நடிகர் விஜயகாந்த் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி.. மீண்டும் ரீ ரிலீஸ் ஆகும் ஹிட் திரைப்படங்கள்
சென்னை: தற்போது பல ஹிட்டான திரைப்படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் நடிகர் விஜயகாந்தின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி வெளியாகி இருக்கிறது. அதாவது விஜயகாந்த் நடிப்பில் வெளியான 2 மாஸான திரைப்படங்கள் இப்போது ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
தமிழ் சினிமாவில் மறக்க முடியாத நடிகர்களில் ஒருவர்தான் விஜயகாந்த். அவருடைய நடிப்பு வசனம் எல்லாமே அனல் பறக்கும். அவருடைய பிரத்யேகமாக சண்டைக் காட்சிகளுக்கு என்றே தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. ஒரு கால் மற்றும் கையை பயன்படுத்தி அவர் போடும் சண்டைகள் மற்றும் அவருடைய டான்ஸ் 80 மற்றும் 90'ஸ் கிட்ஸ் ஃபேவரைட்.

நடிகராக மட்டுமல்லாமல் அரசியல் பிரமுகராகவும் இருந்த விஜயகாந்த் பலருக்கும் செல்ல பிள்ளையாக இருந்த நிலையில் கடந்த 2023 டிசம்பர் மாதத்தில் உடல்நிலை குறைவால் காலமானார். 71 வயதில் விஜயகாந்த் இறந்தாலும் அவரை இன்றும் மக்கள் மறக்கவில்லை. அவருடைய மறைவு குறித்து பலரும் வருத்தங்களை பகிர்ந்து வருகிறார்கள்.
ரீ ரிலீஸ்
அதுபோல தமிழ் சினிமாவில் விஜயகாந்த் நடித்த பல ஹிட் திரைப்படங்கள் தேசிய உணர்வுகளை தூண்டும் வகையிலும், பெற்றோரை மதிக்க வைக்கும் வகையிலும், குடும்ப ஒற்றுமையை பேணி பாதுகாக்கும் வகையிலும் இருக்கும். விஜயகாந்த் திரைப்படங்கள் இப்போதும் டிவியில் ஒளிபரப்பானாலும் அதை முதல் தடவை பார்ப்பது போல பார்ப்பவர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள்.
ஹிட் திரைப்படம்
அதுபோல சமீபத்தில் ஒரு ட்ரெண்ட் உருவாகி இருக்கிறது. பல ஹிட்டான திரைப்படங்கள் மீண்டும் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் இப்போது நடிகர் விஜயகாந்தின் திரைப்படங்களும் ரீ ரிலீஸ் செய்யப்பட இருக்கிறது. கடந்த 1991 ஆம் ஆண்டு ஆர் கே செல்வமணி இயக்கத்தில் விஜயகாந்த் நடிப்பில் வெளியான கேப்டன் பிரபாகரன் திரைப்படம் பலருடைய பாராட்டைப் பெற்றது.
கேப்டன் பிரபாகரன் திரைப்படம்
அந்த திரைப்படம் விஜயகாந்த்தின் 100வது படமாக அமைந்திருந்தது. இந்த திரைப்படத்தில் மன்சூர் அலிகான், ரூபினி, சரத்குமார், ரம்யா கிருஷ்ணன், தலைவாசல் விஜய் உள்ளிட்ட பலர் நடித்தார்கள். இந்த திரைப்படத்தில் இளையராஜா இசையில் பாடல்கள் உருவாகி ஹிட் அடித்தது. இந்த திரைப்படம் வெளியாகி 34 வருடங்கள் நிறைவடைந்த நிலையில் இந்த திரைப்படத்தை 4k தரத்தில் ரீலீஸ் செய்வதற்கு பட குழு முடிவு செய்திருக்கிறது.
வல்லரசு திரைப்படம்
அதுபோல 2000 ஆண்டில் என் மகாராஜா இயக்கத்தில் வெளியான வல்லரசு திரைப்படமும் விஜயகாந்துக்கு பெரிய அளவில் பிரபலத்தை கொடுத்த திரைப்படம். இந்த திரைப்படம் வெளியாகி 25 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் அதை கொண்டாடும் வகையில் அந்த திரைப்படத்தையும் ரிலீஸ் செய்வதற்காக முடிவு செய்யப்பட்டிருக்கிறதாம். ஆனால் இந்த திரைப்படத்திற்காக ரீ ரிலீஸ் தேதி இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications