விஜயசாந்தியின் கன்னத்தில் அறைந்த பாரதிராஜா.. அடுத்து நடந்தது என்ன? வாவ் "கல்லுக்குள் ஈரம்" பிளாஷ்பேக்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் சினிமாவில் தான் அறிமுகமானது எப்படி? பாரதிராஜா தன்னிடம் ஏன் கண்டிப்பு காட்டினார் என்பது குறித்தெல்லாம் பிரபல நடிகை விஜயசாந்தி தந்துள்ள பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது. அந்த பேட்டியில் தன்னுடைய பெற்றோர் பற்றியும் பல்வேறு தகவல்களை தந்துள்ளார்.

Aval Vikatan சேனலுக்கு விஜயசாந்தி சிறப்பு பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. அதில், அவரது திரைப்பயணம் பற்றி நிறைய விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.. அதில், பாரதி ராஜா படத்தில், அறிமுகமானது குறித்து விஜயசாந்தி சொன்னதாவது:

television vijayashanthi vijayasanti

"நான் வீட்டுக்கு ஒரே பொண்ணு.. பாசம் அதிகம் இருந்தது.. ஆனால், செல்லம் எதுவும் தரல.. எங்க வீட்டில் சின்ன வயசில் என்னுடைய அப்பா - அம்மா ரொம்ப கண்டிப்புடன் வளர்த்தாங்க..

பொத்தி பொத்தி வளர்த்தாங்க.. விளையாட விடல.. சுதந்திரம் இல்லை.. பிரன்ட்ஸ் வீட்டுக்குகூட போக கூடாது.. மிலிட்டரி சிஸ்டத்தில்தான் என்னை வளர்த்தாங்க.. டான்ஸ் கிளாஸ் அனுப்பினாங்க.. ஸ்கூல், வீடு, டான்ஸ் கிளாஸ்.. இதுதான் என்னுடைய சின்ன வயசு வாழ்க்கையாக இருந்தது. ஆனால், இதெல்லாம் எனக்கு பிற்காலத்தில் மிகவும் உதவியது.

சினிமா ஆர்வம்: சின்ன வயசில் எம்ஜிஆர் சார், சிவாஜி சார் படங்கள் என்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும். என் அப்பா முதல்ல சினிமாவை பார்த்துட்டு, நல்லா இருந்தால் மட்டுமே அந்த படங்களுக்கு என்னை கூட்டிட்டு போவார். என் நிறைய பழைய படங்கள் நான் பார்க்காமலேயே விட்டுட்டுடேன்.. அப்போ எனக்கு வருடத்துக்கு 17 படங்கள் நடித்து கொண்டிருந்தேன்.. ஒருநாளைக்கு 6 ஷிப்ட் இருக்கும். காரிலேயே மேக்கப், ஹேர்ஸ்டைல் செய்ய வேண்டியிருக்கும்.

வாகினி, ஏவிஎம் ஸ்டுடியோக்களில் டவல் ஒன்றை விரித்து தூங்கிவிடுவேன். ஷாட் ரெடியானதுமே என்னை எழுப்பிவிடுவாங்க.. இதுபோல பல வருடங்கள் நான் பிஸியாகவே இருந்தேன். அதனால்தான் 190 படங்களில் என்னால் நடிக்க முடிந்தது.

போட்டோக்கள்: 13, 14 வயதிலேயே சினிமா வாய்ப்பு வந்தது.. சினிமாவில் நான் மிகப்பெரிய ஸ்டாராக வரவேண்டும் என் அப்பா ஆசைப்பட்டார்.. ஸ்டுடியோ ஒன்றில் என்னை வைத்து போட்டோக்கள் எடுக்கப்பட்டது. அந்த நேரத்தில்தான், தன்னுடைய படத்தில் நடிக்க, பாரதிராஜா சார் ஹீரோயினை தேடிட்டு இருந்தார். ஒருநாள் காரில் பாரதிராஜா வந்து கொண்டிருந்தபோது, அவரது கார் திடீரென பஞ்சர் ஆகிவிட்டது. அந்த கார் சரிசெய்யும்வரை, அங்குள்ள போட்டோ ஸ்டுடியோவில் உட்கார சொல்லி உள்ளார்கள்.

அப்போதுதான் ஸ்டுடியோவிற்குள் நுழைந்தபோது, என்னுடைய போட்டோவை பார்த்துள்ளார்.. பொண்ணு நல்லா இருக்கு என்று சொல்லவும், போட்டோ ஷூட் எடுக்க அழைத்து சென்றார்கள்.. அதற்கு பிறகுதான் கல்லுக்குள் ஈரம் படத்தில் நடித்தேன். அதில் நடிக்கும்போது திடீர்னு கோபப்பட்ட பாரதிராஜா, என்னை கன்னத்திலேயே அடித்துவிட்டார். எனக்கு உடனே கோபம் வந்துவிட்டது.

பாரதிராஜா: நானும், அருணாவும் நடிக்கும்போது, அதில் ஏதோ தவறு உள்ளது என்று நினைத்து அடித்துவிட்டார்.. உண்மையிலேயே நான் எந்த தவறும் செய்யவில்லை. அதனால்தான் எனக்கு கோபம் வந்தது. அதனால் அழுதுகொண்டே கிளம்பி செல்ல போனேன். உடனே கேமராமேன் நிவாஸ் சார், அழக்கூடாது என்று என்னை சமாதானப்படுத்தினார்.. பாரதி ராஜாரும் சமாதானப்படுத்தி நடிக்க வைத்தார்..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+