கொண்டு இருந்தாலும் ஈஸ்வரி அதை கண்டு கொள்ளாமல் இருப்பதால் நேற்று நீங்க என்கூட பேசலைன்னு நினைச்சுக்கிட்டே இருந்ததால எனக்கு நெஞ்சு வலி வந்திருச்சு என்று சொன்னதும், ஈஸ்வரி பதறிப்போய் இனி நான் உன்கிட்ட கோபப்பட மாட்டேன் என்று சொல்கிறார். பிறகு பாக்கியா நீங்கள் இருவரும் இப்படியே இருந்தால் எனக்கு வேலையில் கவனம் செலுத்த முடியும் என்று சொல்லிவிட்டு போகிறார்.

அட்வான்ஸ் பிறந்தநாள்

பிறகு இனியாவுடைய பர்த்டேக்கு ஷாப்பிங் போகணும் என்று கோபி சொல்லிக் கொண்டிருக்கும் போது இனியா வீட்டிற்கு வருகிறார். இனிமாவை பார்த்ததும் கோபி இனியாவுக்கு அட்வான்ஸ் பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்கிறார் பிறகு பாக்யாவும் இனியாவும் ஷாப்பிங் பண்ணுவதற்காக கிளம்புகின்றனர். அதைத்தொடர்ந்து கோபி இனியாவுக்காக டைமண்ட் மோதிரம் வாங்கிக் கொண்டு வருகிறார். வீட்டுக்கு வந்த இனியா அதை பார்த்து சந்தோஷத்தில் இருக்கிறார்.

குறை சொல்லும் ஈஸ்வரி

அப்போது இனியாவிற்கு பாக்கியா ஒரு புடவையை கொடுக்க அதையும் சந்தோஷமாக பெற்றுக்கொள்கிறார். அந்த புடவையை பார்த்ததும் ஈஸ்வரி என்ன இவ்வளவு மெல்லிசா இருக்கு என்று விசாரித்துக் கொண்டிருக்கிறார். பிறகு பாக்கியாவிடம் சொல்லிவிட்டு இனியா வீட்டிற்கு கிளம்புகிறார். அப்போது கோபி நானே விடுகிறேன் என்று கூட்டிக்கொண்டு போகிறார்.

கோபிக்கு சந்தேகம்

இனியாவிடம் பேசிக்கொண்டு வரும்போது இனியா அதை கவனிக்காமலே இருக்கிறார். நான் பிறந்த நாளுக்கு நம்ம வீட்டுக்கு உன்னையும் மாப்பிள்ளையும் அழைக்கவா என்று கேட்க அதற்கு இனியா வேண்டாம் என்று சொல்கிறார். அதனால் கோபிக்கு சந்தேகம் இருக்கிறது. ஆனாலும் உன்னுடைய பிறந்தநாளை விமர்சனமாக பண்ணலாம் என்று கோபி சொல்கிறார். மறுபக்கத்தில் பாக்கியா ரெஸ்டாரண்டில் இருக்கும் போது அங்கு பாக்யாவிடம் ஏற்கனவே பிரச்சனை செய்த கவுன்சிலர் வருகிறார்.

கவுன்சிலர் மன மாற்றம்

அவர் அமைதியாக வந்து சாப்பிட்டு விட்டு தான் சாப்பிட்டதற்கு பணத்தை கொடுத்துவிட்டு தன்னுடைய குடும்பத்திற்கும் வாங்கி கொண்டு போகிறார். அப்போது அங்கு ஒருவர் இன்னும் காபி வரல என்று சத்தம் போட அதற்கு அந்த நபரை கவுன்சிலர் மிரட்டுகிறார். இது என்னுடைய சிஸ்டர் கடை இங்க எந்த பிரச்சனையும் இருக்கக்கூடாது என்று வார்னிங் கொடுத்து விட்டு கிளம்புகிறார். கவுன்சிலர் மாற்றத்தை பார்த்து செல்வி இன்ப அதிர்ச்சி அடைகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+