புஸ்ஸி ஆனந்த், விஜயை "அப்படி"தான் ஏமாற்றுகிறார்! அந்த போட்டோ! வலம் வரும் SA சந்திரசேகர் பேட்டி
சென்னை: நடிகர் விஜய் தான் புதியதாக தொடங்கி இருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அறிமுகம் செய்திருக்கும் நிலையில் விஜய்யின் அப்பாவான எஸ்ஏ சந்திரசேகர் விஜயோடு இருக்கும் புஸ்ஸி ஆனந்த் பற்றி சில மாதங்களுக்கு முன்பு பேசிய வீடியோ இப்போது இணையத்தில் மீண்டும் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
இளைய தளபதி என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கி இருக்கும் நிலையில் இன்று அவர் தன்னுடைய கட்சி கொடியை அறிமுகம் செய்திருக்கிறார். அதோடு தன்னுடைய கட்சிக்கு கொடி பாடல் ஒன்றையும் வெளியிட்டு இருக்கிறார். இதனால் இணையத்தில் விஜய் பற்றிய பேச்சு தான் அதிகமாக இருக்கிறது. என்னதான் விஜய் தன்னுடைய சொந்த பணத்தில் கட்சி தொடங்கி, கட்சிக்கொடியை அறிமுகப்படுத்தி இருந்தாலும் வழக்கம் போல இதுவும் விமர்சனத்திற்கு உள்ளாக்கி வருகிறது.

கொடி அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சிக்கு விஜயின் பெற்றோரான எஸ்.ஏ சந்திரசேகர் மற்றும் ஷோபா தம்பதி வந்திருந்த நிலையில் அவர்களுக்கு முன்வரிசையில் இடம் கொடுக்கவில்லை என்ற ஒரு குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. விஜய் புஸ்ஸி ஆனந்துக்குதான் பெற்றோரை விட அதிகமான முக்கியத்துவம் கொடுக்கிறார் என்று அதிகமாக சர்ச்சைகள் எழுந்து வருகிறது.
இந்த நிலையில் அந்த புஸ்ஸி ஆனந்த் யார் என்று பார்க்கலாம். புஸ்ஸி ஆனந்த் புதுச்சேரி மாநில கவுரவ விஜய் மன்ற தலைவராக இருந்த நிலையில் கடந்த 2006 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் புதுச்சேரி முன்னேற்ற காங்கிரஸ் கட்சி சார்பில் புஸ்ஸி என்ற பகுதியில் போட்டியிட்டு அதில் அவர் எம்எல்ஏவாக வெற்றி பெற்று இரக்கிறார். அதற்கு பிறகு தான் இவர் புஸ்ஸி ஆனந்த் என்று அழைக்கப்படுகிறார்.
எம்எல்ஏவாக இருந்தாலும் விஜய் மன்ற தலைவராக நீடித்து வந்தார். பிறகு விஜயின் நம்பிக்கைக்கு உரியவராக மாறி இருந்தார். இதைத்தொடர்ந்து அவருக்கு அகில இந்திய விஜய் மக்கள் மன்ற பொறுப்பாளர் பதவியை விஜய் கொடுத்தார். அதற்குப் பிறகு விஜய்யுடைய மக்கள் இயக்க பணிகளை புஸ்ஸி ஆனந்த் தான் கவனித்து வந்தார். அந்த நிலையில் தான் எஸ்.ஏ சந்திரசேகரனின் ஆதரவாளர்கள் "நாளைய முதல்வரே", "வருங்கால முதல்வரே" என்று விஜய் குறித்து போஸ்டர் ஒட்டி இருந்த நிலையில் எஸ் எஸ் சந்திரசேகரனின் ஆதரவாளர்களை புஸ்ஸி ஆனந்த் கட்சிப் பொறுப்பில் இருந்து விளக்குவதாக அறிக்கை வெளியிட்டிருந்தார்.
அந்த நேரத்தில் தான் எஸ்.ஏ சந்திரசேகருக்கு புஸ்ஸி ஆனந்த் மீது வெறுப்பு ஏற்பட்டது. அப்போது வெளிப்படையாகவே தன்னுடைய மகனை சுற்றி கிரிமினல் இருப்பது விஜய்க்கே தெரியவில்லை என்று வருத்தமாக தெரிவித்து இருந்தார். அதே நேரத்தில் சில பேட்டிகளிலும் புஸ்ஸி ஆனந்த் குறித்து பேசி இருக்கிறார். அப்போது ஒரு பேட்டியில், விஜய் பெயரில் whatsapp குரூப் நிறைய இருக்கிறது. அதில் விஜய்யும் ஒரு குரூப்பில் இருக்கிறார்.
அந்த குரூப்பில் ரெண்டு பேரு அட்மின் ஆக இருக்கிறாங்க... ஆனால் புஸ்ஸி ஆனந்த் அரசியல்வாதிகளை விட மோசமாக யோசித்து, மன்றத்தின் வெளியே இருக்கும் ஒரு பெஞ்சில் படுத்துக்கொண்டு அங்கிருக்கும் ஒருவரை கூப்பிட்டு தன்னை போட்டோ எடுக்க சொல்லிவிடுகிறார். அவர் அதை போட்டோ எடுத்ததும் அந்த போட்டோவை விஜய் இருக்கும் வாட்ஸ் அப் குரூப்பில் போட சொல்லி விடுகிறார்.
அந்த போட்டோவுக்கு 100 பேரு லைக் போட சொல்லி, அதுக்கு பல பேரை கமெண்ட்டும் போட சொல்கிறார். அப்போ இதையெல்லாம் பார்த்து விஜய் உண்மை என்று நம்புகிறார். ஐயோ நமக்காக இவ்வளவு வேலைகளை செய்து பென்சில் படுத்து தூங்குகிறாரே என்று அவர் மீது விஜய்க்கு பாசம் ஏற்படுகிறது. இப்படித்தான் விஜயை புஸ்ஸி ஆனந்த் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார் என்று அந்த பேட்டியில் எஸ்ஏ சந்திரசேகர் பேசியிருக்கும் நிலையில் அந்த வீடியோக்களை இப்போது இணையத்தில் அதிகமானோர் பகிர்ந்து வருகிறார்கள்.
-
டைம் ட்ராவல் செய்த விஜய்? பெரம்பூர் மனுவில் 52 வயது.. திருச்சி வேட்புமனுவில் 51 வயது! வெரி ராங் ப்ரோ -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
இளைஞர்கள் ஆதரவு.. விஜய்யின் அரசியல் வருகையை எப்படி பார்க்கிறீங்க? ஆ.ராசா சொன்ன கருத்து! -
கொங்கு மண்டல பிரச்சாரத்தின் போது செங்கோட்டையன் வீட்டில் தங்கும் விஜய்.. புலம்பும் ஆதவ் அர்ஜுனா! -
திருச்சியில் விஜய் பேசிக்கொண்டிருக்கும்போதே சரிந்த பெண்கள்! பரப்புரை கூட்டத்தில் நடத்த சம்பவம்! -
போகிற இடமெல்லாம்.. அஜித் போட்டோவை தூக்கிட்டு போகும் எடப்பாடி.. விஜய்க்கு கவுண்டரா? ஆனால்...! -
Vijay: உங்கள் விஜய்.. நா வரேன்.. விசிலடிக்க ரெடியா? தவெகவின் தேர்தல் பிரச்சார பாடல் வெளியீடு! -
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம் -
ஷாக்! விஜய் வேட்புமனுவிலேயே செய்த பெரிய பிழை! திருச்சி கிழக்கு, பெரம்பூரில் நிராகரிக்கப்பட வாய்ப்பு? -
ஆதவ் அர்ஜுனா கார் மோதி போலீஸ்காரர் கால் முறிந்தது.. திருச்சி விஜய் பிரச்சாரத்தில் அதிர்ச்சி -
‘ஜனநாயகன்’ டிக்கெட்டை அதிக விலைக்கு விற்று மோசடி செய்தவர் தவெக வேட்பாளரா? சொந்த கட்சியினரே எதிர்ப்பு -
அந்த சம்பவத்தால் விஜய் அப்பாவிடம் அழுதாரு.. கோபத்தில் SAC செய்த சம்பவம்! நான் கூடவே இருந்தேன்! பிரபலம் ஓபன்












Click it and Unblock the Notifications