ராத்திரி 9 மணிக்கு தெருவில் போகாதீங்க.. உருகிய அம்மு.. நீயா நானா எடிட் பண்ணாத ஃபுட்டேஜ்: பிரபலம் நச்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான நீயா நானா நிகழ்ச்சியில் தெரு நாய்கள் குறித்து நடைபெற்ற விவாதம் பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.. மழை வெள்ளம் வந்தால், பிரட், பிஸ்கட், நாப்கின், என எதுவுமே பாதிக்கப்பட்டவர்களுக்காக வாங்கி தராதவர்கள், ரூல்ஸ் பேசுகிறார்கள் என்று மூத்த வழக்கறிஞர் தமிழ்வேந்தன் தெரிவித்துள்ளார்.. 9 மணிக்கு மேலே தெருவில் நடக்க வேண்டாம் என்கிறார் படவா கோபி.. இது ஆவணமான வார்த்தை.. பூர்ஷ்வா மென்ட்டாலிட்டி என்றும் கடுமையாக சாடியிருக்கிறார்.
நீயா நானா நிகழ்ச்சியில், இளம் தந்தை ஒருவர் தன்னுடைய 6 வயது மகனை பள்ளிக்கு கூட்டிச் செல்லும் போது, குறுக்கே வந்த நாயை தவிர்க்க வண்டியை திருப்பியபோது, விபத்தில் சிக்கி தன்னுடைய கண்முன்னே மகன் உயிரிழந்ததாக கண்ணீருடன் பேசியிருந்தார்.

அதேபோல, நாய்களுக்கு ஆதரவாக பேசிய அணியில் இருந்த சுசி வெங்கட், தானும் ஒரு விபத்தில் சிக்கியதாக சொல்லி, அதை ஒரு குழந்தையுடன் ஒப்பிட்டு பேசியிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், இணையத்திலும் கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டார்.
அம்மு முகம்
அதேபோல, 2025ம் ஆண்டில் மிகவும் எரிச்சலூட்டும் முகம் அம்மு உடையது என்று கூறி, சிலர் சோஷியல்மீடியாவில் ஷேர் செய்தார்கள்... நாய்களுக்காக உருகும் அம்முவுக்கு மனிதர்களுக்காக பேசத் தெரியாமல் போய்விட்டதே? என்றும் கேள்விகளை எழுப்பினார்கள்..
நாய்கள் எப்போதுமே நியூசன்ஸ்தான்.. கடலில் படகில் சென்று மீன் பிடிப்பது முதல், விமானங்கள் வானில் பறப்பதுவரை அனைத்துமே இயற்கைக்கு எதிரான விஷயங்கள்தான்.. எனினும், மனிதன் வாழ்வதற்கு தகுதியான இடமாக உலகை மாற்றுவதற்காகவே, இவைகளை செயல்படுத்துகிறோம். குழந்தையையும், தெரு நாயையும் இணைத்து பேசுகிறார்களே சரியா? எவ்வளவு பெரிய அபத்தமான வார்த்தை இது?
ஜீவகாருண்யம்
தெருநாய் என்னை கடித்துவிட்டால் நான் யார் மீது வழக்கு போடுவேன்? யாரெல்லாம் நாய்க்கு சாப்பாடு போடுகிறார்களோ, அவர்கள்தான் இதற்கு பொறுப்பு என்று, இதைதான் நீதிமன்றம் சொன்னது,
ஜீவகாருண்யம் என்பது நாய்கள் மீது மட்டும் அதிகமாவது ஏன்? கரப்பான்பூச்சி, கொசு, பல்லிகளும் உயிர்கள்தானே? 4 நாய்கள் ஒன்று சேர்ந்து திரண்டு வந்துவிட்டால், மாற்றுத்திறனாளி எப்படி ஓடுவார்? பல பச்சிளம் குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்து கொன்று வருபவர்களை பற்றி எந்த குரலும் உயர்த்தாதவர்கள், பொள்ளாச்சி சம்பவம், அண்ணா பல்கலை சம்பவத்துக்கெல்லாம் வாய் திறக்காதவர்களுக்கு நாய் மேல மட்டும் நேசம் வந்துவிட்டது.
நாய்கள் குழந்தை
நடிகை அம்மு, சிங்கிளாக இருப்பதால், குழந்தைகளை பறிகொடுத்தவர்களின் வலி, வேதனையை அவரால் உணர முடியவில்லை.. நாய்களை குழந்தை என்கிறார் அம்மு.. உண்மையிலேயே ஆதரவற்ற குழந்தைகளை அம்மு தத்தெடுத்து வளர்க்க வேண்டியதுதானே?
9 மணிக்கு மேலே தெருவில் நடக்க வேண்டாம் என்கிறார் படவா கோபி.. இது ஆவணமான வார்த்தை.. பூர்ஷ்வா மென்ட்டாலிட்டி.. 9 மணிக்கு மேல ஒருத்தர் வீட்டுக்கு வேண்டுமானால் நாம் போகாமல் இருக்கலாம்.. ஆனால், நான் வரிப்பணம் கட்டும் சாலையில் நடக்க கூடாது என்றால் எப்படி? யாரும் எந்த சாலையிலும் செல்லலாம்..
எடிட் செய்யப்படாத ஃபுட்டேஜ்
8 மணி நேர நீயா நானா ஷோவை வெட்டி விட்டதாகவும், ரா-ஃபுட்டேஜை வெளியிட வேண்டும் என்றும் சொல்கிறார்கள்,.. இந்த ஒரு பேச்சுக்கே இவ்வளவு டிரோல் செய்யப்படுகிறது, இன்னும் எடிட் செய்யப்படாத ஃபுட்டேஜ் என்றால் ஒரு மாசத்துக்கு இவங்கதான் கன்டென்ட்டே.
தெருநாய்களை தங்களது நாய் என்று அரசாங்கம் சொல்கிறது.. எனவே, இதுபோன்ற நாய்களை எடுத்து சென்று அரசாங்கம் அடைத்துவிட நேர்ந்தால், அந்த நாய்களுக்கு உணவுற்கான ஸ்பான்சர்களை நாய் பிரியர்கள் தாராளமாக தரலாம்.. நாய் வளர்ப்பதால் இங்கு யாருக்கும் பிரச்சனை இல்லை, ஆனால், நாய்களால் வரும் தொந்தரவுகளுக்கு யார் பொறுப்பேற்பது? என்பதுதான் பிரச்சனையே.
மழை வெள்ளம் வந்தால், பிரட், பிஸ்கட், நாப்கின், என எதுவுமே பாதிக்கப்பட்டவர்களுக்காக வாங்கி தராதவர்கள், ரூல்ஸ் பேசுகிறார்கள்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications