சிவாஜி தாத்தா இறப்புக்கு நான் வரல! காரணம் இதுதான்! கடைசியாக சொன்ன வார்த்தை.. தாங்க முடியாத வலி! விக்ரம் பிரபு உருக்கம்
சென்னை: நடிகர் சிவாஜி கணேசனின் மகன் பிரபுவின் மகனான விக்ரம் பிரபு சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்டார். அப்போது தன்னுடைய தாத்தா சிவாஜி கணேசன் மறைவுக்கு தான் வராதது குறித்து கண்கலங்க பேசி இருந்தார். தன்னுடைய தாத்தா தன்னிடம் கடைசியாக சொன்ன வார்த்தைகள் குறித்தும் உருக்கமாக பகிர்ந்து இருக்கிறார்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நாடக நடிகராக இருந்து தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமாகி தொடர்ந்து பல முன்னணி இயக்குனர்களுடன் இணைந்து வெற்றி படங்களை கொடுத்திருந்தார். நடிப்புக்கு இலக்கணம், நடிப்பு பல்கலைக்கழகம் என பல பட்டப் பெயரை பெற்றுள்ள சிவாஜி கணேசன் தமிழ் சினிமாவின் அடையாளமாக இப்ப வரைக்கும் பலராலும் பாராட்டப்பட்டு கொண்டிருக்கிறார். சிவாஜி கணேசனின் வசன உச்சரிப்புகள் மற்றும் உடல் மொழி அவருக்கே உரித்தான தனி சிறப்பு.

பிரபு நடித்த திரைப்படங்கள்
சிவாஜி கணேசன் புகழின் உச்சத்தில் இருக்கும்போதே அவருடைய மகன் பிரபு அப்பாவை போலவே தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அந்த நேரத்தில் பிரபு கதாநாயகனாக நடித்த பல திரைப்படங்கள் அவருக்கு வெற்றியை கொடுத்தது. புகழின் உச்சத்தில் அவர் நடித்துக் கொண்டிருக்கும் போதே நடிகர் கமல், ரஜினி போன்றோருடன் இணைந்து நடித்திருந்தார். விஜயகாந்த் எப்படி பல நடிகர்களுடன் இணைந்து நடித்து பிரபலமடைய வைத்தாரோ அதேபோல பிரபுவின் படத்திலும் பல இளம் நடிகர்கள் நடித்து பிரபலம் அடைந்திருக்கிறார்கள்.
லவ் மேரேஜ் திரைப்படம்
பிரபுவை போலவே அவருடைய மகனும் சினிமாவில் அறிமுகமாகி பலரையும் வியக்க வைத்தார். கும்கி படம் பிரபுவின் மகன் விக்ரம் பிரபுவுக்கு பெரிய அடையாளத்தை கொடுத்தது. பல வருடங்களாக அந்தத் திரைப்படம் உருவாக்கப்பட்டு இருந்தாலும் வெளியான பிறகு பெரிய அளவில் வெற்றியடைந்தது. சிவாஜிக்கு பிரபு, ராம்குமார் என்ற இரண்டு மகன்கள் ராம்குமாரும் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இது ஒரு பக்கம் இருக்க இப்போது விக்ரம் பிரபு நடிப்பில் லவ் மேரேஜ் படம் வெளியாகிறது.
விக்ரம் பிரபு திருமணம்
இந்த படத்தின் ப்ரோமோஷனில் விக்ரம் பிரபு பேசிய பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது. பிஹைன் வுட்ஸ் சேனலுக்கு விக்ரம் பிரபு கொடுத்த பேட்டியில், எனக்கு 21 வயதில் திருமணம் நடைபெற்றது. என்னுடைய மனைவிக்கும் அதே வயது தான். திருமணத்திற்கு பிறகு தான் இருவரும் ஒன்றாக வளர தொடங்கினோம். நான் இப்போது இந்த நிலையில் இருக்க என்னுடைய மனைவிதான் காரணம்.
தாத்தாவின் இறப்பு
அதுபோல நான் தாத்தாவுடன் அதிகமாக பழகி இருக்கிறேன். அதை பார்க்கும் போதெல்லாம் என்னுடைய அப்பா எங்களுக்கு கிடைக்காத பாக்கியம் உனக்கு கிடைத்திருக்கிறது என்று சொல்லுவாரு. நாங்க எங்க தாத்தா கூட இப்படி பழகியது இல்லை என்று சொல்வாரு. ஆனால் தாத்தா இறந்தபோது என்னால் வர முடியவில்லை. அப்போது நான் படிப்பிற்காக யூ எஸ் சென்றிருந்தேன். அந்த சமயத்தில் தான் தாத்தா இறந்துவிட்டார்.
சிவாஜி கணேசன் பேசிய கடைசி வார்த்தை
நான் அங்கிருந்து வருவதற்குள் இங்கு எல்லாம் முடிந்துவிடும் என்று சொன்னதால் என்னால் வர முடியவில்லை. அது இப்பவரைக்கும் என்னால் தாங்க முடியாத வலியாக இருக்கிறது. தாத்தா கடைசியாக ஹாஸ்பிடலில் இருக்கும் போது என்னிடம் போனில் பேசினார். அப்போது என்னிடம் "நீ இன்னும் இந்தியனா தான் இருக்கியா? இல்ல அமெரிக்கனா மாறிட்டியான்னு கேட்டாரு" இதுதான் அவர் என்னிடம் கடைசியாக பேசின வார்த்தை என்று அந்த பேட்டியில் பேசும்போதே விக்ரம் பிரபு எமோஷனலாகி இருக்கிறார்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications