விஜயகாந்த்தின் தொப்புள் கொடி பாசம்! மீண்டும் கேப்டன் பிரபாகரன்! பிளாக் பஸ்டர் மூவி! ரசிகர்கள் ஹேப்பி
சென்னை: விஜயகாந்த் நடிப்பில் கடந்த 1991ல் வெளியான படம் 'கேப்டன் பிரபாகரன்'. இது விஜயகாந்தின் 100-வது படமாகும். இப்படத்தின் மூலம் தான் விஜய்காந்திற்கு 'கேப்டன்' என்ற அடைமொழி கிடைத்தது.. இப்படம் வெளியாகி 34 வருடங்கள் நிறைவடைவதையொட்டி வருகிற 22ந் தேதி ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளது. 4 கே தரத்தில் டிஜிட்டல் முறையில் வெளியாக உள்ளது. இதற்கான டிரெய்லரும் சமீபத்தில் வெளியிடப்பட்டது.. இந்நிலையில், கேப்டன் பிரபாகரன் விஜயகாந்த் குறித்து மூத்த பத்திரிகையாளர் சுபைர் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
BBT Cinema என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் சுபைர், "ரீ-ரிலீஸ் என்பது, தற்போது ரீ-யூனியன் என்பது போலாகிவிட்டது.. 1991-ல் வந்த படம் கேப்டன் பிரபாகரன்.. அன்று தியேட்டரில் விசில் அடித்து பார்த்தவர்களுக்கு இன்று 50 வயதை தாண்டியிருக்கும்.. மீண்டும் கேப்டன் பிரபாகரனை தியேட்டரில் பார்க்கும்போது, பழைய நினைவுகளில் மூழ்கிவிடுவார்.. தனக்கு கிடைத்த தியேட்டர் அனுபவங்களை, தன்னுடைய பிள்ளைகளுக்கும் சொல்வார்..

பிளாக் பஸ்டர் படம்
விஜயகாந்த் என்று பெயர் எழுதினாலே, அதை பார்த்து கொண்டே இருக்கக்கூடிய ஆட்கள் இன்றும் இருக்கிறார்கள்.. அவரது மறைவுக்கு பிறகும், அவர் மீதான மதிப்பும், மரியாதையும், அன்பும் கூடிக் கொண்டே இருக்கிறது..
அவருடைய சாதனையை, அவருடைய பழக்கவழக்கத்தை, குணநலன்களை ஒவ்வொருவராக சொல்ல சொல்ல, அனைவரும் பிரம்மித்து போய் கேட்கிறார்கள்.. இப்படியெல்லாம் ஒரு மனிதன் வாழ்ந்துவிட முடியுமா? என்று வியந்து சொல்கிறார்கள்.
அந்தவகையில் கேப்டன் பிரபாகரன் படம் பிளாக் பஸ்டர் படமாகும்.. அதே படத்தை இந்த வருட விஜயகாந்த் பிறந்தநாளன்று, 300 தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய போகிறார்கள்.. அப்படத்தை முழுமையாகவே டிஜிட்டல் செய்து வெளியிடுகிறார்கள்.
அதுசம்பந்தமான டிரைலர் வெளியீட்டு விழாவும் சமீபத்தில் நடந்தது.. அதில் விஜய பிரபாகரன், எஸ்ஏசி, ரம்யா கிருஷ்ணன், ஆர்கே செல்வமணி போன்றோர் கலந்து கொண்டு பேசினார்கள்.. விஜயகாந்த்தை வைத்து 20 படங்களுக்கு மேல் எடுத்தவர் எஸ்ஏ சந்திரசேகர்..
திறவுகோல் விஜயகாந்த்
பிலிம் இன்ஸ்டிடியூட்டின் மிகப்பெரிய திறவுகோல் விஜயகாந்த்தான்.. திரைப்பட கல்லூரியில் எடிட்டிங், கேமரா, சவுண்ட் மிக்ஸிங், நடிப்பு, டைரக்ஷன் என பல கோர்ஸ்கள் அங்கு உள்ளன.. இதற்கு பிளஸ் 2 படித்தால் போதும்.. அந்தவகையில் அன்று திரைப்பட கல்லூரியில் படித்துவிட்டு வெளியே வரும் மாணவர்கள், "டாக்குமென்ட்ரி" படம் எடுக்கக்கூடியவர்கள் என்று முத்திரை குத்தப்பட்டது.
