பாக்கியலட்சுமி: நியூஸில் இனியா சொன்ன விஷயம்.. ஆடிப்போன சுதாகர்! கதறி அழுத பாக்யா, கோபி எடுத்த முடிவு!
சென்னை: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'பாக்கியலட்சுமி' சீரியலில் ஜூலை 23ஆம் தேதிக்கான எபிசோடில் சுதாகர் வீட்டிற்கு சென்ற இனியாவை சுதாகர் அவமானப்படுத்தியதனால் செய்தி சேனலில் இனியா தனக்கு நடந்த திருமணம் மற்றும் ஏமாற்றங்கள் குறித்து பேசுகிறார். இதனால் சுதாகர் குடும்பம் அதிர்ச்சியில் இருக்கின்றனர். அப்போது பாக்யா அழுது கொண்டிருக்கிறார். என்ன நடந்தது என்று பார்க்கலாம்
இன்றைய எபிசோடில், இனியா கோபத்துடன் பேசிக் கொண்டிருக்கையில், சுதாகர் "உங்க பொண்ணு, பொறுமையான பொண்ணுன்னு சொன்னீங்களே! இப்படி கத்துகிட்டு இருக்கு ஹாஸ்பிடல் கூட்டிட்டு போங்க" என்று கூறுகிறார். அதற்கு கோபி, "என் பொண்ணுக்கு ஆஸ்பத்திரிக்கு போக வேண்டிய அவசியம் இல்லை. உங்க குடும்பத்தில் இருக்கிறவங்க தான் போகணும்" என்று ஆவேசமாகப் பேசி இனியாவை அழைத்துச் செல்கிறார்.

பின்னர், பாக்கியாவுக்கு போன் செய்து, சுதாகர் வீட்டில் இருந்து இனியாவை கூட்டிட்டு வந்துட்டேன் என்று கோபி கூற, பாக்கியா நிம்மதி அடைகிறார். இனியாவை நினைத்து பாக்கியா கண் கலங்கி ஹோட்டலில் அழுது கொண்டிருக்க, செல்வி அவருக்கு ஆறுதல் கூறுகிறார்.
மறுபுறம், கோபி இனியாவை அழைத்துச் சென்று காபி வாங்கிக் கொடுத்து பேசுகிறார். "நான் ஏன் இப்படி கோபமாக பேசுகிறேன்?" என்று இனியா கேட்க, "அவங்க பையன் மேல நாம கம்ப்ளைன்ட் கொடுத்திருக்கோம். அதனால அவங்க இப்படித்தான் நடந்துக்குவாங்க. அதுக்காக இவ்வளவு பொய்யா சொல்லுவாங்க?" என்று இனியா வருத்தப்படுகிறாள். இந்த பிரச்சனையை எப்படியாவது தீர்த்து வைத்து, கண்டிப்பா உனக்கு டைவர்ஸ் வாங்கித் தர்றேன் என்று கோபி கூறுகிறார். இனியா, "வேணாம் டாடி, நான் ஆபீஸ்க்கு போறேன், என்னை விட்டுருங்க" என்று கூற, கோபி அங்கிருந்து கிளம்புகிறார்.
கொஞ்ச நேரத்தில் கோபி, பாக்கியாவின் ரெஸ்டாரண்டுக்கு வருகிறார். ஆகாஷை பார்த்ததும் அமைதியாகிறார். ஆகாஷ் வெளியில் வந்ததும், "நல்லா இருக்கியா ஆகாஷ்?" என்று கேட்க, ஆகாஷ் "நல்லா இருக்கேன்" என்று கூறிவிட்டு வெளியில் செல்கிறார். "ஒரு காபி கிடைக்குமா பாக்கியா?" என்று கோபி கேட்க, பாக்கியாவும் காபி கொடுக்கிறார். இருவரும் பேசுகின்றனர்.
"இனியா எப்படி இருக்கா?" என்று கோபி கேட்க, "அவளும் உன்ன மாதிரி தான், ஏதாவது பிரச்சனை வந்தா வேலையில டைவர்ட் பண்ணிக்கிறா" என்று பாக்கியா சொல்கிறாள். "செழியன் வாழ்க்கையில் பிரச்சனை வந்திருக்கு, எழில் வாழ்க்கையில் பிரச்சனை வந்திருக்கு. அப்போலாம் எல்லாத்தையும் சொல்லி சமாளிச்சு, எந்த பிரச்சனையா இருந்தாலும் பார்த்துக்கலாம்னு இருந்தேன். ஆனா இனியாவுக்கு வந்த பிரச்சனையை என்னால தாங்க முடியல" என்று அழுது கொண்டே சொல்கிறாள்.
அதற்கு கோபி, "இந்த பிரச்சனைக்கு எல்லாத்துக்கும் நான்தான் காரணம்னு நினைக்கும்போது, எனக்கு ரொம்ப குற்ற உணர்ச்சியா இருக்கு பாக்கியா. என் குழந்தை வாழ்க்கையை நானே கெடுத்துட்டேனோன்னு தோணுது. எல்லாத்துக்கும் காரணம் நான் தான். சரியா தூக்கம் வரமாட்டேங்குது, சாப்பிட முடியல" என்று வேதனையுடன் கூறுகிறார்.
"அடுத்த இயரிங் ஒரு மாசம் இருக்கு. அதுக்குள்ள இனியாவை ஒரு வாரம் அவளுக்கு பிடிச்ச இடத்துக்கு கூட்டிட்டுப் போகலாம். அவ சந்தோஷமா இருப்பா" என்று பாக்கியா கூற, "நானும் அதைத்தான் நினைச்சேன். அப்போ நம்ம எல்லாரும் ஒண்ணா போகலாம்" என்கிறார் கோபி. "நம்ம எல்லாருமா?" என்று பாக்கியா யோசிக்கிறாள். "நீ ஹோட்டல் திறந்து இருக்கேன்னு கூப்பிட தயங்குறியா? எனக்கு ஹோட்டல்லாம் முக்கியம் இல்ல, நான் ஒரு வாரம் ஹோட்டலை மூடிட்டு கூட வருவேன். இனியாவோட சந்தோஷம் தான் முக்கியம்" என்று பாக்கியா கூறுகிறாள்.
மறுபக்கம் இனியா ஆபீஸில் வேலை பார்த்து கொண்டிருக்க, அவளுடைய தோழிகள் டீ, காபி குடிக்க அழைக்கின்றனர். இனியா வரவில்லை என்று சொல்ல, ஏன் என்று கேட்கிறார்கள். இனியா நடந்த விஷயங்களை அவர்களிடம் சொல்கிறாள். "எவ்வளோ பேரோட பிரச்சனையை நம்ம இந்த நியூஸ் சேனல்ல சொல்லியிருக்கோம். ஏன் நம்ம பிரச்சனையே சொல்லக்கூடாது?" என்று தோழிகள் கேட்க, இனியாவும் சம்மதிக்கிறாள். பிறகு சுதாகர் குடும்பம் தன்னுடைய குடும்பத்தை ஏமாற்றி தனக்கு திருமணம் செய்து வைத்து விஷயத்தை பற்றியும், நிதிஷ் போதை பொருள் பழக்கத்திற்கு அடிமையானதால் குடும்பத்தில் நடந்த பிரச்சனை பற்றியும் இனியா பேசுகிறார். இதையெல்லாம் நிதீஷ் தன்னுடைய அப்பா, அம்மாவுடன் டிவியில் பார்க்கிறார். சுதாகர் இனியா பேசியதை கேட்டு கோபத்தில் இருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவு அடைகிறது.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்!












Click it and Unblock the Notifications