விஜய் டிவி டாப் சீரியலில் மூன்றாவது முறையாக மாற்றப்படும் கதாநாயகி.. அட இப்படி ஒரு காரணமா?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பொன்னி சீரியலில் ஜெயலக்ஷ்மி கேரக்டரில் கதாநாயகனின் அம்மாவாக நடித்து வந்த நடிகை திடீரென்று விலகி இருக்கும் நிலையில் அவருக்கு பதிலாக சீரியல் நடிகை ரிஹானா நடிக்க இருக்கிறார். அது பற்றி விரிவாக பார்க்கலாம்.
அந்த வகையில் பொதுவாக சீரியலில் இவருக்கு பதில் இவர் என்பது வழக்கமாக நடப்பது தான். அதற்கு காரணம் சீரியல்கள் பல வருடங்களாக தொடர்ந்து ஒளிபரப்பாகி வரும் நிலையில் ஒரு சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் அதை விட முக்கியமான கேரக்டரில் இன்னொரு வாய்ப்பு கிடைத்தால் பல நடிகர், நடிகைகள் சீரியலில் இருந்து விலகிவிடுகிறார்கள்.

அதோடு சிலருக்கு உடல்நிலை பிரச்சனைகள் அல்லது சீரியல் தரப்பினரோடு ஏற்படும் மன வருத்தங்கள் போன்றவற்றின் காரணமாகவும் பல நடிகர் நடிகைகள் திடீரென்று விலகி விடுகிறார்கள். ஆனாலும் முக்கிய கேரக்டரில் ஒரு சில நடிகர்கள் விலகி விடுவதால் அங்கு சீரியலின் டிஆர்பியை பாதித்து விடுவது வாடிக்கை தான். ஆனாலும் ஒரு சிலர் தவிர்க்க முடியாத காரணங்களால் சீரியலில் இருந்து விலகி இருக்கிறார்கள்.
அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பொன்னி சீரியலிலும் நடந்திருக்கிறது. இந்த சீரியலில் தொடக்கத்தில் ஜெயலட்சுமி அதாவது கதாநாயகனின் அம்மாவாக நடிகை ஷமிதா நடித்திருந்தார். ஷமிதா நடிகர் அருண் விஜய் நடிப்பில் வெளியான பாண்டவர் இல்லம் திரைப்படத்தில் "தோழா தோழா தோள் கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும்" என்ற பாடலின் மூலமாக பெரிய அளவில் பிரபலமானார்.

அதற்கு பிறகு பெரிய அளவில் திரைப்படங்களில் வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் சின்ன திரையில் தொடர்ச்சியாக நடித்துக் கொண்டிருந்தார். அதிலும் மௌனராகம் சீசன் ஒன்றில் வில்லியாக நடித்து பலரையும் மிரள வைத்திருந்தார். அதுபோல சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வானத்தைப்போல சீரியலில் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் ஸ்ரீகுமாரை தான் ஷமிதா காதலித்து திருமணம் செய்து இருக்கிறார்.
இந்த நிலையில் பொன்னி சீரியலில் முதலில் நடித்து வந்த ஷமிதா சில மாதங்களுக்கு முன்பு விலகி இருந்தார். அதைத் தொடர்ந்து அவருக்கு பதிலாக நடிகை சிந்துஜா வந்திருந்தார். அவர் தான் இப்போது சீரியல் இருந்து விலகி இருக்கிறார். அவருக்கு பதிலாக நடிகர் ரிஹானா அதாவது பாண்டியன் ஸ்டோர் சீசன் 2 சீரியலில் இருந்து விலகிய ரிஹானா இந்த சீரியலில் இனி ஜெயலட்சுமி ஆக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

அதோடு நடிகை சிந்துஜா சீரியலில் இருந்து விலகுவதற்கு காரணம் அவருடைய உடல்நிலை பிரச்சனை தான் என்று கூறப்படுகிறது. சீரியலில் கதாநாயகிக்கு இருக்கும் அளவிற்கு இவருக்கு அதிகமான முக்கியத்துவம் இருக்கும் நிலையில் இவருடைய உடல்நிலை பிரச்சனை காரணமாக இவரால் தொடர்ந்து நடிக்க முடியாமல் போய்விட்டதாகவும், அதனால் இவர் விலகி விட்டதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து சிந்துஜா அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. ஆனாலும் அவர் மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப வேண்டும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
-
சிறகடிக்க ஆசை: முத்துக்கு மட்டும் சோதனை மேல் சோதனையா? ரோகிணியால் அழியும் விஜயா.. செம சம்பவம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications