என்ன வாழ்க்கை! மீண்டும் மீண்டும் பிரச்சனை? ரொம்ப கஷ்டமா இருக்கு! நொந்து பேசிய நடிகர் விக்ரம்
சென்னை: இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் நடிகர் விக்ரம், எஸ் ஜே.சூர்யா, துஷாரா உட்பட பலர் நடிப்பில் வீர தீர சூரன் பாகம் 2 திரைப்படம் கடந்த வாரத்தில் வெளியானது இந்த திரைப்படம் வெளியானதை தொடர்ந்து நடிகர் விக்ரம் இன்று தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் வருத்தமாக பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் விக்ரம் தான் நடிக்கும் திரைப்படங்களுக்கு அதிகமாக ரிஸ்க் எடுத்து நடிக்கக்கூடிய நடிகர் என்பது எல்லோருக்குமே தெரிந்த கதை தான். ஒரு படத்திற்கும் பல வருடங்களாக தன்னுடைய உருவத்தையும், உடலையும் வருத்தி கஷ்டப்பட்டு நடிக்கக்கூடிய விக்ரமுக்கு சில வருடங்களாகவே வெற்றி வாய்ப்பு என்பது எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது. இவருக்கு மட்டும் ஏன் இந்த நிலைமை என்பது ரசிகர்களே புலம்பும் கதையாக இருக்கிறது.

தள்ளிப்போன ரிலீஸ்
இந்த நிலையில் தான் கடந்த வாரத்தில் அவர் நடிப்பில் வெளியான வீர தீர சூரன் திரைப்படம் வெளியானது. ஆனாலும் அந்த திரைப்படம் ரிலீஸ் ஆவதில் கடைசி நேரத்தில் பிரச்சனை ஏற்பட்டது. மார்ச் 27ஆம் தேதி திரைப்படம் வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில் கடைசி சமயத்தில் சிக்கல்கள் இருந்ததால் ரிலீஸ் தாமதம் ஆகி மாலை தான் படம் வெளியானது.
வருத்தமான வீடியோ
திரைப்படம் வெளியான பிறகு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த நிலையில் இதுகுறித்து விக்ரம் உருக்கமாக ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அதில், ஒரே ஒரு வாழ்க்கை அதை வரலாறா வாழ்ந்திடமுன்னு டயலாக் சொல்லி இருப்பேன். ஆனால் இந்த வாழ்க்கை இருக்கே... அப்பா எப்போதும் ஏதாவது பிரச்சனை வந்து தூக்கி வீசுது. நிறைய பிரச்சனைகளை சந்திக்க வேண்டியது இருக்கிறது.
கடைசி நேர பிரச்சனை
இப்போ கூட வீர தீர சூரன் பட ரிலீஸ் பிரச்சனை. படம் ரிலீஸ் ஆவதற்கு முன்னாடி படம் பார்த்தவர்கள் எல்லாம் படம் சூப்பரா இருக்கு, வித்தியாசமான பயங்கரமான ஆக்சன் படமா இருக்கு, பெரிய மெகா ஹிட் ஆகும், இந்த வருஷத்தோட மிகப்பெரிய படம் என்று பாராட்டுனாங்க. ஆனால் திடீர்னு உயர்நீதிமன்றம் படம் நான்கு வாரத்திற்கு ரிலீஸ் ஆக தடை விதித்தது கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது.
விக்ரமின் ஆசை
என்னை பொறுத்த வரைக்கும் இந்த படம் எப்படியாவது நம்முடைய ரசிகர்களை போய் சேர வேண்டும் என்று நினைத்தேன். ஏனெனில் இந்த படத்திற்கு அவ்வளவு முயற்சிகளை நாங்கள் எடுத்து இருக்கிறோம். உழைப்பை போட்டிருக்கிறோம். படத்தில் நடித்தவர்கள், தயாரிப்பாளர் என அனைவரும் உழைப்பும் இதில் இருக்கிறது. ரொம்ப நாளைக்கு பிறகு என்னுடைய ரசிகர்களுக்காக ஏதாவது பண்ண வேண்டும் என்று எண்ணி நடித்தேன்.
அதிகமாக ரிஸ்க்
புதுசா ஏதாவது முயற்சி செய்யலாமே என்று முயற்சி செய்து எடுத்த படம். ஆனால் அது வராத பட்சத்தில் மிகவும் கஷ்டமாக இருந்தது. அதனால் எல்லாம் யோசித்து ஏதாவது பண்ண வேண்டும், சினிமாவிற்கு நான் எது வேண்டுமானாலும் பண்ண தயாராக இருக்கிறேன் என அனைவருக்கும் தெரியும். இதெல்லாம் ஒரு மேட்டரா என்று சொல்லி ஏதோ பண்ணி இந்த படம் வெளியே வந்தது.

பலருடைய உழைப்பு
முதல் இரண்டு ஷோ ரிலீஸ் ஆகாமல் மாலையில் படம் ரிலீஸ் ஆனது. முதல் ஷோ ரிலீஸ் ஆகல என்றாலே அந்த படம் முடிஞ்சதுன்ன சொல்லுவாங்க. ரொம்ப கஷ்டமா இருந்தது ஆனால் மாலையில் ரிலீஸான போது ரசிகர்கள் ஆதரவு கொடுத்து படத்தை பார்த்தாங்க. ரசிகர்கள், குடும்பங்கள் என எல்லோரும் நல்லா பாராட்டுனாங்க. படத்திற்கு கொஞ்சம் கொஞ்சமாக நல்ல வரவேற்பு கிடைக்க ஆரம்பிச்சது.
எல்லோருக்கும் நன்றி
இப்போ படம் வெற்றியை நோக்கி நல்லபடியாக ஓடிக்கொண்டிருக்கிறது. மனசுக்கு சந்தோசமா இருக்கு. இது உங்களுக்காக பண்ணியபடம். படத்தை பார்த்த எல்லோருக்கும் நன்றி. பாக்காதவங்க நிச்சயம் பார்ப்பீங்க என்று நம்புகிறேன் என்று நெகிழ்ச்சியாக பேசி இருக்கிறார்.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications