Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மாறி மாறி தாலி கட்டி, ஆசிர்வாதம் வாங்கிய சீரியல் நடிகைகள்.. இதெல்லாம் நல்லாவா இருக்கு? புலம்பும் 90ஸ் கிட்ஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான விக்ரம் வேதா சீரியல் மூலம் பிரபலமான நடிகை அஸ்வதி இன்னொரு சீரியல் நடிகையுடன் தாலி கட்டி கொள்வது போல வீடியோ ஒன்றை பகிர்ந்து இருக்கிறார். அதில் சீரியல் நடிகைகள் இருவரும் மாறி மாறி தாலி கட்டிக் கொண்டு இருவரும் மாறி மாறி காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கி கொள்கிறார்கள். இந்த வீடியோவை இணையத்தில் பலர் ட்ரோல் செய்து கொண்டிருக்கிறார்கள்.

சின்னத்திரை, வெள்ளித்திரை பிரபலங்கள் பலர் அடுத்தடுத்து திருமண புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை இன்ப அதிர்ச்சியை அடைய வைத்திருக்கின்றார்கள். விஜய் டிவியில் பிரபலமான பிரியங்காவின் இரண்டாவது திருமணம் யாரும் எதிர்பாக்காத நேரத்தில் நடந்தது. அதுவரைக்கும் எந்த இடத்திலும் பிரியங்கா தன்னுடைய திருமணத்தை அறிவிக்காமல் இருந்த நிலையில் திடீரென்று தன்னுடைய திருமண புகைப்படங்களை பகிர்ந்து இருந்தார்.

Vijay TV Serial Actresses

எளிமையான திருமணம்

அதிலும் அவருடைய திருமணத்தில் ஒரு சில நண்பர்கள் மற்றும் உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். பிரியங்காவை தொடர்ந்து பாவனி மற்றும் அமீர் திருமணம் செய்து கொண்டனர். அது போல இன்னும் ஒரு சில சீரியல் பிரபலங்களும் திடீர் திருமணம் செய்து இருக்கிறார்கள். இந்த நிலையில் தற்போது ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சீரியல் நடிகைகள் திருமணம்

அந்த வீடியோவில் இரண்டு சீரியல் நடிகைகள் மாறி மாறி தாலி கட்டி கொள்கிறார்கள். இதுதான் இப்போது பேசும் பொருளாக மாறி இருக்கிறது. அதில் ஒரு நடிகை தமிழ் சீரியல் ரசிகர்களுக்கு பிரபலமானவர்தான். அதாவது விஜய் டிவியில் ஒளிபரப்பான விக்ரம் வேதா சீரியலின் மூலம் பிரபலமடைந்த நடிகை அஸ்வதி அக்னிஹோத்ரி தான்.

விக்ரம் வேதா சீரியல்

நடிகை பிரியா பவானி சங்கர் மற்றும் அமித் பார்கவ் நடித்த கல்யாண முதல் காதல் வரை சீரியலில் ரீமேக் தான் விக்ரம் வேதா என்ற பெயரில் எடுக்கப்பட்டது. இந்த சீரியலில் வேதா கேரக்டரில் அஸ்வதி நடித்திருந்தார். இவருக்கென்று அதிகமான ரசிகர்கள் உண்டு. சோசியல் மீடியாவிலும் பயங்கர ஆக்டிவாக இருக்கும் இவர் விக்ரம் வேதா சீரியல் முடிவடைந்ததும் சன் டிவியில் மலர் போன்ற சீரியலில் நடித்திருக்கிறார்.

கல்யாண கோலத்தில் நடிகைகள்

அதேபோல தமிழில் மட்டுமல்லாமல் மலையாள சீரியல்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் தான் மலையாள சீரியல் நடிகை ஒருவரோடு தனக்கு திருமணம் முடிந்தது போன்ற வீடியோவை பகிர்ந்திருக்கிறார். அது ஒரு பெரிய மண்டபம் போல இருக்கிறது. அந்த மண்டபத்தில் அஸ்வதி மற்றொரு சீரியல் நடிகைக்கு தாலி கட்டும் காட்சி இருக்கிறது. அதேபோல மற்ற நடிகை அஸ்வதிக்கு தாலி கட்டுகிறார்.

ரசிகர்களின் வருத்தம்

பிறகு இருவரும் புன்னகையுடன் மாறிமாறி காலில் விழுந்து ஆசிர்வாதமும் வாங்கிக் கொள்கிறார்கள். கல்யாணக் கோலத்தில் இவர்கள் இருவரும் இருக்கும் இந்த வீடியோ இணையத்தில் பேசும் பொருளாக ஆக மாறி இருக்கிறது. இதை பார்க்கும் பல 90ஸ் கிட்ஸ்கள் இப்படி பெண்களே பெண்களை திருமணம் செய்து கொண்டால் எங்க நிலைமை என்ன ஆகும்? நாங்கள் 34, 35 வயது கடந்து விட்டோம் இன்னும் எங்களுக்கு திருமணம் நடக்கவில்லை நீங்கள் ஏமா இப்படி பண்ணுறீங்க என்று கமெண்ட் கொடுத்திருக்கிறார்கள்.

நடிகை அஸ்வதி பதிவு

இன்னும் ஒரு சிலர் இது விளம்பர சூட்டிங்கா? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்கள். இன்னும் ஒரு சிலர் இது சீரியல் காட்சியாக இருக்கலாம் ஒரே மண்டபத்தில் இரண்டு ஜோடிக்கு திருமணம் நடப்பது போன்று காட்சிகள் இருக்கலாம். அதனால் நடிகைகளே அவர்களுக்கு மாறி மாறி தாலி கட்டிக் கொள்கிறார்கள் என்று விளக்கம் கொடுத்திருக்கிறார்கள். ஆனாலும் இது குறித்து அஸ்வதி கம் ஆன் "come on" என்ற ஒரே வார்த்தை மட்டும்தான் பகிர்ந்து இருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+