புது வீடு கட்டியாச்சி..நெகிழ்ச்சியோடு பகிர்ந்த KPY தீனா.. ஆனாலும் அந்த வார்த்தைகள் தான் வேற லெவல்
கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த தீனா தன்னுடைய சொந்த ஊரில் புது வீடு கட்டி இருக்கிறார்.
சென்னை: விஜய் டிவியில் அறிமுகமாகி தற்போது வெள்ளி திரையில் கலக்கி கொண்டு இருக்கும் நடிகர் தீனா தன்னுடைய சொந்த ஊரில் பிரம்மாண்டமாக வீடு ஒன்றை கட்டியிருக்கிறார்.
கஷ்டப்பட்டு தான் சம்பாதித்து கட்டிய வீட்டை பற்றி நெகிழ்ச்சியோடு தீனா பதிவு வெளியிட்டு இருக்கிறார்.
தீனாவின் புது வீடு குறித்து ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்.

ஆரம்ப காலம்
சின்னத்திரையில் அறிமுகம் ஆகி தற்போது வெள்ளித் திரையில் காமெடி நடிகராக ஜொலித்துக் கொண்டிருக்கும் தீனாவை "பிராங்க் கால்" என்று சொன்னாலே பலருக்கும் ஞாபகத்திற்கு வந்துவிடும். 1990 இல் திருவாரூரில் பிறந்த தீனாவின் பெயர் தினகரன் தானாம். இவர் நிகழ்ச்சிகளில் மட்டுமல்லாமல் தன்னுடைய நண்பர்களோடு எப்போதும் ஜாலியாக சிறுவயதிலேயே கலாய்த்து கொண்டு இருந்திருக்கிறார். பள்ளியில் படிக்கும் போது இவர் அதிகமாக அதிகமாக டீச்சரிடம் அடி வாங்கும் ஒரு மாணவராக தான் இருந்திருக்கிறார். அடிக்கடி இவர் கிளாசுக்கு வெளியே நின்று கொண்டிருக்கும் மாணவர்களில் இவரும் ஒருவராக இருந்திருக்கிறார்.

பெற்றோரின் பயம்
காலேஜில் படித்துக் கொண்டிருக்கும் போது இவர் தன்னுடைய காலேஜ் விழாக்களிலும் பலவற்றில் இவர் கலந்து கொண்டிருக்கிறார். அப்போதுதான் இவருடைய கவுண்டர் ஸ்டார்ட் ஆகியிருக்கிறது. அந்த நேரத்தில் இருந்து தான் இவர் நாம் மீடியாவுக்கு ஏன் ட்ரை பண்ண கூடாது என்று அதற்காக முயற்சி செய்திருக்கிறார். ஆனால் அந்த ஆசையை தன்னுடைய அம்மா அப்பாவிடம் சொல்லும்போது ரொம்பவே பயந்திருக்கிறார். அதுபோல இவருடைய வீட்டிலும் அதுவெல்லாம் நமக்கு செட் ஆகாது என்று ஸ்ட்ரிட்டாக சொல்லிவிட்டார்களாம்.

போராட்டத்தில் கிடைத்த வெற்றி
பிறகு வீட்டில் சென்னைக்கு வேலைக்கு செல்வதாக சொல்லிவிட்டு கிளம்பி சென்னையில் வேலைக்கு சேர்ந்திருக்கிறார். ஒரு ஆபீஸில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும்போது இவர் விஜய் டிவி ஆபீஸ் முன்பு தினமும் நின்று கொண்டு செல்வாராம். எப்படியாவது வரு வாய்ப்பு கிடைத்து விடும் என்று இவர் அதற்காக போராடிக் கொண்டிருக்கிறார். அப்போதுதான் இவருக்கு விஜய் டிவியில் ஏடியாக வேலை செய்ய வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதற்கு பிறகு தான் இவர் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் சரத்துடன் சேர்ந்து பெர்பார்மன்ஸ் பண்ணி இருக்கிறார்.

வெள்ளி திரையிலும் அறிமுகம்
தீனா ஆபீஸில் வேலை பார்க்கவில்லை கம்பெனியை விட்டு விலகி விஜய் டிவிக்கு வந்து விட்டேன் என்று சொல்லும்போது கூட அவருடைய வீட்டில் ரொம்பவே பயந்தார்களாம். இவர் விஜய் டிவியில் பிராங்கால் பேசி பலரையும் கதிகலங்க வைத்திருக்கிறார். இவருடைய போன் கால் வந்தாலே பலரும் தெரித்து ஓடும் அளவிற்கு இவர் டைமிங் காமெடியால் அடுத்தடுத்து அனைவரையும் அதிர வைத்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் தற்போது இவர் சின்னத்திரையில் இருந்து வெள்ளிதிரையிலும் பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

புது வீடு கட்டியாச்சி
தீனா,பவர் பாண்டி திரைப்படத்தில் மூலம் திரைப்படத்தில் அறிமுகமாகி வந்த நிலையில் தீனாவை ஒரு கதாநாயகனாக மாற்றியது தனுஷ் தான் என்று அவரே கூறி இருக்கிறார். இந்த நிலையில் தன்னுடைய சொந்த ஊரில் முதல் முறையாக தான் கட்டிய வீட்டு புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருந்த தீனா அந்த புகைப்படத்திற்கு, "ஒரு வீடு சுவர்கள் மற்றும் விட்டங்களால் செய்யப்படுகிறது; காதல் மற்றும் கனவுகளுடன் ஒரு வீடு கட்டப்பட்டுள்ளது, என்னுடைய பூர்வீகத்தில் கனவு வீடு கட்டி விட்டது" என்று தன்னுடைய கிரகப்பிரவேச புகைப்படங்கள் மற்றும் தன்னுடைய குடும்பத்தினரோடு சேர்ந்து எடுத்த புகைப்படங்களையும், தன்னுடைய பிரமாண்டமான வீட்டின் புகைப்படத்தையும் ரசிகர்களுடன் பகிர்ந்து இருக்கிறார். தற்போது இந்த புகைப்படம் அதிகமாக ரசிகர்களால் லைக் செய்யப்பட்டு வருகிறது. பலர் பாராட்டி வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
-
அமைதியா இருங்க... இல்லன்னா.. 83வது பிறந்தநாளில் ரசிகர்களிடம் கடுப்பான இளையராஜா! -
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
ரீல்ஸ் மோகம்.. மகனுக்கு உதட்டில் முத்தம்.. சீரியல் நடிகையை திட்டும் நெட்டிசன்கள்.. அவரே கொடுத்த விளக்கம் -
“வைகை அணையில் கூலி வேலை பார்த்த இளையராஜா, இசைஞானி ஆனது எப்படி? முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?” -
சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் படிக்கட்டில் அந்த சத்தம்! யாருமே கவனிக்காத நடிகர் திலகத்தின் கை ரகசியம் -
சிவகார்த்திகேயனால் 120 கோடி கடன்? தயாரிப்பாளர் கண்ணீர்... "இன்னும் 2 படம் பாக்கி இருக்கு" என உருக்கம்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications