விஜய் டிவி பிரபலங்களின் புது சீரியல்! யாரெல்லாம் இருக்காங்கன்னு பாருங்க! வினுஷா முதல் சித்தார்த் வரை
சென்னை: விஜய் டிவியில் இன்று புதிய சீரியலுக்கான பட பூஜை நடைபெற்றிருக்கும் நிலையில் அது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. அந்த புது சீரியலுக்கு "பனிவிழும் மலர்வனம்" என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. அதோடு இந்த சீரியலில் விஜய் டிவி பிரபலங்கள் பலர் நடிக்கிறார்கள்.
அந்த வகையில் இந்த சீரியலில் பாரதி கண்ணம்மா சீரியலின் மூலம் பிரபலமடைந்த நடிகை வினுஷா தான் இந்த சீரியலிலும் கதாநாயகியாக நடிக்கிறார். அதுபோல ராஜா ராணி சீரியலில் ஆலியா மானசாவின் மாமனாராக நடித்த நடிகர் ரவி இந்த சீரியலிலும் முக்கிய கேரக்டரின் நடிக்கிறார். அதுபோல ஈரமான ரோஜாவே சீரியலில் பிரபலம் அடைந்த நடிகர் சித்தார்த் இந்த சீரியலில் கதாநாயகனாக நடிக்கிறார்.

நடிகை வினிஷா மற்றும் சித்தார்த் ஜோடி முதல் முறை இணைந்தாலும் இது மக்கள் மத்தியில் அதிகமாக பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுபோல இந்த சீரியலில் ஜீ தமிழில் முத்துப்பாண்டியாக நடித்து வரும் நடிகர் சத்யா முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். அதுபோல தமிழும் சரஸ்வதியும் சீரியலில் அர்ஜுனாக நடிக்கும் நடிகர் ரயான் இந்த சீரியலில் நடிகர் ரவியின் மகனாக நடிக்கிறார்.
முடிஞ்ச வரைக்கும் பண்ணிட்டேன்! மன்னிச்சிருங்க! எதிர்பார்க்கல! கண்கலங்கிய சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர்
சில வாரங்களுக்கு முன்பே சீரியல் நடிகர் ரவி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் என்னுடைய புது மகன் என்று தமிழும் சரஸ்வதியும் சீரியல் அர்ஜுனோடு எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார். இதனால் ரசிகர்கள் இவர்கள் இருவரும் புதிய சீரியலில் இணைவதால் இனி அர்ஜுன் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் தொடர்வாரா என்று கேள்வி எழுப்பி வந்தனர்.
ஆனால் அது குறித்து நடிகர் ரயான் இன்னும் எந்த தகவலையும் குறிப்பிடவில்லை. ஆனால் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் தொடர்ச்சியாக அவர் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார். இப்படியான நிலையில் புதிதாக தொடங்கி இருக்கும் பனிவிழும் மலர்வனம் என்ற சீரியலிலும் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். ஆனால் அவர் வில்லனா அல்லது ஹீரோவா என்பது பொறுத்திருந்து பார்த்தால் தான் தெரியும்.
அதுபோல வினிஷாவிற்கு பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு கிடைத்த முதல் வாய்ப்பு இது என்பதால் வினுஷா பெரிய அளவில் யோசித்து இந்த சீரியலில் கமிட்டாகி இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் சிலவாரங்களுக்கு முன்பே வினுஷா தான் புதிய சீரியலில் நடிக்கப் போவதாகவும் அதற்கு புடவை மற்றும் ஜுவல் ப்ரோமோஷன் செய்ய வேண்டியவர்கள் டி எம் செய்யலாம் என்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் போஸ்ட் வைத்திருந்தார்.
இந்த நிலையில் பாரதி கண்ணம்மா சீரியலுக்கு பிறகு புது சீரியலில் கலந்து கொள்ளும் வினுஷாவிற்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். அதே நேரத்தில் ஈரமான ரோஜாவே சீரியலில் நடித்து வந்த சித்தார்த்துக்கு இந்த சீரியலில் என்ன மாதிரி கேரக்டர் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications