வெற்றிபெற்ற தருணத்தை பார்த்து கண்கலங்கிய விஜி...ஆறுதல் கூறும் ரசிகர்கள்
சென்னை: உறவினர்களுடன் அமர்ந்து தான் வெற்றி பெற்ற தருணத்தை பார்த்து விஜி கண்கலங்கி உள்ளார்.
பட்ட வேதனைகள் கண் முன்னே வந்து போனதா என்று ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.
விஜியின் வெற்றி பல ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்துள்ளது.

கண்கலங்கிய விஜி
சர்வைவர் நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடந்து முடிந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் யார் வெற்றி பெறுவார்கள் என்று ஆரம்பத்திலிருந்து ரசிகர்கள் அதிகமாக எதிர்பார்த்து வந்தனர். இந்த நிலையில் தற்போது வெற்றிக் கோப்பையை கைப்பற்றி இருப்பது விஜயலட்சுமி தான். இவருக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் ஆக இருந்துவருகிறது. விடாமுயற்சியினால் வெற்றி கோப்பையை பெற்றிருந்தாலும் அந்த தருணத்தை பார்த்து கண்கலங்கி உள்ளார்.

குழந்தைகளை கவர்ந்த சூப்பர் அம்மா
விஜயலட்சுமி பொதுவாக சினிமா நடிகையாக இருந்தாலும் ஒரு சினிமா குடும்பத்தில் பிறந்த ஒரு பெண்தான். இவர் சின்னத்திரை, வெள்ளித்திரை என அனைத்து அனைத்திலும் கலக்கியவர் தான். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதில் வெற்றி பெறாவிட்டாலும் அதற்கு பிறகு தன்னுடைய திறமையை எப்படியாவது நிரூபித்து விட வேண்டும் என்று துடித்துக் கொண்டிருந்தவர். அவர் சூப்பர் மாம் என்னும் ஒரு பட்டத்தை தட்டி குழந்தைகளின் ஃபேவரைட் அம்மாவாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

குறையாத விடாமுயற்சி
ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொள்வதில் விருப்பத்தில் இருக்கும் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் விட்ட இடத்தை எப்படியும் சர்வைவர் நிகழ்ச்சியில் பெற்றுவிட வேண்டும் என்றுதான் முழு முனைப்போடு செயல்பட்டுக் கொண்டிருந்தார். அதனால்தான் தன்னுடைய மொத்த திறமையையும் ஒவ்வொரு விளையாட்டுகளிலும் காட்டி கொண்டிருந்தார். இவருடைய போதாத காலம் இவர் சரணால் மூன்றாவது உலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனாலும் அங்கே சென்ற பிறகும் என்னுடைய தைரியத்தை விட மாட்டேன் என்று டாஸ்க்களால் ஜெயித்து மீண்டும் சர்வைவருக்கு வந்துவிட்டார்.

உணர்ச்சிவசப்பட்ட தருணம்
மீண்டும் சர்வைவருக்கு விஜயலட்சுமி வந்ததை பார்த்து சக போட்டியாளர்கள் மட்டுமல்லாமல் ரசிகர்களும் ஆடி போயிருந்தனர். இந்த நிலையில் கடைசி நாட்களில் விஜயலட்சுமிக்கு சக போட்டியாளர்கள் மன ரீதியாக பல பிரச்சனைகளையும், குழப்பங்களையும் கொடுத்துக் கொண்டிருந்தாலும் அனைத்தையும் தாண்டி தன்னுடைய வெற்றியில் கவனத்தை செலுத்தி அவரே வெற்றிக்கனியை பறித்து விட்டார். அவர் வெற்றி பெற்று வீட்டிற்கு வந்து விட்டாலும் நேற்றைய எபிசோட்டை வீட்டில் உள்ள அனைவரும் ஒன்றாக இருந்து பார்க்கும் போது இவரால் அந்த நினைவுகளை மறக்க முடியாமல் கண்கலங்கி உள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. இதை பார்த்ததும் ரசிகர்கள் பலர் இவருக்கு வாழ்த்துக்களையும் ஆறுதலையும் அளித்து வருகின்றனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications