39 வயதில் தற்கொலை செய்த சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை ராஜேஸ்வரி! பாக்கியலட்சுமி சீரியலில் அப்படி நடிச்சிருந்தாரே!
சென்னை: சீரியல் நடிகை ராஜேஸ்வரி (வயது 39) தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தான் சின்னத்திரை ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. ராஜேஸ்வரி விஜய் டிவியில் ஒளிபரப்பான சிறகடிக்க ஆசை சீரியலில் கதாநாயகி மீனாவின் தங்கையான சீதாவின் மாமியாராக நடித்திருந்தார். அவருடைய காட்சிகள் இனி தான் இந்த சீரியலில் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இவர் இந்த தவறான முடிவை எடுத்திருக்கிறார்.
பொதுவாக தற்கொலை என்பது எதற்கும் தீர்வு கிடையாது என்று நாம் எல்லோரும் சொல்லிக் கொண்டிருந்தாலும் சிலர் தங்களுடைய குடும்ப சூழ்நிலை பிரச்சனைகளிலிருந்து மீள முடியாமல் அதற்கு ஒரே தீர்வு இதுதான் என்று தற்கொலையை தேர்ந்தெடுக்கிறார்கள். ஆனால் அது தங்களுடைய வாழ்க்கையை மட்டுமல்லாமல் தங்களை சார்ந்தவர்களுடைய வாழ்க்கையையும் பாதிக்கும் என்பதை கோபமான சூழ்நிலையில் புரிந்து கொள்ளாமல் தவறான வழியை தேர்ந்தெடுத்து விடுகிறார்கள்.

அதுபோலத்தான் நடிகை ராஜேஸ்வரியும் செய்திருக்கிறார். ராஜேஸ்வரி சிறகடிக்க ஆசை சீரியலில் அருணுடைய அம்மாவாக சில மாதங்களுக்கு முன்பு தான் என்ட்ரி ஆனார். இந்த சீரியலில் கதாநாயகி மீனாவின் தங்கையான சீதாவிற்கும் டிராபிக் போலீஸ் அருணுக்கும் இடையே காதல் ஏற்படுகிறது. அருண் எப்போதும் முத்துவை பழிவாங்க வேண்டும் என்றே நினைத்துக் கொண்டிருப்பவர். அவருடைய அம்மாவாகத்தான் ராஜேஸ்வரி நடித்திருந்தார்.
சீதா தங்கள் வீட்டு மருமகளாக வரவேண்டும் என்று அருண் அம்மா எல்லோரிடமும் கெஞ்சி இருப்பார். பிறகு முத்து மனம் மாறி அருண் மற்றும் சீதா கல்யாணத்தையும் நடத்தி வைத்திருக்கிறார். சீதாவை தங்களுடைய வீட்டு பிள்ளையாகவே பார்க்கும் பாசிட்டிவ்வான கேரக்டரில் ராஜலட்சுமி நடித்து வந்தார். அவர் இதற்கு முன்பு விஜய் டிவியில் ஒளிபரப்பான பாக்கியலட்சுமி சீரியலிலும் நடித்திருப்பார்.
பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியாவிடம் வேலை பார்க்கும் கேரக்டரில் நடித்திருப்பார். அப்போது கூட தன்னுடைய கணவருடன் பிரச்சனை என்றும், அதனால் குழந்தைகளை பார்க்க வேண்டும் என்பதற்காக தான் வேலைக்கு வருவதாக நடித்திருப்பார். பாக்கியாவிற்கு பல இடங்களில் உதவி செய்யும் கேரக்டராகவும் இருப்பார்.
ஆனால் நேற்று டிசம்பர் 11ஆம் தேதி அவர் தன்னுடைய கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக ரத்த அழுத்தம் மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை முயற்சி செய்திருக்கிறார். சென்னை பிராட்வே ராயப்பன் முதலி தெருவில் வசித்து வந்த ராஜேஸ்வரி சில வருடங்களுக்கு முன்பு சதீஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஹேமந்த் குமார் என்ற மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர்.
இரண்டு குழந்தைகளோடு இவர்களுடைய திருமண வாழ்க்கை ஆரம்பத்தில் மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்தது. ராஜேஸ்வரியின் கணவர் சதீஷ் தனியார் எண்ணை கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வந்த நிலையில் கணவன் மனைவிக்குள் சமீப காலமாகவே கருத்து வேறுபாடால் சண்டை ஏற்பட்டு கொண்டே இருந்திருக்கிறது. இந்த நிலையில் டிசம்பர் 7ஆம் தேதி கணவன் மனைவி இருவருக்கும் ஏற்பட்ட சண்டையால் ராஜேஸ்வரி சைதாப்பேட்டை விஐபி சாலையில் உள்ள தன்னுடைய அம்மா வீட்டிற்கு போய்விட்டார்.
அதற்கு பிறகு மூன்று நாட்களாக மன உளைச்சலில் இருந்த ராஜேஸ்வரி நேற்று இரவு தற்கொலை முயற்சி செய்திருக்கிறார். பிறகு அவர் மயக்கம் போட்டு விழுந்து விட அதை கண்ட உறவினர்கள் அவரை மீட்டு ஹாஸ்பிடலில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்திருக்கிறார். இந்த தகவல் சின்னத்திரை ரசிகர்களை வருத்தம் அடைய வைத்திருக்கிறது.
தற்கொலை என்பது எந்த பிரச்சனைகளுக்கும் தீர்வல்ல மக்களே. அதுபோல தற்கொலை செய்யும் சிந்தனைகள் வந்தால் உறவினர்களிடமோ அல்லது நண்பர்களிடமோ மனம் விட்டு பேசி நம்முடைய வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு போக வேண்டும். ஒருமுறை கிடைத்த இந்த வாழ்க்கையை நாமும் சந்தோஷமாக இருந்து மற்றவர்களையும் சந்தோஷப்படுத்தி பார்ப்போம்.












Click it and Unblock the Notifications