சிறகடிக்க ஆசை: க்ரிஷை அடிக்க போன மனோஜ்! கோபத்தில் ரோகிணி சொன்ன வார்த்தை! அதிர்ச்சியில் விஜயா எடுத்த முடிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2025 ஜூலை 29ஆம் தேதிக்கான எபிசோடில், விஜயா குடும்பத்தில் நடக்கும் குழப்பங்கள், வாக்குவாதங்கள் மற்றும் ஒரு பெரிய நிதி சிக்கலை மையமாகக் கொண்டு பரபரப்பாக ஒளிபரப்பானது.

க்ரிஷ் - விஜயா மோதல்

இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில், விஜயா சோபாவில் அமர்ந்திருக்க, க்ரிஷ் அவரை பயமுறுத்த சோபா மீது ஏறி குதிக்க, விஜயா அலறுகிறார். உடனே க்ரிஷ்ஷை திட்ட, வீட்டில் இருக்கும் அனைவரும் வந்து விடுகின்றனர். "இப்ப எதுக்கு அவனை திட்டிகிட்டு இருக்கீங்க?" என்று கேட்க, "குரங்கு மாதிரி குதிச்சுக்கிட்டு இருக்கான்" என்று விஜயா சொல்லிக் கொண்டிருக்க, ஸ்ருதி "மனுஷங்க குரங்குல இருந்து தான் வந்ததா சொல்றாங்க" என்று பதிலளிக்கிறார். உடனே மனோஜ் க்ரிஷ் மீது கோபப்பட, ரோகிணி தடுத்து, "சின்ன பையன் தானே விடு" என்று சமாதானப்படுத்த முயல்கிறார்.

Siragadikka aasai serial vijay tv

ஆனால் விஜயா, "இதுவா சின்ன பையன்?" என்று சொல்லிவிட்டு, "இரண்டு அடி போடுற" என சொல்ல, முத்து, "கைய வச்சா அவ்வளவுதான்" என எச்சரிக்கிறார். உடனே அருணாச்சலம் வந்துவிட, "குழந்தை கிட்ட எப்படி பேசணும்னு உனக்குத் தெரியாதா?" என்று கேட்கிறார். விஜயா, "இந்தப் பையன் வந்ததிலிருந்து தான் ஏதாவது பிரச்சனை வந்துகிட்டே இருக்கு," என்று கோபப்பட, அண்ணாமலை க்ரிஷ்ஷை அழைத்துச் சென்று விடுகிறார். பிறகு விஜயா, "இந்தப் பையனால ஒரு நாள் உங்க வீட்ல பெரிய பிரச்சனை வரப்போகுது, அன்னைக்குத் தெரியும்," என சொல்ல, பார்வதி பதறி அடித்துக் கொண்டு ஓடி வருகிறார்.

ரோகிணிக்கு வந்த சோதனை

"என்னாச்சு பார்வதி? என்ன விஷயம்?" என்று கேட்க, ரதி மற்றும் தீபன் குடும்பத்தினர் வந்து 10 லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகச் சொல்லுகின்றனர். "அவங்க பணம் கேட்குறதுக்குக் காரணம் மனோஜ் தான்," என்று முத்து சொல்லுகிறார். மனோஜ் தான் பணத்தைக் கொடுத்துப் பேசிக்கலாம் என்று முடிவெடுத்திருந்த விஷயத்தை ரதி குடும்பத்திடம் போய் பேசிய விஷயத்தையும் விஜயாவிடம் முத்து சொல்லியிருக்கிறார். உடனே கோபப்பட்ட விஜயா, "அவன் சொல்றதெல்லாம் உண்மையா?" என்று கேட்க, மனோஜ் ரோகிணி சொல்லித்தான் அதைச் செய்ததாகச் சொல்லிவிடுகிறார்.

அதிர்ச்சியில் விஜயா

உடனே ரோகிணி மனோஜைப் பார்த்து முறைக்க, ஏற்கனவே ஒருவாட்டி திருட்டு நாடகம் கொடுத்து தன்னை மாட்டிவிட பார்த்ததாகவும், இப்போது இதுவரையிலான பிரச்சனை என்றும் மனோஜ் கூறுகிறார். "உங்களை எந்தப் பிரச்சனையிலிருந்து காப்பாற்றலாம் உங்களோட கோபம் குறையுறதுதான் நினைச்சேன். மத்தபடி வேற எதுவும் செய்யல, தப்பா நடக்கல," என்று மனோஜ் சொல்ல, அதற்கு விஜயா யோசித்துவிட்டு, "அப்போ இந்த விஷயத்தை எல்லாம் நீயே இந்த பணத்தை கொடுத்தது," என்று சொல்ல, ரோகிணி "என்கிட்ட இவ்வளவு பணம் இல்லை," என்று மறுக்கிறார். விஜயா, "கோபம் குறையும்ல, அதனால குடு" என்று சொல்லிவிட்டுச் சென்று விடுகிறார்.

மனோஜ் - முத்துவின் பேச்சுவார்த்தை

மறுபக்கம், மனோஜ் மாடியில் அழுது கொண்டிருக்க, ரவி ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்கிறார். முத்து வந்தவுடன், "என்னாச்சு?" என்று கேட்க, "அவன் அழுதுகிட்டு இருக்கான்," என்று சொல்கிறார். "என்ன விஷயம்?" என்று கேட்க, "பத்து லட்சம் பணம் எங்களால் எப்படி கொடுக்க முடியும்?" என்று மனோஜ் சொல்ல, "ஆரம்பிச்சது நீங்கதான, நீங்க தான் கொடுக்கணும்," என்று முத்து சொல்கிறார். "ஏற்கனவே அழுதுகிட்டு இருக்க வெறுப்பேத்தாதடா, ஏதாவது உதவி பண்ணு," என்று ரவி சொல்ல, "உதவி பண்ண எனக்கு என்ன கொடுப்பாய்?" என்று முத்து கேட்கிறார். "நான் அப்புறம் என்ன வேணாலும் தரேன்," என்று மனோஜ் சொல்ல, கொஞ்ச நேரத்தில் ரவியிடம் "உங்க மாமனார் கிட்ட பேசி பணம் வாங்கி கொடுடா," என்று முத்து சொல்கிறார். "அதெல்லாம் என்னால் முடியாது," என்று ரவி சொல்லிவிடுகிறார். மீண்டும் முத்துவிடம் "ஏதாவது பண்ணுடா," என்று மனோஜ் சொல்ல, "சரி நான் யோசிக்கிறேன்," என்று முத்து சொல்கிறார்.

மறுபக்கம் கிச்சனில் ரோகிணி அழுது கொண்டிருக்க, ஸ்ருதி மற்றும் மீனா வருகின்றனர். "எதுக்கு அழுதுகிட்டு இருக்கீங்க?" என்று கேட்க, "நான் ஆன்ட்டிக்கு நல்லது பண்ணதா போனேன், ஆனா என்னைப் பத்து லட்சம் கொடுக்க சொல்றாங்க. என்னால எப்படி கொடுக்க முடியும்?" என்று பேசுகிறார். ஸ்ருதி மற்றும் மீனா ரோகிணிக்கு என்ன ஆறுதல் சொல்லப் போகிறார்கள்? விஜயாவின் அடுத்த முடிவு என்ன? என்பதை 'சிறகடிக்க ஆசை' சீரியலின் இன்றைய எபிசோடில் பார்க்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+