நீயா நானா இனிமேல் வராதா? கைமாறிய விஜய் டிவி.. அந்த சேனலும் "அவங்க" கையில் போயிருச்சு: பிரபலம் பளிச்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் நீயா நானா நிகழ்ச்சியில் மும்மொழி கொள்கை தொடர்பான விவாதம் ஒளிபரப்பாக இருந்த நிலையில் கடைசி நேரத்தில், அது ஒளிபரப்பப்படவில்லை.. கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கான காரணம் உறுதியாக தெரியவில்லை. எனினும், நிகழ்ச்சியை ரத்து செய்வதற்கு அழுத்தம் தரப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் சுபைர் தன்னுடைய கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

Aagayam Tamil யூடியூப் சேனலுக்கு பேட்டி ஒன்றை தந்துள்ளார். அதில், "மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாகவும், மும்மொழி கொள்கைக்கு எதிராகவும் ஒரு எபிசோட் தயாரானது.. அந்த விவாத நிகழ்ச்சியை ஷூட் செய்துவிட்டு, அதை ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்புவதற்காக, புரமோ வெளியிட்டார்கள்.

Television Vijay TV Neeya Naana

ஆனால், அந்த இன்ஸ்டா போஸ்ட் வெளியானதுமே, உடனே அது டெலிட் செய்யப்பட்டுவிட்டது.. பிறகு ஞாயிற்றுக்கிழமை வேறொரு விவாத நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்பட்டது.. இது தொடர்பாக விசாரித்தபோதுதான், பல்வேறு தகவல்கள் வெளியாயின.


பாஜக ஆதரவாளர்கள் பங்கேற்பு

அதாவது, மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாகவும், மும்மொழி கொள்கைக்கு எதிராகவும் விவாதம் நடத்தப்பட்டுள்ளது. மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக பாஜகவை சேர்ந்த சிலர் விவாதத்தில் பங்கேற்றுள்ளனர். எதிராகவும் சிலர் விவாதத்தில் பங்கேற்றிருந்தனர்.

இதில், மும்மொழி கொள்கை எதிர்ப்பவர்கள் கேட்கக்கூடிய கேள்விகளுக்கு, அந்த கொள்கையை ஆதரிப்பவர்களிடம் சரியான பதில் இல்லை என்றும், பல இடங்களில் பதில் சொல்ல முடியாமல் பல்ப் வாங்கியிருப்பதாகவும் தகவல் வெளியானது. 4 மணி நேரம் ஷூட் நடந்தும், அது ஒளிபரப்பப்படவில்லை. அழுத்தம் தரப்பட்டுள்ளதால், நிகழ்ச்சி ஒளிபரப்பப்படவில்லை என்றும் தகவல்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன.

அழுத்தம் தரப்பட்டதா

கடந்த 3 மாதங்களுக்கு விஜய் டிவியை ஜியோ வாங்கிவிட்டது. அதனால்தான், அரசியல் தரப்பில் அழுத்தம் இருக்குமோஎன்ற சந்தேகம் வலுத்துள்ளது.. காரணம், வடஇந்திய ஊடகங்கள் முழுவதுமே ஆளும் தரப்புக்கே சாதகமாக உள்ளது.. ஆளும் தரப்பை எதிர்த்து செய்திகளை வெளியிடுவது கிடையாது. என்டிடிவியையும் விலைகொடுத்து வாங்கிவிட்டார்கள்.

பாஜகவை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள், பாஜக அனுதாப தொழிலதிபர்கள் கட்டுப்பாட்டில்தான் வடமாநில ஊடகங்கள் உள்ளன. அதுபோல தமிழ்நாட்டிலும் அந்த வேலை ஆரம்பமாகிவிட்டதோ என்ற சந்தேகம் எழுகிறது.

மும்மொழி கொள்கை விவாதங்கள்

மும்மொழி கொள்கை சம்பந்தமாக சாதக, பாதக விவாதமாகவே இருந்தாலும், அதை பேலன்ஸ் செய்து, எடிட் செய்து ஒளிபரப்பியிருக்கலாம். ஆனாலும் செய்யவில்லை? அதற்கு பின்னாலும் ஒரு காரணம் இருப்பதாக சொல்கிறார்கள்.

அதாவது, குடும்பத்துடன் பார்க்கக்கூடிய , பெண்களின் ஆதரவை பெற்றசேனலாக விஜய் டிவி உள்ளது. அதனால், மும்மொழி கொள்கைக்கு எதிராக விஷயங்கள் நடப்பதாக, பொதுமக்களிடம் எந்தவிதமான தகவலும் போய் சேர்ந்துவிடக்கூடாது, அப்படி பொதுமக்கள் இந்த பிரச்சனையை புரிந்துகொண்டால், பெண்கள் இந்த விஷயத்தை கையில் எடுத்துவிட்டால், அது காட்டுத்தீ போல பரவிவிடும்.

விலைக்கு வாங்கப்பட்ட சேனல்

எனவே, யாரும் இதை பற்றி பேசிவிடக்கூடாது, அதை கட்டுப்படுத்துவதற்காகவே, நிகழ்ச்சியை அழுத்தம் தந்து நிறுத்தியிருப்பதாக கூறப்படுகிறது. உண்மையிலேயே இது ஜனநாயகத்துக்கு ஆபத்தான விஷயம் . இன்னொரு தமிழ் நியூஸ் சேனலையும், வடநாட்டு தரப்பில் விலைக்கு வாங்கிவிட்டார்கள்.

ஒரு கருத்தை ஒருவர் சொல்கிறார், இன்னொருவர் எதிர்கருத்தை சொல்கிறார் என்றால், இரண்டையுமே ஒளிபரப்பலாமே. அதை முடக்குவதும் சரியல்ல.. இவ்வளவு பெரிய பிரச்சனை ஆகிவிட்டது. இதை பலரும் பேச ஆரம்பித்துவிட்டதால், மீண்டும் ரீ-கரெக்‌ஷன் செய்து ஒளிபரப்ப வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

அழுத்தம் தரப்படுமா

ஆனால், இனிமேல் இதுபோன்ற நிகழ்ச்சிகளை செய்ய வேண்டாம் என்ற அழுத்தம், நீயா நானாவுக்கு தரப்படலாம். சில விதிமுறைகள், சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம்.

ஏற்கனவே கார்ப்பரேட் கையிலிருந்த விஜய் டிவி இன்னொரு கார்ப்பரேட் கைக்கு மாறியிருக்கிறது.. அதனால்,
பழைய வீர்யத்துடன் நீயா நானா இருக்குமா? முழுக்க முழுக்க பொழுதுபோக்காகவே மாறிவிடுமா? என்பது தெரியவில்லை..பொறுத்திருந்து பார்ப்போம்" என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+