விஜயகாந்த் எத்தனையோ நடிகர்களை உருவாக்கினாரு! ஆனால், அவர் மகன்களை உருவாக்க யாரும் இல்லை, விஜய பிரபாகரன் உருக்கம்
சென்னை: நடிகர் விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது பேசிய பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் கேப்டன் விஜயகாந்த் எத்தனையோ நடிகர்களை உருவாக்கினார். ஆனால், அவர் மகன்களை உருவாக்க யாரும் இல்லை என்று உருக்கமாக விஜய பிரபாகரன் பேசி இருக்கிறார்.
மறைந்த நடிகர் விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன் அரசியல் பிரமுகராகவும், இளைய மகன் சண்முக பாண்டியன் நடிகராகவும் இருக்கும் செய்தி எல்லோருக்கும் தெரிந்ததுதான். சமீபத்தில் தேமுதிக மாநில செயலாளராக விஜயபிரபாகரன் பதவியேற்று இருந்தார். அவர் பதவி ஏற்ற பிறகு முதல் பொதுக்கூட்டம் கூச்சங்காடு கைகாட்டியில் நடந்தது. அப்போது விஜய பிரபாகரன் பேசிய பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது.

அம்மா பற்றி பெருமிதம்
அதன் விஜய பிரபாகரன் இணையத்தில் வரும் ட்ரோல் மற்றும் வதந்தி செய்திகள் குறித்து யாரும் நம்ப வேண்டாம் என்று பேசி இருக்கிறார். செல்போனில் சுட சுட வரும் செய்திகளை பார்த்து யாரும் மனம் மாறிவிடக்கூடாது, சிந்திக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார். அதோடு கட்சிக்காக உழைத்ததால் தான் எனக்கு இந்த பதவி. விஜயகாந்த் மகனா நான் ஏன் அரசியலுக்கு வரணும்? நான் நினைச்சிருந்தா வெளிநாட்டில் செட்டில் ஆகி இருக்கலாம். ஆனால் எங்க அப்பா அம்மா என்னை அப்படி சொல்லி வளர்க்கல.

விஜயகாந்த் பற்றி மகன்
நான் நிச்சயம் ஜெயிப்பேன், எங்க அப்பா புதைக்கப்படவில்லை என்றும் பலகோடி மக்கள் இதயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். கேப்டன் உங்கள் சொத்து. நீங்கள் எனக்கு ஆதரவு கொடுக்கணும் 'கேட்பது என்னுடைய உரிமை... கொடுப்பது உங்களுடைய கடமை'. சிலர் அவதூறு பரப்புவாங்க மக்கள் உண்மை என்ன என்று சிந்திக்கணும். பிரேமலதா இல்லன்னா கேப்டன் இல்லை. சிங்கம் மாதிரி இருந்த என்னுடைய அப்பா நான்கு சுவற்றுக்குள்ள பத்து வருஷமா இருக்கும்போது எங்க அம்மா எப்படி பார்த்துக்கிட்டாங்கன்னு எங்களுக்கு தான் தெரியும்.
விஜய பிரபாகரன் வருத்தம்
எங்க அம்மா ஜான்சி ராணி தான். ஜெயலலிதாவுக்கு மக்கள் ஆதரவு கொடுத்தாங்க அதனால அவங்க ஜெயித்தாங்க. அதேபோல பிரேமலதாவுக்கும் நீங்கள் ஆதரவு கொடுக்கணும். தேமுதிக கட்சி எந்த ஜாதி மதம் இல்லாத கட்சி. பசின்னு வந்தா எல்லோருக்கும் சோறு போட்டவர்தான் கேப்டன். உங்கள் முன் நான் நடிகராக வரல. ஆனால் நடிகன் தான் ஆட்சியைப் பிடிக்கனும்னாலும் அதுக்கும் நான் தயாராகவே இருக்கிறேன். "கேப்டன் பல நடிகர்களை உருவாக்கினார். ஆனால் எந்த நடிகர்களும் கேப்டன் மகன்களை உருவாக்க யாரும் இல்லை" என்று கூறி இருக்கிறார். அதோடு வெயில் காலத்தில் எல்லோரும் உடம்பை கவனித்துக் கொள்ளுங்கள் என்றும் மக்களுக்கு அட்வைஸ் கொடுத்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications