சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10இல் நெகிழ வைத்த குழந்தைகள்.. அழகான குரலுக்கு பின்னால் இத்தனை சோகமா?
சென்னை: "ஒவ்வொரு குரலும் ஒரு கதை சொல்லும்"விஜய் டிவி சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 நிகழ்ச்சியை விரைவில் ஒளிபரப்ப உள்ளது. இதில் கலந்துகொள்ள எண்ணற்ற குழந்தைகள் ஆர்வமாக வந்துள்ளனர். சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட குழந்தைகள் தங்களுடைய பின்னணி குறித்து பேசிய ப்ரோமோக்கள் வெளியாகி இருக்கிறது.
இந்த போட்டியில் பங்குபெறும் ஒவ்வொரு போட்டியாளருக்கும் ஒரு பின்னணியும் சொல்ல ஒரு நெகிழ்வான கதையும் உள்ளது. இந்த சீசனின் ஒவ்வொரு குழந்தையின் வரவும் ஒரு கதை சொல்ல உள்ளது. அவர்கள் பொருளாதார ரீதியிலும் மற்ற பல வகைகளிலும் சிரமங்களை சந்தித்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருகிறார்கள். அவர்களுக்கு அவர்களது ஆசிரியர்களும், நண்பர்களும், உறவினர்களும் உதவிகள் செய்து அனுப்பி வைக்கின்றனர். அவர்கள் ஒவ்வொருவரின் கதையும் ஒரு கதை சொல்லும் என்பது உண்மை.

'நசீரின்' இந்த சீசனின் முதல் ப்ரோமோவில் ராணிப்பேட்டையைச் சேர்ந்த போட்டியாளர் 'நஸிரீன்' பங்கேற்கும் ப்ரோமோ விஜய் டிவி வெளியிட்டுள்ளது. பள்ளிக்குழந்தைகள் பங்கேற்கும் "பாடுறது பாடுறது யாரு?" என்ற அழகான ப்ரோமோ அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதில் நஸிரீன் ஆசிரியர்களும் தலைமை ஆசிரியரும் வருவதாக காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. உண்மையில் நஸிரீன் பள்ளித் தலைமை ஆசிரியர்தான் அந்த குழந்தைக்குப் உதவிசெய்து இந்த போட்டியில் கலந்துகொள்ள அனுப்பியுள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சென்னையை சேர்ந்த சாராஸ்ருதி (இரண்டாவது ப்ரோமோ ) சாராஸ்ருதி மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்த குழந்தை. ஆனால் திறமை வாய்ந்தவர். அவர் தங்கள் பெற்றோருடன் சேர்த்து தங்கள் வாழ்வாதாரத்திற்காக பாடி வாழ்பவர்கள். அவர் இந்த போட்டியில் கலந்துகொண்டு தன் திறமையை வெளிப்படுத்தி வெற்றிபெற வாழ்த்துவோம்.

விரைவில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில், இளம் திறமையான பாடகர்கள் தங்கள் குரலால் பார்வையாளர்களை கவரவுள்ளனர். இந்த பிரபல நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக, புது தலைமுறையின் பாடகர்களை கண்டு ரசிக்க தயாராகுங்கள்! சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 நிகழ்ச்சி விரைவில் விஜய் டிவியில்!
-
சிறகடிக்க ஆசையில் ரசிகர்கள் நினைத்தது நடந்தது.. இனியாவது விஜயா திருந்துவாரா? முத்து கொடுத்த செம ட்விஸ்ட் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: ஒரு வாக்குமூலத்தால் தலைகீழான கதை! மருத்துவமனையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்! -
Thangadurai: விஜய் டிவி தங்கதுரை வீட்டில் விசேஷம்.. வந்து குவிந்த பிரபலங்கள்.. நெகிழ வைத்த வெற்றி கதை -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: கதிரை காப்பாற்ற வந்த முத்துவேல்... ஆனால் அதற்குள் நடந்த கொடூரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்?












Click it and Unblock the Notifications