பாக்கியலட்சுமி: கோர்ட்டில் இனியா சொன்ன வார்த்தை.. கோபத்தில் நிதிஷ் கேட்ட கேள்வி.. பாக்யா கொடுத்த பதிலடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் இனியா டைவர்ஸ்காக கோர்ட்டுக்கு போயிருக்கிறார். அங்கு சுதாகர் குடும்பத்தினரும் வந்திருக்கின்றனர். அப்போது நிதிஷ் இனியாவிடம் கேட்ட கேள்வியை பார்த்து மொத்த குடும்பத்தினரும் கோபத்தில் இருக்கின்றனர். என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில், ஈஸ்வரி இனியாவிற்காக சாமி கும்பிட்டுவிட்டு வருகிறார். குடும்பத்தினர் அனைவரும் நீதிமன்றத்திற்கு செல்ல தயாராகிறார்கள். செழியன் வீட்டில் இருக்கட்டுமென பாட்டி சொல்ல, நானும் வருகிறேன் என ஈஸ்வரி கூறுகிறார். இனியாவை கட்டிப்பிடித்து ஆறுதல் சொல்கிறார்.

Baakiyalakshmi Serial vijay TV

இனியாக்கு அட்வைஸ்

பின்னர் அனைவரும் காரில் கிளம்புகிறார்கள். இனியா, பாக்யா மீது சாய்ந்து வர, "பயப்படாத இனியா குட்டி" என பாக்யா சொல்கிறார். இனியா தண்ணீர் கேட்க, இல்லாததால் எழில் காரை நிறுத்தி தண்ணீர் வாங்க போகிறார். அந்த நேரத்தில் கோபி காரில் இருந்து இறங்கி இனியா அருகில் வந்து உட்காருகிறார்.

சிறிது நேரத்தில் கோர்ட்டுக்கு வந்ததும், உள்ளே அனைவரும் காத்துக்கொண்டிருக்கிறார்கள். சுதாகர் மற்றும் நித்திஷ் இருவரும் வருகிறார்கள். முதலில் வேறொரு வழக்கு நடைபெறுகிறது. பிறகு இவர்கள் பெயர் கூப்பிடப்படுகிறது. நீதிபதி, "கல்யாணம் ஆகி எத்தனை மாசம் ஆகுது?" என்று கேட்கிறார். அதற்கு அவர்கள் "இரண்டு மாசம்" என்று பதில் சொல்ல, "இரண்டு மாசத்திலேயே விவாகரத்தா?" என நீதிபதி கேட்கிறார். இனியாவின் வக்கீல், "அதற்கான காரணத்தை மனுவில் சொல்லியிருக்கிறோம்" என்கிறார். உடனே நீதிபதி அடுத்த மாதம் 15ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைக்கிறார்.

வழக்கு ஒத்திவைப்பு

நீதிமன்றத்தை விட்டு கோபி குடும்பம் வெளியே வந்ததும் வக்கீல் கோபியை தனியாக அழைத்து பேசுகிறார். பாக்யாவும், இனியாவும் வெளியே காத்துக்கொண்டிருக்கிறார்கள். எழில் அமிர்தாவுடன் போனில் பேசிக்கொண்டிருக்கிறார். அப்போது சுதாகர் இனியாவிடம் பேச வர, இனியா எதுவும் பேசாமல் காருக்குள் சென்றுவிடுகிறார். எழில் மற்றும் பாக்யாவிடம், "இனியாவுக்கு என் கூட பேச விருப்பம் இல்லை போல" என்று சுதாகர் சொல்கிறார். அதற்கு பாக்யா, "இனியாவுக்கு மட்டும் இல்லை, எங்களுக்கும் உங்களுடன் பேச விருப்பமில்லை. இது கோர்ட் என்று பார்க்கிறோம்" என்று பதிலளிக்கிறார். சுதாகர் அமைதியாக அங்கிருந்து சென்றுவிடுகிறார்.

வம்பு செய்யும் நிதிஷ்

மறுபக்கம் இனியா காருக்குள் போகும் போது நித்திஷ் கூப்பிட்டு, "நினைச்ச மாதிரியே டைவர்ஸ் அப்ளை பண்ணிட்ட, சந்தோஷம்தானே?" என்று கேட்கிறான். அதோடு "அப்புறம் என்ன பிளான்?" என்று கேட்கிறார். அதற்கு இனியா,"நான் என்ன பண்ணா உனக்கு என்ன?" என்று கேட்க, நிதிஷ் "நான் சொல்லவா? அந்த ஆகாஷை கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா இருப்ப, அப்படித்தானே?" என்று கேட்கிறான். இனியா எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறாள்.

"சொல்லுடி" என்று நித்திஷ் கேட்க, "வாடி போடின்னு சொல்ற வேலையெல்லாம் வெச்சுக்காத" என்று இனியா பதிலளிக்கிறாள். அதற்கு நிதிஷ், "இப்பவும் நீ என் பொண்டாட்டி தான்" என்கிறான். அந்த வார்த்தையை கேட்டாலே அருவருப்பா இருக்கு என்று இனியா சொல்ல, "அவன் பொண்டாட்டின்னு சொல்லும்போது இனிக்குது, என் பொண்டாட்டி ன்னு சொல்லும்போது அருவருப்பா இருக்குதா?" என்று நித்திஷ் ஆவேசமாக கேட்கிறான்.

இனியா போட்ட அடி

நிதிஷ், ஆகாஷ் மற்றும் இனியாவை சேர்த்து வைத்து பேசுகிறான். இதனால் டென்ஷன் ஆன இனியா, நிதிஷை அறைந்து விடுகிறார். அப்போது கோபி பாக்கியா எழில் மூன்று பேரும் அங்கு வந்ததும் நிதிஷ் எதுவும் பேசாமல் அங்கிருந்து போய் விடுகிறார் பிறகு எல்லோரும் காரில் வந்து கொண்டிருக்கின்றனர். அப்போது கோபி இனியாவுக்கு அட்வைஸ் செய்து கொண்டே வருகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+