விஜய் டிவி பிரபலம் கல்யாணத்தில் அசார் கொடுத்த கிப்ட்! அது என்ன மஞ்சள் கலரில்? இப்படியுமா யோசிப்பாங்க
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் கதாநாயகனாக நடிக்கும் வெற்றி வசந்த்தும், விஜய் டிவியில் பொன்னி சீரியலில் கதாநாயகியாக நடிக்கும் வைஷ்ணவியும் இன்று திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் ரிசப்ஷனில் கலந்து கொண்ட அசார் செய்த செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பொதுவாக நண்பர்களுக்கு திருமணம் என்றால் சக நண்பர்களுக்கு கொண்டாட்டம் தான். நம்முடைய குடும்பத்தில் ஒரு கல்யாணம் என்றால் கூட அந்த அளவிற்கு மகிழ்ச்சி இருக்காது. ஆனால் நண்பர்களுக்கு திருமணம் என்ற போது நம்முடைய சக நண்பர்கள் அங்கு அட்டென்ட் ஆகி விடுகிறார்கள். அதோடு ஜாலியாக ஆட்டம் பாட்டம் எல்லாம் ஏகபோகத்துக்கு கொண்டாடலாம்.

சமீபத்தில் நண்பர்கள் திருமணத்தில் கலந்து கொள்ளும் ஒரு சிலர் சில சுவாரசியமான செயல்களை செய்வதை பார்த்திருப்போம். பூண்டு விலை அதிகரிக்கும் போது மாப்பிள்ளைக்கு பூண்டால் மாலை செய்து கொடுப்பது, அதுபோல சிலிண்டர் விலை கூடும்போது சிலிண்டர் வாங்கி கொடுப்பது என்று பார்ப்பவர்களை யோசிக்கவும் செய்வார்கள்.
அதேபோல் சில நண்பர்கள் மணமேடையில் மாப்பிள்ளையும் பெண்ணும் இருக்கும் போது அவர்களுக்கு பால் புட்டி கொடுக்கிறது, பாய், தலையணையும் கொடுக்கிறது என்று சில்மிஷ வேலைகளையும் செய்வார்கள். சிலரை பார்த்தாலே அய்யோ இவங்க வாரனுங்களே மானத்தை வாங்கிட கூடாதே என்று மணமக்கள் பயந்து போவதையும் பார்த்திருப்போம்.
இதுபோல ஒரு ஏமாற்று வேலைகள் தான் இன்று சீரியல் நடிகர் வெற்றி வசந்த் திருமணத்திலும் அவருடைய நண்பர்கள் செய்திருக்கிறார்கள். சின்னத்திரை வட்டாரத்தில் பிரபலமான நடிகர் வெற்றி வசந்த் மற்றும் வைஷ்ணவியின் திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றது. வெற்றி வசந்த் சிறகடிக்க ஆசை சீரியலில் முத்து கேரக்டரில் நடித்து வருகிறார். அவருடைய மனைவி வைஷ்ணவி பொன்னி சீரியலில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
ஏற்கனவே சின்னத்திரையில் ஒன்றாக நடித்து காதலித்து திருமணம் செய்த பல தம்பதிகள் இருக்கிறார்கள். அவர்கள் வரிசையில் இவர்களும் இடம் பிடித்திருக்கிறார்கள். இவர்களுடைய திருமணத்தில் பல சின்னத்திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர். அதிலும் பொன்னி சீரியலில் வைஷ்ணவியோடு நடிக்கும் நடிகர் அசார் இவர்களுடைய திருமணத்தில் கலந்து கொண்டு தங்க நாணயங்கள் போன்று பரிசு கொடுத்திருக்கிறார்.
அதை பார்த்ததும் மாப்பிள்ளையும் மணப்பெண்ணும் உண்மையில் இது தங்க நாணயம் என்று நினைத்துக் கொள்ள, கடைசியில்தான் தெரிகிறது எல்லாமே டூப்ளிகேட் என்று... நாணயத்தை பார்த்ததும் மணமக்கள் மட்டுமல்ல அங்கிருந்தவர்களும் அது தங்க நாணயம் என்று நினைத்த நிலையில் அத்தனையும் டூப்ளிகேட் என்று கடைசியில் தெரிந்ததும் எல்லோரும் செல்லமாக அவரிடம் கோபப்பட்டு இருக்கின்றனர். இந்த க்யூட்டான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
நீங்கள் இதுபோல கல்யாண வீட்டில் மணமக்களை கலாய்த்து இருக்கிறீர்களா? அல்லது உங்கள் நண்பர்களால் நீங்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறீர்களா? உங்கள் அனுபவத்தை சொல்லுங்க மக்களே.. யாரு சுவாரசியமானவர் என்று பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications
