தாய்க்கும் பிள்ளைக்கும் இடையிலான பாசம் புரியாத ஜென்மங்கள் .. விஜயலட்சுமி ஆவேசம்

Subscribe to Oneindia Tamil

சென்னை : பெற்ற மகனுக்கு பாசமாக தான் கொடுத்த முத்தத்தை இந்த அளவிற்கு கொச்சையாக பார்ப்பதா என்று சில பேட் கமெண்ட்டுகளுக்கு நடிகை விஜயலட்சுமி பதிலடி கொடுத்துள்ளார்.

கருத்து சுதந்திரம் இருக்கிறது என்பதற்காக கண்டமேனிக்கு பேசலாமா என்றும் அவருக்கு ஆதரவாக பலரும் குரல் கொடுத்துள்ளனர்.

நாட்டுல எவ்வளவோ விஷயங்கள் கேவலமா நடந்துக்கிட்டு இருக்கு அதை எல்லாம் விட்டு விட்டு தனது மகனுக்கு தாயாக விஜயலட்சுமி முத்தம் கொடுத்ததைப் போய் தவறாக பார்ப்பதா என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

முதல் படத்திலேயே மனசுல பதிந்தவர்

முதல் படத்திலேயே மனசுல பதிந்தவர்

நடிகைகள் பலர் முதல் திரைப்படத்தில் டாப்பில் வந்தாலும், பிறகு வந்த இடம் தெரியாமல் மறைந்து விடுவார்கள் . ஆனால் முதல் திரைப்படத்திலேயே யார்ரா இது பக்கத்து வீட்டு பெண் போல இருக்கிறதே என்று சொல்லும் அளவிற்கு ரசிகர்களின் மனதில் பதிந்தவர்தான் விஜயலட்சுமி .அதுவும் சென்னை 28 என்னும் படத்தில் மூலமாக என்ட்ரி கொடுத்திருந்தாலும் இரண்டு சீசன்களிலு இவரே கலக்கியிருப்பார்.

நாயகி பாதியிலே மாறிவிட்டார்

நாயகி பாதியிலே மாறிவிட்டார்

திரைப்படத்தில் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்காததால் சீரியலில் தன்னுடைய கேரக்டருக்கு தகுந்த வாய்ப்பு கிடைத்ததால் ஓகே சொல்லிவிட்டார். அதுவும் சன் டிவியில் நாயகி சீரியலில் முதலில் இவர் தான் ஹீரோயினாக ஒப்பந்தம் ஆகியிருந்தார் .சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போது இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்ததால் சீரியலுக்கு டாட்டா சொல்லிவிட்டு பிக் பாஸுக்கு சென்றுவிட்டார் .

பிக்பாஸிலும் வரவேற்பு தான்

பிக்பாஸிலும் வரவேற்பு தான்

ஆனாலும் அந்த சீரியல் ரசிகர்களிடம் இவருக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்து இருந்தது. இவருடைய அசத்தலான கேரக்டர் காரணமாக இந்த சீரியலை தொடர்ந்து பார்த்து வந்தனர். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது சீசனில் வயல்ட் கார்ட் என்ட்ரி மூலம் நுழைந்தவர் .அந்த வீட்டிற்குள்ளும் தன்னுடைய கேரக்டரை நன்றாக காட்டி இருந்தார் .ஆனால் இவரால் கடைசி வரைக்கும் அந்த வீட்டிற்குள் இருக்க முடியவில்லை.

தனி முத்திரை

தனி முத்திரை

ஆனாலும் ரசிகர்களின் மனதில் தனக்கான இடத்தை பிடித்து விட்டு தான் வெளியே வந்திருக்கிறார். ஆனால் அதற்குப் பிறகு சீரியல்களில் தலைகாட்டாமல் இருக்கும் இவர் தனது குடும்பத்தோடு சந்தோஷமாக இருந்து வருகிறார். இவர் பிரபல இயக்குனர் அகத்தியனின் மகள் . இவருக்கு நிரஞ்சனி என்ற சகோதரியும் இருக்கிறார். அது மட்டுமல்லாமல் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தற்போது டைட்டிலை வின் பண்ணுன கனியும் இவருடைய சகோதரி தான் .

இன்ஸ்டா ரீல்ஸ்

இன்ஸ்டா ரீல்ஸ்

இவர்கள் மூவரும் வீட்டில் இருக்கும் நேரத்தில் அடிக்கடி ரீலஸ் வீடியோக்களையும் எடுத்து வெளியிட்டு வருவது மட்டுமல்லாமல் சில நேரங்களில் போட்டோசூட்டும் எடுத்து தங்களுடைய பாசத்தினை பலருக்கும் காட்டி வருகின்றனர் .அதுமட்டுமல்லாமல் வீட்டில் அடிக்கடி சமையல் செய்து தங்களுடைய யூடியூப் சேனல்களிலும் போஸ்ட் போட்டு வருகின்றனர். இவர் தனது பள்ளிப்பருவ தோழரான பெரோஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் .

க்யூட் மகன்

க்யூட் மகன்

திருமணத்திற்குப் பின்னர் இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது. இவருடைய கணவர் 'பண்டிகை' என்ற படத்தை இயக்கி இருக்கிறார். அவருடைய திருமண வாழ்க்கை சந்தோஷமாக போய்க் கொண்டிருக்கும் போது தன்னுடைய ஆசை மகனுடன் தற்போது சில போட்டோக்களை எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கிறார். இந்தப் போட்டோவை பார்த்ததும் தான் சில நெட்டிசன்களுக்கு வயிறு எரிந்து இருக்கிறது.

ஆசை மகனுக்கு அழகு முத்தம்

ஆசை மகனுக்கு அழகு முத்தம்

இவர் தன்னுடைய மகனுடன் உதட்டில் முத்தம் கொடுப்பதை பார்த்து நெகட்டிவ் கமெண்ட் போட்டிருக்கின்றனர். அதைப் பார்த்ததும் தனது சொந்த மகனை முத்தமிட்டது கூட கொச்சையாக பேசியதால் கடுப்பான இவர் ஓ...குழந்தைகிட்ட பண்ணவேண்டிய அட்டூழியங்கள்னு ஒரு fantasy list வச்சிருக்கியா..பரதேசி .இத பார்த்த உடனே பல்ப் எரியும். நீங்க எல்லாம் நேர்ல வந்து பேசுங்க டா .அழுக்கு ஜென்மங்கள் .இதுல அப்பாடக்கர் மாதிரி tweets. இது கூட சேர்ந்து டிஸ்கஸ் பண்ண இன்னொரு எச்ச .அடேய் என்று கடுப்பாக பதிவிட்டுள்ளார்.

குவியும் ஆதரவு

குவியும் ஆதரவு

சமீபத்தில்தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சனம் ஷெட்டியை தப்பான வார்த்தைகளால் பேசிய இளைஞர்களை காவல்துறை கைது செய்து இருக்கும் நேரத்தில் தற்போது இவரை பேசின நெட்டிசன்களுக்கும் தக்க பதிலடி கிடைக்கும் என விஜயலட்சுமியின் ரசிகர்களும் விஜயலட்சுமிக்கு ஆதரவாக கமெண்ட் போட்டு வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+