விஜய் டிவியில் முடிவுக்கு வரும் டாப் சீரியல்.. இல்லத்தரசிகள் கஷ்டப்பட்டாலும் இணையவாசிகள் கொண்டாட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செல்லம்மா சீரியல் முடிவுக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த சீரியலில் கதைக்களம் முடிவை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கும் நிலையில் ரசிகர்கள் இதை பாராட்டி வருகிறார்கள். அதே நேரத்தில் சீரியலின் தீவிரமான பெண் ரசிகைகள் இந்த சீரியலின் முடிவு குறித்து வருத்தத்தையும் தெரிவித்து வருகிறார்கள்.

தொலைக்காட்சியின் சன் டிவி சேனல் தான் சீரியலுக்கு பெயர் வாங்கிய சேனலாக இருந்தது. அதற்கு பிறகு இப்போது அதற்கு போட்டியாக பல சேனல்கள் வந்திருக்கிறது. அதிலும் விஜய் டிவி அதிகமான டஃப் கொடுத்துக் கொண்டிருக்கிறது. விஜய் டிவியில் அதிகமான ரியாலிட்டி நிகழ்ச்சிகள் அடுத்தடுத்து வந்து கொண்டே இருப்பதால் அது இளைஞர்கள் மத்தியிலும் அதிகமாக பேசப்படுகிறது. இந்த நிலையில் சமீபத்தில் டாப் 10 சீரியல்கள் தரவரிசையில் விஜய் டிவி சீரியல்கள் முன்னணி இடத்தை வகித்து வருகிறது.இந்த நிலையில் சமீபத்தில் டாப் 10 சீரியல்கள் தரவரிசையில் விஜய் டிவி சீரியல்கள் முன்னணி இடத்தை வகித்து வருகிறது.

television vijay tv

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல், பாக்கியலட்சுமி சீரியல் ,பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் போன்றவை முன்னணி இடத்தை பிடித்திருந்தாலும் இதில் மதிய நேரத்தில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் பெண் ரசிகர்களை அதிகமாக கவர்ந்து இருக்கிறது. அதிலும் செல்லமா சீரியலுக்கு என்று அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர்.

ஆனால் இந்த சீரியலில் கதைக்களத்தை இணையத்தில் இணையவாசிகள் அதிகமாக கலாய்த்து வருகிறார்கள். சமீபத்தில் கூட இந்த சீரியலில் கதாநாயகன் போல வில்லன் முகத்தில் மாஸ்க் போட்டு உருமாற்றம் அடைந்து இருந்தார். இது பெரிய அளவில் கலாய்க்கப்பட்டிருந்தது. அதுபோல இந்த சீரியலில் கதாநாயகி ஏற்கனவே கல்யாணம் முடிந்து ஒரு குழந்தைக்கு அம்மாவாக இருக்கிறார். ஆனால் பிறகு தன்னுடைய மாமா பையன் கதாநாயகன் மீது காதல் ஏற்படுகிறது.

அவர்கள் இருவரும் சேர்ந்தார்களா? இல்லையா? என்பது தான் கதைக்களமாக இருக்கிறது. அதில் கதாநாயகி செல்லமாவின் முதல் கணவர் அடிக்கடி வந்து பிரச்சனை செய்து கொண்டே இருக்கிறார். இப்போது அவரை கொலை செய்த விட்டார் என்று செல்லம்மா கைது செய்யப்பட்டு இருக்கிறார். இந்த சீரியலில் பல பிரச்சனைகள் முடிவுக்கு வந்திருக்கும் நிலையில் சீரியலும் விரைவில் முடிவுக்கு வர இருக்கிறது என்று தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

இந்த செல்லம்மா சீரியல் 700 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி வரும் நிலையில் இன்னும் ஒரு சில வாரங்களில் சீரியல் முடிவுக்கு வர இருக்கிறது. ஏற்கனவே விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட இருக்கும் நிலையில் பல சீரியல்கள் முடிவுக்கு வரும். ஒரு சில சீரியல்களில் நேரம் மாற்றம் ஏற்படுவது வழக்கம்தான். அந்த வரிசையில் தான் இப்போது செல்லம்மா சீரியல் முடிவுக்கு வர இருக்கிறது என்று தெரிகிறது.

சேனலின் இந்த முடிவுக்கு இணைவாசிகள் மத்தியில் பாராட்டப்படுகிறது. ஏற்கனவே இந்த சீரியலில் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் அர்னாவ் அவருடைய குடும்ப பிரச்சனையில் போலீஸ் ஸ்டேஷனுக்கு போன போது கூட அவருக்கு பதிலாக வேறு கதாநாயகன் வைத்து நடிக்க வைக்காமல் கதையை மாற்றம் செய்திருந்தனர். மீண்டும் அவர் தான் நடித்துக் கொண்டிருக்கிறார். அதுபோல இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கும் அக்ஷிதா குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்டிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+