பாக்கியலட்சுமி: செல்வி முன்பு இனியா சொன்ன விஷயம்.. வெகுண்டு எழுந்த பாக்யா.. இனி தான் ஆட்டம் ஆரம்பம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் 2025 ஜூன் 27ஆம் தேதிக்கான எபிசோடில் பாக்யா ரெஸ்டாரண்டுக்கு வந்த இனியா சொன்ன விஷயத்தை வைத்து பாக்கியா முக்கிய முடிவு எடுத்திருக்கிறார். சில நாட்களாக அமைதியாக இருந்த பாக்கியா இனி புயலாக எழுந்திருக்கிறார். என்ன நடந்தது என்று பார்க்கலாம்.

பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் கோபி இனியாவை காரில் கூட்டிக்கொண்டு வந்து கொண்டிருக்கிறார். அப்போது இனியாவிடம் நீ நம்ம வீட்டுக்கே வந்துரு என்று கோபி சொல்ல, வேண்டாம் அப்பா இப்போதைக்கு சுதாகர் அங்கிள் என்கிட்ட எல்லா பிரச்சனையும் சரி செய்யலாம் என்று சொல்றாரு அதனால என்னை பற்றி நீங்க எதையுமே யோசிக்காதீங்க என்று சொல்ல, உன்ன நான் பற்றி எப்படி யோசிக்காமல் இருக்க முடியும் என்று கோபி கேட்க, கொஞ்சம் பொறுத்து பார்ப்போம் என இனியா ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்கிறார்.

Baakiyalakshmi Serial vijay TV

நீங்க அம்மாவாவோட ஆட்களை மதிக்காத மாதிரி தான் நிதிஷும் செய்கிறார் என்று சொன்னதும் கோபி ஒரு நிமிடம் மௌனமாக இருக்கிறார். பிறகு இனியா பாக்யாவின் ரெஸ்டாரண்டுக்கு வந்து நிற்கிறார். அங்கு கோபியோடுதான் தான் வந்தேன் என்று இனியா சொன்னதும், நேற்றும் நீ அப்பாவோட தான் வெளியில போன, இன்னைக்கும் அவரோட வந்து இருக்க எதுவும் பிரச்சனையா என்று பாக்கியா கேட்க, நான் டாடி கூட டைம் ஸ்பென்ட் பண்றது உனக்கு பொறாமையா இருக்கா என்று இனியா கேட்டதும் பாக்கியா சிரிக்கிறார்.

பிறகு எனக்கு பிரச்சனையே இல்ல நான் நல்லபடியாக இருக்கிறேன் நீ என்னை நெனச்சி யோசிச்சிட்டு இருக்காதாம்மா நான் இந்த ரெஸ்டாரன்ட் டெவலப் பண்றதுக்கு ஒரு ஐடியா வச்சிருக்கேன். அதைப்பற்றி சொல்றதுக்காக தான் வந்தேன் என்று சொல்ல என்ன விஷயம் என்று பாக்கியா கேட்டுக் கொண்டிருக்கிறார். அதற்கு இனியா நாம வரும் வழியில் இருக்கும் ஒரு ரெஸ்டாரண்டில் ஒரு போட்டி நடக்கிறது. அதில் கலந்து கொண்டு வெற்றி பெற்றால் அவர்களுடைய இன்னொரு ரெஸ்டாரண்டின் டீலர்ஷிப் நமக்கு தருவாங்க என்று சொன்னதும் பாக்கியா அவ்வளவு பெரிய ரெஸ்டாரண்டில் நம்மால் அங்குள்ள செஃப் கூட போட்டி போட முடியுமா? என்று கேட்கிறார்.

இதற்கு முன்பு நீ எவ்வளவு தைரியமா பேசுவ ஆனா ஏமா இப்ப இப்படி மாறிட்ட, பாட்டி மாதிரி பேசாத என்று சொல்லிக்கொண்டு இனியா செல்வி மற்றும் பாக்யாவை அந்த ரெஸ்டாரண்டிற்கு கூட்டிக்கொண்டு போகின்றார். அங்கு இருப்பவர்கள் எல்லாரும் இவங்களா? இந்த போட்டியில் கலந்து கொள்கிறார்கள் என்று ஏளனமாக பார்க்கிறார்கள். பிறகு அந்த ரெஸ்டாரண்டில் ஓனரிடம் கூட்டிக் கொண்டு போகின்றனர்.

Baakiyalakshmi Serial vijay TV

அவர் நீங்க நினைக்கிற மாதிரி இது சின்ன காம்பெடிஷன் கிடையாது. இது பெரிய காம்படிஷன் இங்க நிறைய செஃப் வருவாங்க, தமிழ் நாட்டு உணவு மட்டுமல்லாமல் பல நாட்டு உணவுகளையும் செய்யணும். youtube பார்த்து வீட்டில் சமைக்கிற மாதிரி இல்ல என்று சொல்ல அப்போது பாக்கியாவிற்க்கு சுர்ரென்று கோபம் வருகிறது. தான் ஏற்கனவே பல போட்டிகளில் கலந்து கொண்டிருக்கிறேன் என்று தன்னுடைய ரெஸ்யூமை கொடுக்கிறார். நீங்க குவாலிபிகேஷன் இருந்தா உங்களை கூப்பிடுவாங்க என்று சொல்கிறார். அதற்கு இனியா எப்போ கால் பண்ணுவீங்க என்று கேட்க, எங்களுக்கு தோணும் போது கூப்பிடலாம் என்று சொல்லி அனுப்புகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+