ரசிகர்களுக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தார் இன்ப அதிர்ச்சி.. வீடுகளுக்கே பரிசோடு வராங்க
சென்னை: விஜய் டிவி, திருவள்ளூரில் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' குழுவின் கொண்டாட்ட நிகழ்ச்சியை நடத்தவுள்ளது. இந்த நிகழ்ச்சி 21 செப்டம்பர் 2024 அன்று மாலை 5 மணிக்கு திருவள்ளூர் வெங்கடேஸ்வரா இன்ஜினியரிங் & டெக்னாலஜி கல்லூரியில் நடைபெறும்.
இந்த நிகழ்ச்சியை மக்களிடம் அறிமுகப்படுத்தும் வகையில் விஜய் டிவி கடந்த ஒரு வாரமாக இந்த நிகழ்ச்சி பற்றி மக்களிடம் பிரபலப்படுத்தும் வேலைகள் நடத்தி வருகிறது. இதில், பெண்களுக்கான 'தங்க நாணய' போட்டிகளும் நடத்தப்படுகின்றன, இதில் பெண்கள் சில எளிய கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும்.

இந்த மாபெரும் நிகழ்ச்சியில் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தொடரின் நட்சத்திரங்கள் பங்கேற்று, சிறப்பு நடன மற்றும் இசை நிகழ்ச்சிகளை நிகழ்த்தவுள்ளனர். மேலும், 'சூப்பர் சிங்கர்' போட்டியாளர்களும் இசை நிகழ்ச்சியில் கலந்துகொள்வார்கள். 'கலக்கப்போவது யாரு' குழுவினர் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தொடரை மையமாக கொண்டு நகைச்சுவை நிகழ்ச்சியும் நடத்தவுள்ளனர்.
நிகழ்ச்சியின் தொகுப்பாளர்களாக சபரி மற்றும் ''கலக்கப்போவது யாரு' நிஷா இருப்பார்கள். இந்த நிகழ்ச்சி அனைத்து மக்களுக்கும் இலவசமாக திறந்துள்ளது, அதற்காக அனைத்து வயதினருக்கும் அனுமதி அளிக்கப்படுகிறது. மாலை 5 மணிக்கு தொடங்கும் இந்த நிகழ்ச்சியை அனைவரும் வந்து சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளவர்கள்: ஸ்டாலின், நிரோஷா, வி.ஜே. கார்த்திக், சரண்யா, வெங்கட், ஹேமா, ஆகாஷ், ஷாலினி, நாஞ்சில் விஜயன், திவாகர், யோகி, அமுதவண்ணன், பழனி பட்டாளம், மதுரை முத்து, நா. முத்துக்குமார், நாகமுத்து, அன்னபாரதி, ஜான் ஜெரோம், விக்னேஷ், ஸ்ரீநிதா, ரிச்சா மற்றும் அனன்யா ஆகியோர். மேலும் இந்த முறை 'விஜய் நட்சத்திர கொண்டாட்டம்' திருவள்ளூரில் அதிக அளவில் மகிழ்ச்சியூட்டும்.
ஏற்கனவே பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இருக்கிறது. இதுவரைக்கும் வீட்டிற்குள் சகுனி வேலை பார்த்துக் கொண்டிருந்த தங்கமயில் இப்போதும் மனம் மாறிக்கொண்டிருக்கிறார். ஆனால் மீண்டும் அம்மா பேச்சைக் கேட்டு ஆட்டம் போடுவாரா? அல்லது கவரிங் நகை வீட்டிற்கு தெரிய வந்ததும் வீட்டை விட்டு கிளம்பி போகப் போகிறாரா? என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

அதுபோல தங்கமயில் பற்றிய உண்மைகள் குடும்பத்திற்கு தெரிய வரும் போது மூர்த்தி என்ன முடிவெடுப்பார் என்று எதிர்பார்க்க முடியாத வகையில் இருக்கிறது. இதற்கிடையில் இந்த சீரியல் நடிகர்கள் மக்களை நேரடியாக சந்தித்து அவர்களோடு உரையாடுவதற்காக வித்தியாசமாக யோசித்து இருக்கிறார்கள். அதிலும் பெண்களின் மனதை கவர வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு பல டாஸ்க் கொடுத்து பரிசுகளையும் அள்ளிக் குவிக்க இருக்கிறார்கள். மிஸ் பண்ணிடாதீங்க திருவள்ளூர் மக்களே.












Click it and Unblock the Notifications