Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தாலி கட்டும் நேரத்தில் திணறிய புகழ்.. கலாய்க்கும் நெட்டிசன்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவி புகழ் தன்னுடைய திருமணத்தில் திணறியதை பார்த்து சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

Recommended Video

    தாலி கட்டும் நேரத்தில் திணறிய புகழ்.. கலாய்க்கும் நெட்டிசன்கள்

    என்னதான் நடிகராக இருந்தாலும் திருமண நேரத்தில் அவருக்கும் பதட்டம் இருக்கத்தானே செய்யும் என்பது பலருடைய வாதமாக இருந்து வருகிறது.

    நெடுநாள் காதலித்த காதலியை கைப்பிடிக்கும் நேரத்தில் எவ்வளவு அவசரமா என்று சிலர் கலாய்க்க தவறவில்லை.

    பிரபலமான நிகழ்ச்சி

    பிரபலமான நிகழ்ச்சி

    விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமாக பட்டி தொட்டி எல்லாம் பிரபலமடைந்த புகழ் இதற்கு முன்பு இதே சேனலில் பெண் வேடமிட்டு அனைவரையும் மகிழ்வித்து வந்தார். ஆனால் அப்போ எல்லாம் அவருக்கு கிடைக்காத பெயரும் புகழும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் கிடைத்திருந்தது. முதல் சீசனில் ரம்யா பாண்டியனை சைட் அடித்து கலாய்த்து கொண்டு பலருக்கும் என்டர்டைன்மென்ட் கொடுத்துக் கொண்டிருந்த புகழ் இரண்டாவது சீசனையும் விட்டு வைக்காமல் பலரையும் மகிழ்வித்து கொண்டிருந்தார். அதுவரைக்கும் புகழ் என்றால் இவர்தான் என்று முகம் தெரியாமல் இருந்த இவர் பின்பு பலருடைய மனதை கவர்ந்து விட்டார்.

    வெள்ளி திரையிலும் பிசி தான்

    வெள்ளி திரையிலும் பிசி தான்

    குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பிரபலங்கள் ஒவ்வொருவரையும் கலாய்த்து கொண்டிருந்த இவரை சிங்கிள்ஸ் என்று நம்பி கொண்டு இருந்த ரசிகர்களுக்கு நான் அப்படியெல்லாம் இல்லை ஏற்கனவே கமிட்டட் என்று சொல்கின்ற மாதிரி திடீரென்று சமூக வலைதளத்தில் இவருடைய காதலியின் போட்டோவை அறிமுகப்படுத்தி இருந்தார். பலருக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தாலும் ரசிகர்கள் பலர் எப்போது இவருடைய திருமணம் என்று கேட்டுக் கொண்டிருந்தனர். சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரையில் தற்போது பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் இவர் தன்னுக்கு பெயர் வாங்கி கொடுத்த குக் வித் கோமாளியை மறந்து விடாமல் அவ்வப்போது மூன்றாவது சீசனிலும் தலையைக் காட்டிக் கொண்டிருந்தார்.

    எளிமையாக திருமணம்

    எளிமையாக திருமணம்

    செப்டம்பர் மாதம் முதலாம் தேதியில் ரசிகர்கள் பலருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுக்கின்ற வகையில் இவருடைய திருமண போட்டோக்கள் வைரலாகி வருகிறது. புகழ் விழுப்புரம் மாவட்டம் தீவனூர் பொய்யாமொழி விநாயகர் கோவிலில் அவருடைய காதலி பென்ஸி ரியாவுடன் எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் இந்து முறைப்படி உறவினர்களின் ஆசியோடு இவர்களுடைய திருமணம் நடந்து முடிந்தது.

    கொஞ்சம் பதட்டமாகத்தான் இருக்குது

    கொஞ்சம் பதட்டமாகத்தான் இருக்குது

    திருமணத்தின் போது தாலி கட்டும் நேரத்தில் பதட்டத்தில் புகழ் தாலி கயிற்றை கட்டி முடித்த உடனே கையை எடுத்து விடுகிறார். அதற்குப் பிறகு அருகில் இருந்தவர்கள் ஏதோ சொல்ல, மீண்டும் அதில் பொட்டு வைத்து முடிச்சுகளை போட்டுக் கொண்டிருக்கிறார். அதை பார்த்த நெட்டிசன்கள் புகழை அவ்வளவு பதட்டமாகவா இருக்கிறது என்று கலாய்த்து வருகிறார்கள். கேமரா முன்னாடி பதட்டம் இல்லாமல் பலரையும் கலாய்த்து கொண்டிருந்த புகழ் தற்போது நிஜ வாழ்க்கையில் பதட்டமடைந்து பதறியது பார்ப்பதற்கு வேடிக்கையாக இருக்கிறது என்று ஒரு சிலர் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+