இவர்களால் சினிமா எடுக்க தெரியாது, கமர்ஷியலாக படம் எடுக்க தெரியாது என்று விமர்சிக்கப்பட்டனர்.. அப்போதுதான், பிலிம் இன்ஸ்டிடியூட்டில் 3ம் வருட மாணவர்களான ஆபாவாணன், அரவிந்த்ராஜ், எடிட்டர் ஜெயச்சந்திரன் போன்றோர், 10 நிமிடம் டாக்குமென்ட்ரி படம் ஒன்றை எடுத்தனர்.. அது ஒரு ஹாரர் படமாகும்..
இறுதியில் கோல்டு மெடலையும் அந்த டாக்குமெண்ட்ரி படம் வென்றது.. இந்த டாக்குமென்ட்ரி படத்தையே சினிமாவாக எடுக்க முடிவு செய்தனர்.. இதற்காக பல நடிகர்களிடம் அணுகினார்கள்.. ஆனால், திரைப்பட கல்லூரி மாணவர்கள் என்பதால், யாருமே இவர்கள் படத்தில் நடிக்க ஒப்புக் கொள்ளவில்லை..
நம்பிக்கையை விதைத்த விஜயகாந்த்
அதிலும் டிஎஸ்பி தீனதயாளன் கேரக்டருக்கு பல நடிகர்களிடம் அணுகி முயற்சித்தார்கள்.. யாருமே நடிக்க முன்வரவில்லை.. ராவுத்தர் பிலிம்ஸிலும் சென்று முயற்சித்தனர்.. பிறகுதான் விஜயகாந்த் அதில் நடிக்க முன்வந்தார்.. அதுதான் ஊமை விழிகள்.. அப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது..
திரைப்பட கல்லூரி மாணவர்கள் மீது நம்பிக்கை தந்த படம் ஊமை விழிகள்.. இதற்கான கதவை திறந்துவிட்டது விஜயகாந்த்தான். இதற்கு பிறகு நிறைய படங்கள் பிலிம் இன்ஸ்டிடியூட் மாணவர்களுக்காக நடித்து உதவினார் விஜயகாந்த்.
மீண்டும் கேப்டன் பிரபாகரன்
அப்படி அந்த இன்ஸ்டிடியூட்டில் இருந்து வெளியே வந்தவர்தான் ஆர்கே செல்வமணி.. புலன் விசாரணை என்ற கிரைம் படத்தை விஜயகாந்த் வைத்து எடுத்தார் ஆர்கே செல்வமணி.. அந்த படம் ஹிட்டானதுமே, அதே டீமை வைத்து, கேட்பன் பிரபாகரன் படம் எடுக்கப்பட்டது. வீரப்பனின் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட அந்த படம்,
லோகேஷன், கேமிரா, சண்டைப்பயிற்சி, டயலாக், என அனைத்துமே மக்களை ஈர்த்தன.. லியாகத் அலிகானின் எதுகை மோனை வசனம் பட்டிதொட்டியெங்கும் போய் சேர்ந்தது.. அன்றைய நேரத்தில் தமிழகத்தின் டீக்கடைகளில் கதை வசனம் ஆடியோ கேசட்களில் ஓடிக் கொண்டிருக்கும்.. சிலசமயம் கோயில் திருவிழாக்களிலும் ஒளிபரப்பானது..
தொப்புள் கொடி உறவு - பிரபாகரன்
அந்த படம் வந்தபிறகு மகன் பிறந்ததால் பிரபாகரன் என்று பெயர் வைத்தார்.. அதுமட்டுமல்ல, விஜயகாந்த்துக்கு ஈழத்தமிழர்கள் மீது மிகப்பெரிய பாசம் இருந்தது.. தொப்புள் கொடி உறவு மீது அன்பு இருந்தது.. பிரபாகரன் மீது மிகப்பெரிய மரியாதை இருந்ததால், மகனுக்கு அப்பெயரை வைத்தார்..
சமீபத்தில் நடந்த விழாவில், "ஒரு நல்ல தலைவரை மட்டுமல்ல, ஒரு நல்ல மனிதரையே தமிழ்நாடு இழந்துவிட்டது, இன்னும் கொண்டாடப்பட வேண்டியவர் விஜயகாந்த் "என்று சிங்கம்புலி பேசியிருந்தார்.. அந்தவகையில், கேப்டன் பிரபாகரன் ரீரிலீஸ், மீண்டும் ஒரு மாற்றத்தை நிச்சயம் ஏற்படுத்தும்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications