Vijay TVK: விஜய்யுடன் கைகோர்க்கும் சின்னத்திரை பிரபலங்கள்.. ஜீவா ரவி கொடுத்த பேட்டி
சென்னை: நடிகர் விஜய் தவெக கட்சியை தொடங்கிய பிறகு அதில் பல பிரபலங்கள் இணைந்து கொண்டிருக்கின்றனர். சமீபத்தில் தான் இதில் நடிகர் ஜீவா ரவி இணைந்து கொண்டார் அவர் இப்போது பேட்டியில் தன்னுடன் சேர்ந்து சின்னத்திரை பிரபலங்கள் பலர் விஜய் கட்சியில் இணைய போவதாக தெரிவித்திருக்கிறார்.
விஜய் தொடங்கிய தவெக கட்சி மீது இளம் தலைமுறையினருக்கு அதிகமான ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது. 2026 தேர்தலில் என்ன நடக்கும்? விஜய் கட்சி மாற்றத்தை ஏற்படுத்துமா? அல்லது தோற்றுப் போகுமா? என்ற ஒரு விவாதம் இணையத்தில் இருந்து கொண்டிருக்கிறது. சூழல் இப்படி இருக்க தன்னுடைய கட்சி மாநாடுகளை தொடர்ச்சியாக விஜய் நடத்திக் கொண்டிருக்கிறார்.

சமீபத்தில் நடந்த கரூர் சம்பவத்தை யாராலும் மறந்திருக்க முடியாது. இந்த கூட்டத்தில் 41 பேர் இறந்து போயிருந்தனர். அதற்காக விஜய் வருத்தம் தெரிவித்து இருந்தார். பிறகும் தொடர்ச்சியாக தன்னுடைய அரசியல் பயணத்தை தொடர்ந்து வருகிறார். இதனால் ரசிகர்கள் மட்டுமல்லாமல் சில பிரபலங்களும் விஜய்யின் கட்சியில் இணைந்திருக்கின்றனர். அதிலும் சில வாரங்களுக்கு முன்பு அதிமுகவில் இருந்து விலகிய செங்கோட்டையன் தவெக கட்சியில் இணைந்தது பெரிய அளவில் பேசப்பட்டது.
செங்கோட்டையனை தொடர்ந்து நாஞ்சில் சம்பத்தும் இணைந்து இருக்கிறார். அடுத்ததாக சில நாட்களில் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை நடிகரான ஜீவா ரவியும் இணைந்திருப்பதாக அறிவித்திருந்தார். இந்த நிலையில் ஜீவா ரவி சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது கூடிய சீக்கிரத்தில் சின்ன திரையில் இருந்து ஒரு பெரிய பட்டாளமே தவெகவில் இணைய இருக்கிறார்கள் என்று பேசி இருந்தார்.
அதோடு சின்னத்திரை நடிகர்கள் மட்டுமல்லாமல், டெக்னீசியன்கள், இயக்குனர்கள் என அனைவருமே இதில் இணைய முன் வந்திருக்கிறார்கள். மேலும் அவர்களை யாரும் கட்டாயப்படுத்தவில்லை. அவர்களாகவே தவெகவில் இணைய முன் வருகிறார்கள் என்று கூறியிருந்தார். அதோடு கூடிய சீக்கிரம் தலைவர் முன்னிலையிலும் பொதுச் செயலாளர் முன்னிலையிலும் அது நடக்கும் என்று ஜீவா ரவி பேசி இருக்கிறார்.
இதனால் சின்னத்திரையில் இருந்து யாரெல்லாம் விஜய் கட்சியில் இணைய போகிறார்கள் என்று எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இருக்கிறது. ஏற்கனவே ஒரு சில நடிகர்கள் வெளிப்படையாகவே விஜய்க்கு சப்போர்ட் செய்திருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications