பிக் பாஸ் முடிந்ததும் விஜய் டிவியில் தொடங்கிய புது நிகழ்ச்சி..இளைஞர்களின் வளர்ச்சிக்கு புதிய முயற்சி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் தமிழ் சீசன் 8வது நிகழ்ச்சி முடிவுக்கு வந்ததை தொடர்ந்து விஜய் டிவியில் புது நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது. அதற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அந்த நிகழ்ச்சிக்கு ஸ்டார்ட்அப் சிங்கம் என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.
ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு பெயர் வாங்கிய விஜய் டிவியில் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகள் புதியது புதியதாக ஒளிபரப்பாகி வருகிறது. மற்ற மொழி சேனல்களில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் காப்பியடித்தும் அல்லது அதே போல புதுமையாக முயற்சி செய்தும் விஜய் டிவியில் சில ரியாலிட்டி நிகழ்ச்சிகள் தொடங்கி வருகிறது. அதில் ஒரு நிகழ்ச்சி வெற்றி பெற்று விட்டால் அடுத்தடுத்த சீசன்கள் தொடங்குவதும் வாடிக்கையாக இருக்கிறது.

சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சி 8வது சீசன் முடிவுக்கு வந்திருக்கிறது. அதுபோல பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவுக்கு வந்ததும் விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி தொடங்குவது தான் வாடிக்கை. ஏற்கனவே குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கடந்த சீசனில் பெரும் பிரச்சனை ஏற்பட்டது.
அதாவது போட்டியாளராக வந்த பிரியங்கா மற்றும் தொகுப்பாளராக இருந்த மணிமேகலை இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து மோதல் பெரிய அளவில் இணையத்தில் சண்டையாக வெடித்தது. இதனால் அடுத்த சீசன் தொடங்குமா? இல்லையா? என்பதே கேள்விக்குறியாக இருக்கிறது. இந்த நிலையில் விஜய் டிவியில் புதியதாக ரியாலிட்டி நிகழ்ச்சி ஒன்று வெளியாக இருப்பதாக ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
அந்த நிகழ்ச்சி வேறு எதுவும் இல்லை ஸ்டார்ட் அப் சிங்கம் என்ற நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சியில் வித்தியாசமான பொருட்களை கண்டுபிடித்தவர்கள் அல்லது தயாரித்தவர்கள் தங்கள் தொழிலுக்கு தேவையான முதலீட்டாளர்களை பெறும் நிகழ்ச்சியாக தான் இருக்கிறது.

இந்த நிகழ்ச்சியில் தங்களுக்கு திறமை இருந்தாலும் அதை மேலும் மெருகேற்றுவதற்கு வாய்ப்பு இல்லாமல் இருக்கும் இளைஞர்களும், தொழில்முனைவோர்ஙளும் கலந்து கொள்ளும் வகையில் இருக்கிறது. ஏற்கனவே உலகம் முழுவதும் பிரபலமான Shark Tank நிகழ்ச்சி ஹிந்தியில் நடைபெற்று வருகின்றது.
அதேபோன்று ஒரு நிகழ்ச்சி தான் இப்போது விஜய் டிவியில் ஸ்டார்ட் அப் சிங்கம் என்ற பெயரில் ஒளிபரப்பாக இருக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வமான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. ஹிந்தியை போலவே தமிழிலும் இதற்கு வரவேற்பு கிடைக்குமா என்பது பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அதே நேரத்தில் இந்த நிகழ்ச்சி வரும் ஜனவரி 26 ஆம் தேதி முதல் ஞாயிறு தோறும் காலை 10 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications